top of page
1. Allah.jpg
2. Al Ilah.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

 

💠 பாகம் 2

🌷 அல்லாஹ்- الله

🌷 அல்இலாஹ் - الاله

🌹 அல்லாஹ் الله என்ற பெயர் குர்ஆனில் 2200 தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

💖 அல்லாஹ் என்ற பெயரின் சிறப்பு:

☘️ அல்லாஹ்வின் மற்ற எல்லா பெயர்களும் இந்தப் பெயருக்காகவந்தது.

🍃 உதாரணமாக

🍁அல்லாஹ்வுடையபெயர்தான்- அர்ரஹ்மான்.

🍁அல்லாஹ்வுடைய பெயர்தான் -அர்ரஹீம்.

🍁 எனவே ஏனைய பெயர்கள் அனைத்தும் இதனை அலங்கரிக்க வந்தது.

☘️ (அர்ரஹ்மான்,அர்ரஹீம்...)  ஏனைய  பெயர்களின் கருத்துக்கள் அனைத்தும், இந்த அல்லாஹ் என்ற பெயருக்குள் அடங்கிவிடுகிறது.

☘️ எப்பொழுதுமே ال ( அல் )உடன் தான் இருக்கும். உச்சரிக்கும் போதும் அப்படியேதான் உச்சரிக்கிறோம் அல்லாஹ் என்று எந்த சந்தர்ப்பத்திலும் ال (அல்) நீங்காது.

☘️ திக்ருகளில் அல்லாஹ் என்ற பெயர் பொதிந்திருக்கிறது

👉 சுபஹானல்லாஹ்

👉 அல்ஹம்துலில்லாஹ்

👉 அல்லாஹூ அக்பர்

👉 லாஇலாஹ இல்லல்லாஹ்

 

💓 அல்லாஹ் என்ற பெயர் கூறப்பட்டால் மூமின்களின் உள்ளம் நடுங்கும்💓

🌷انَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ ‌‏ 

🌷உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

📕 (அல்குர்ஆன் 8:2)

☘️ அல்லாஹ் الله என்ற சொல் அல்இலாஹ் 'لاله' என்ற சொல்லிலிருந்து உருவானதாகும்.

🌹அதனால்தான் இமாம்கள், அல்லாஹ் என்ற பெயரோடு அல்இலாஹ்- வையும் குறிப்பிடுகிறார்கள்.

🌷 அல்இலாஹ்- வணங்கப்படுபவன்

🌹 அல்இலாஹ் என்பதின் பொருளை  பற்றி இப்னு அப்பாஸ்( ரலி) அவர்கள் கூறுவதாவது;

"அனைத்து படைப்புகளும் அவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதை குறிக்கக்கூடிய சொல்லாகும்."

🌸 அல்லாஹ், அல்இலாஹ்- வணங்கபடத் தகுதியானவன்.

🤲 எனவே இந்த பெயர்களை சரியாக புரிந்து அதனை மனனம் செய்து அமல் செய்திட அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக 🤲.

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page