

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம 42
🌸அல்லாஹ்வைப் பற்றி அவனது திருநாமங்கள் மூலம் நாம் அறிந்து வருகிறோம்.
🌷அல்ஹலீம் ➖ الحليم
🏮இந்த பெயர் அல்குர்ஆனில் 11 இடங்களில் வருகிறது.
🌹اِنَّ اللّٰهَ يُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا وَلَٮِٕنْ زَالَــتَاۤ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْ بَعْدِهٖ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا
🌹நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.
📕(அல்குர்ஆன் 35:41)
🌹وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَکْنَنْتُمْ فِىْٓ اَنْفُسِكُمْ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰـكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّکَاحِ حَتّٰى يَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ
🌹(இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
📕 (அல்குர்ஆன் 2:235)
🌹تُرْجِىْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـــْٔوِىْۤ اِلَيْكَ مَنْ تَشَآءُ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ تَقَرَّ اَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَاۤ اٰتَيْتَهُنَّ كُلُّهُنَّ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِىْ قُلُوْبِكُمْ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَلِيْمًا
🌹அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
📕 (அல்குர்ஆன் 33:51)
🏮அல்ஹலீம் என்பதை மொழிபெயர்க்கும்போது பொறுமையாளன் என்று மொழிபெயர்ப்பாளர்கள்.
🍁பொறுமையாளன் என்பதற்கு குறிப்பாக ஒரு அர்த்தம் இருக்கிறது.
🍁அல்லாஹ் மனிதனை பூமியில் படைத்து, நிறைய நிஃமத்துகளை கொடுத்து, ரஸூல்மார்கள் மூலம் வழிகாட்டி இவ்வாறு தான் வாழவேண்டும் என்ற வழிமுறையையும் சொல்லிக் கொடுத்துள்ளான்.
📖அல்லாஹ் தன் நிஃமத்துகள் பற்றி திருமறையில் கூறுகிறான்:
🍀وَإِن تَعُدُّواْ نِعۡمَةَ ٱللَّهِ لَا تُحۡصُوهَآۗ إِنَّ ٱللَّهَ لَغَفُورٞ رَّحِيمٞ
🍀இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
📕 (அல்குர்ஆன் 16: 18)
🍁அல்லாஹ்வின் இப்படி பட்ட நிஃமத்துகளை அனுபவித்துக்கொண்டு அல்லாஹ்விற்கு நிறையவே மனிதன் மாறு செய்கிறான்.
🍁ஆனால் அல்லாஹ் நினைத்தால் அம்மனிதனை உடனே அழித்து விடலாம்.
🍁அல்லாஹ் தனக்கு அல்ஹலீம் என்ற பெயரை சூட்டிக் கொண்டு பொறுமையாக இருக்கின்றான்.
🍁அல்ஹலீம் என்ற பண்பின் வெளிப்பாடு தான் பாவிகள் பாவம் செய்யும்போது அல்லாஹ் அவர்களை உடனே அழித்து விடாமல் பொறுமையாக இருக்கின்றான்.
☘وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَيْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَـاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ
☘மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
📕 (அல்குர்ஆன் 16:61)
☘وَرَبُّكَ الْغَفُوْرُ ذُوْ الرَّحْمَةِ لَوْ يُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ بَلْ لَّهُمْ مَّوْعِدٌ لَّنْ يَّجِدُوْا مِنْ دُوْنِهٖ مَوْٮِٕلًا
☘(நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு; அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.
📕 (அல்குர்ஆன் 18:58)
🍁அல்லாஹ் இவ்வளவு அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருப்பதினால் அல்ஹலீம் என்று அழைக்கப்படுகிறான்.
🌹اِنَّ الَّذِيْنَ فَتَـنُوا الْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِ
🌹நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
📕 (அல்குர்ஆன் 85:10)
👆இந்த வசனத்தில் மிகவும் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் கிடங்கைத் தோண்டி ஈமான் கொண்டவர்களை அதில் போட்டு வேதனை செய்யக்கூடிய அவர்களை நோக்கி அவர்கள் தவ்பா செய்தால் அவர்களை மன்னிப்பதாக அல்லாஹ் சொல்கிறான்.
🍁அல்லாஹ் அல்ஹலீம் என்பதால்தான் இப்படி செய்கிறான்.
🎯அல்லாஹு தஆலா அல்ஹலீம் என்று நாம் அறிகிற போது அல்லாஹ்வின் மீது அன்பும் நேசமும் அதிகரிக்கும். அல்லாஹ்விடம் நெருங்க வேண்டும் என்ற ஆசை நம் உள்ளங்களில் வரும்.
🤲அல்லாஹ் நம் அனைவருக்கும் அப்படி அல்லாஹ்வை நெருங்க கூடிய பாக்கியத்தை தருவானாக ஆமீன்.🤲

