top of page
66. Al Mubeen.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம்  44

☔அல்லாஹ்வை சரியான முறையில் அறிந்து கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

☔அல்லாஹ்வை சரியாக அறியாமல் இந்த உலகத்தில் வாழ்ந்து மரணித்தவர் உண்மையிலேயே கை சேதப்பட்டவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

🌷அல்முபீன் (المبين) ➖தெளிவுபடுத்தக் கூடியவன்

📖அல்முபீன் என்ற பெயர் அல்குர்ஆனில் :

💎يَوْمَٮِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَـقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ الْمُبِيْنُ‏

💎அந்நாளில் அவர்களுக்குரிய (செயல்களுக்கு) உண்மையான கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்,  நிச்சயமாக அல்லாஹ் -அவனே (கணக்குகளை நீதமாக வைத்து அவற்றை) வெளியாக்கிவிடக்கூடிய உண்மையாளன் என்பதை அவர்கள் அறிந்தும் கொள்வார்கள்.

📕 (அல்குர்ஆன் 24:25)

🌹அல்முபீன் என்பதன் நேரடியான அர்த்தம் தெளிவுபடுத்தக் கூடியவன்.

🌹அல்லாஹ் தன்னுடைய அடியார்களை படைத்து அவர்களுக்கு நேர்வழியையும், வழிகேட்டையும் தெளிவுபடுத்தி இருகிறான், எனவே, அல்லாஹ் அல்முபீனாக இருக்கிறான்.

🌹மனிதர்களை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய வழி எது என்பதையும், நரகத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய வழி எது என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தி இருகிறான்.

🌹நபிமார்களையும், ரசூல் மார்களையும் அனுப்பி வைத்து அல்லாஹ் இவை அனைத்தையும் தெளிவுபடுத்தி இருகிறான்.

🌹குறிப்பாக இறுதித் தூதர் நபி ﷺ அவர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :

💎اَوَلَمْ يَتَفَكَّرُوْا‌ ٚ  مَا   بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍ‌ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ‏ 

💎அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.

📕 (அல்குர்ஆன் 7:184)

🌹👆அல்லாஹ், சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய காரியங்கள் எது என்பதை தெளிவு படுத்துவதற்காக தன்னுடைய தூதரை அனுப்பியதனால், அந்தத் தூதரையும் அல்லாஹ் முபீன் என்று சொல்கிறான்.

💎وَقُلْ اِنِّىْۤ اَنَا النَّذِيْرُ الْمُبِيْنُ‌‏ 

💎“பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக; 📕 (அல்குர்ஆன் 15:89)

🌹👆நபி ﷺ அவர்களை எச்சரிக்கை செய்யக் கூடியவனாகவும், தெளிவுபடுத்தக் கூடியவனாகவும் நான் இருக்கிறேன் என்று கூறும் படி அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.

🌹நபி ﷺ அவர்கள் அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவு படுத்தினார்கள்.

🌹உலகம் அழியும் வரைக்கும் நபி ﷺ அவர்களுடைய அந்தத் தெளிவுபடுத்துதல் மக்கள் அனைவருக்கும் போதுமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது.

🌹அல்குர்ஆன் அல்லாஹ்வுடைய மார்க்கத்தையும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவுபடுத்தக்கூடிய ஒரு வேதமாக இருக்கிறது என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

💎قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ‏

💎 நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

📕 (அல்குர்ஆன் 5:15)

🌹அல்லாஹ் மனிதனைப் படைத்து, அவன் விரும்பியபடி வாழட்டும் என்று விடவில்லை, எந்த ஒரு வழிகாட்டலும் இல்லாமல் அவனை விட வில்லை

🌹அல்லாஹ் மனிதனுக்கு, எது சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய வழி மற்றும் எது நரகத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய வழி என்று இரண்டு வழிகளையும் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு தெளிவுபடுத்துகிறான்

🌹அல்லாஹுதஆலா அல்முபீனாக இருக்கிறான்.

🌹எனவே, தெளிவுபடுத்தக் கூடியவனான அல்லாஹ்வுடைய மார்க்கம் தெளிவானது,

🌹அல்லாஹ்வுடைய தெளிவுபடுத்துதலை யார் சரியாக புரிந்து கொள்கிறார்களோ அவர் வெற்றி அடைவார், அந்தத் தெளிவை பெறாதவர் நஷ்டம் அடைவார்.

🤲 அல்லாஹ்வுடைய மார்க்கத்தை தெளிவான முறையில் புரிந்து, அதன் அடிப்படையில் வாழ்ந்து மரணிக்க, அல்லாஹ் நம் எல்லோருக்கும் தவ்ஃபீக் செய்வானாக 🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page