

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 43 🔷
🌕நம்மைப் படைத்து, நமக்கு உணவளித்து, இந்த பிரபஞ்சத்தில் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் நமக்கு வசப்படுத்தித் தந்த அல்லாஹ்வைப் பற்றி நாம் அறிந்து கொண்டு வருகிறோம்.
🌕அல்லாஹ்வை சரியான முறையில் அறிந்து கொள்வதுதான் இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பாக்கியமாகும்.
🌷அல்ஹக் (الحق) ➖உண்மையானவன், சத்தியமானவன்
⭐️அல்ஹக் என்ற பெயர் அல்குர்ஆனில் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
🍃உதாரணமாக:
🍄فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَـقُّ
🍄உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்;
📕 (அல்குர்ஆன் 10:32)
🍄ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ
🍄இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்);
📕 (அல்குர்ஆன் 22:62)
🍄فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ
🍄ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்.
📕 (அல்குர்ஆன் 23:116)
⭐️அல்ஹக் என்றால் உண்மையானவன், சத்தியமானவன் என்று அர்த்தமாகும்.
⭐️அல்லாஹ் உண்மையானவன் என்றால், அவன் உண்மையிலேயே இருக்கிறான், அவன் இருக்கிறான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
⭐️அல்லாஹ்வுடைய தாத் உண்மையானது. அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.
⭐️அல்லாஹ்வுடைய பெயர்கள், மற்றும் ஸிஃபாத் என்கிற பண்புகளும் உண்மையானவை. அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
⭐️வணங்கி வழிபட தகுதியான உண்மையான கடவுள் அல்லாஹ் மட்டுமே. அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.
⭐️அல்லாஹ்வுடைய ஒவ்வொரு செயல்களும், வார்த்தைகளும் உண்மையானவை. அவற்றில் எந்த சந்தேகமும் கிடையாது.
👆👆👆இவை அனைத்தையும் அல்ஹக் என்ற பெயர் நமக்கு உணர்த்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்
⭐️எனவேதான், நபி ﷺ அவர்கள் இரவில் தொழுகைக்காக எழுந்தால், 'துஆஉல் இஸ்திஃப்தஹ்' என்று சொல்லக்கூடிய ஆரம்ப துஆவை நமக்கு கற்றுத் தந்தார்கள்.
📕 (ஹிஸ்னுல் முஸ்லிம் புத்தகத்தில் துஆ எண் 32)
🌕தொழுகைக்கு தக்பீர் கட்டிய பிறகு
🌹اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمٰوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمٰوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمٰوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ لَكَ مُلْكُ السَّمٰوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمٰوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَلِقاؤُكَ الْحَقُّ وَالْـجَنَّةُ حَقٌّ وَّالنَّارُ حَقٌّ وَّالنَّبِيُّوْنَ حَقٌّ وَّمُحَمَّدٌ ﷺ حَقٌّ وَّالسَّاعَةُ حَقٌّ اَللّٰهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ أَنْتَ إِلٰهِيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
🌹அல்லாஹ்வே... உனக்கே எல்லாப் புகழும்! நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களுக்கு ஒளியாவாய்! உனக்கே எல்லாப் புகழும்! வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களையும் நிர்வகிப்பவன் நீயே! அல்லாஹ்வே... உனக்கே எல்லாப் புகழும்! நீயே வானங்கள் பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவனாவாய்! உனக்கே எல்லாப் புகழும்! வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் ஆட்சி அதிகாரம் அனைத்தும் உனக்கே சொந்தமானது! உனக்கே எல்லாப் புகழும்! வானங்கள் பூமியின் அரசனும் நீயே! உனக்கே எல்லாப் புகழும்! நீ உண்மையானவன்! உனது வாக்குதான் உண்மையானது! உனது சொல்தான் உண்மையானது! உனது சந்திப்புதான் உண்மையானது! சொர்க்கம் உண்மையானது!நரகம் உண்மையானது! இறைத்தூதர்கள் உண்மையாளர்கள்! முஹம்மது உண்மையானவர்! மறுமை உண்மையானது!
அல்லாஹ்வே! உனக்குக் கீழ்ப்படிந்தேன்; உன்னிடம் பொறுப்பை ஒப்படைத்தேன்; உன்னை நம்பிக்கை கொண்டேன்; உன் பக்கமே திரும்பி விட்டேன்; உன்னைக்கொண்டே வாதிடுகிறேன்; உன் பக்கமே தீர்ப்புக்காக வந்திருக்கிறேன்; (பாவங்களில்) நான் முந்திச் செய்தவற்றையும், பிந்திச் செய்தவற்றையும், இரகசியமாகச் செய்தவற்றையும், வெளிப்படையாகச் செய்தவற்றையும் (என்னிடம் இருக்கின்ற என் பாவங்களில்) என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கின்றவற்றையும்
எனக்கு மன்னித்து விடு! நீயே முற்படுத்துபவன்; நீயே பிற்படுத்துபவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை நீயே என் இறைவன்; உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை! பாவத்திலிருந்து மீளவோ, நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது அல்லாஹ்வைக் கொண்டே தவிர!
📕 (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
🌹அல்லாஹ்வை முழுமையாக புகழ்ந்த பிறகு, இஸ்லாத்தில் உள்ள அடிப்படையான விஷயங்கள் அனைத்தும் உண்மையானவை என்று இந்த துஆவின் மூலம் நபி ﷺ அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.
🎯அல்லாஹ் உண்மையானவன், அவன் மட்டுமே உண்மையான கடவுள் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை அல்ஹக் என்ற பெயர் நமக்கு உணர்த்துகிறது.
🤲எனவே, அல்ஹக் என்ற உண்மையான இறைவனை சரியான முறையில் நாம் அறிந்து கொண்டு, அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க முயற்சி செய்ய வேண்டும், அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக 🤲

