top of page
10. Al Musawwir.jpg
11. Al Baari.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

 

💠 பாகம் 7

🌷البارئ➖🌷தோற்றுவிப்பவன்

 🌷المصور➖ 🌷உருவம் அமைப்பவன்

🌸அல்லாஹ் தன் திருமறையில் தன்னை பற்றி கூறுகிறான்:

☘️هوَ ٱللَّهُ ٱلۡخَٰلِقُ ٱلۡبَارِئُ ٱلۡمُصَوِّرُۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ يُسَبِّحُ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

☘️அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

📕 (அல்குர்ஆன் 59:24)

👆🏼இந்த ஆயத்தில் அல் காலிக் (الخالق) என்ற பெயரும் சேர்ந்து வருகிறது.

💙'அல் பாரி' என்றால் 'தோற்றுவிப்பவன்'.

💙அதாவது இல்லமையிலிருந்து ஒன்றை தோற்றுவிக்கிறவன்.

❤️'அல் முஸவ்விர்' என்றால் 'உருவமைப்பவன்'.

📌இமாம் இப்னு கஸீர் (ரஹி) அவர்கள் கூறும் (அல்குர்ஆன் 59:24) ஆயத்தின் விளக்கம்:

 💙அல்லாஹ் அல்ஃகாலிக் , அல்பாரி, அல்முஸவ்விர் என்ற இந்த மூன்று பெயர்களை இதில் குறிப்பிடுகிறான்.

🔅'ஃகல்க்' என்றால் நிர்ணயித்தல்.

🔅'பர்' என்றால் நிர்ணயித்ததை நிறைவேற்றுதல்.

🔅'தஸ்வீர்' என்றால் அதை வடிவமைப்பது.

💙அல்லாஹ் தான் ஒரு படைப்பு எப்படி உருவாக வேண்டும் என்று வடிவமைத்து, அந்த படைப்பை இல்லாமையிலிருந்து தோற்றுவித்து, அதற்கான சரியான வடிவம் அமைக்கிறான் என்பதை இந்த பெயர்கள் நமக்கு உணர்த்துகிறது.

💙அல்லாஹுதஆலா ஒரு படைப்பை  படைக்கின்ற போது அது மிக அழகிய வடிவில் படைக்கிறான் என்பதை  அல்குர்ஆனில் நமக்கு அல்லாஹ் அடையாளப்படுத்து் கிறான்.

💙அல்லாஹ் படைப்பவன், இல்லமையிலிறுந்து ஒன்று தோற்றுவிப்பவன், அதை உறுவமைப்பவன், இங்கே இந்த மூன்று விஷயங்களிலும் அல்லாஹ் ஒருமைபடுத்தப்பட வேண்டியவனாக இருக்கிறான்.

💙படைத்தலில் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு நிகராக வேறு யாராலும் உருவாக்க முடியாது.

💙இல்லமையிலிருந்து தோற்றுவிப்பது என்பதிலும் அல்லாஹ்க்கு   நிகராக வேறு யாராலும் தோற்றுவிப்பது முடியாது 

💙உருவமைப்பதிலும் அல்லாஹ்க்கு நிகராக வேறு யாராலும் உருவ மைப்பது முடியாது.

📌எனவே தான் இந்த உருவமைப்பது பொறுத்தவரையில் யாராவது அல்லாஹ் உடைய படைப்பை போன்று ஒன்றை தன்னுடைய கரங்களால் உருவமைக்க வந்தால் அவர் பற்றி மிக கடினமான எச்சரிக்கையை நபி ﷺ அவர்கள் விடுதிருப்பதை பார்க்கின்றோம்.

💝மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்த உருவப் படங்களை வரைகிறவர்களும் அடங்குவர்' என்றார்கள்.

📕(ஸஹீஹ் புகாரி : 6109)

📕(முஸ்லிம்)

💝நள்ர் இப்னு அனஸ் இப்னு மாலிக்(ரஹ்) அறிவித்தார் 

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இருந்தேன். அவர்களிடம் மக்கள் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்க) கேட்கப்படாத வரை நபி ﷺ அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ்(ரலி) (எதையும்) கூற மாட்டார்கள். 

அப்போது (ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில்) இப்னு அப்பாஸ்(ரலி), 'உலகில் ஓர் உருவப் படத்தை வரைகிறவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது' என்று முஹம்மத் ﷺ அவர்கள் சொல்ல கேட்டேன்' எனக் கூறினார்கள்.

📕 (ஸஹீஹ் புகாரி: 5963)

❌இந்த உலகத்தில் உருவங்களை வடிவ மைப்பவர்கள், உருவங்களை வரைபவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

❌ஃபோட்டோ எடுப்பதை கூடுமா கூடாதா என்பதை பொறுத்தவரையில் அறிஞர்களிடதில் கருத்து வேறுபாடு இருக்கின்றது.

அதிகமான அறிஞர்கள் கூடாது என்று சொன்னபோதிலும், ஒரு சில அறிஞர்கள் அது உருவம் அமைப்பது என்ற நிலைக்குள் வராது. இருக்கிற உருவத்தை பிரதி செய்வதாக அமைகிறது.

📍அது தேவைகளுக்கும், அவசியமான சூழ்நிலைகளுக்கும் கூடும் என்கிற கருத்தை சொல்கிறார்கள்.

❌🚫ஆனால் தன்னுடைய கரங்களால் ஒரு உருவத்தை வடிவமைப்பது அல்லது உருவத்தை வரைவது என்பது எச்சரிக்கைக்கு உரிய குற்றம் என்பது எல்லா அறிஞர்களின் கருத்தாகும்.

🎯எனவே அல்லாஹ் 'அல் பாரி', 'அல் முஸவ்விர்' என்று அறியக்கூடிய நாம் இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

🤲எல்லாம் வல்ல அல்லாஹுத்த ஆலா நம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page