


🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 6
🌷الخالق ➖ அல்ஃகாலிக்
🌷الخلاق➖ அல்ஃகல்லாக்
💎அல்ஃகாலிக் (الخالق) என்ற பெயர் அல்குர்ஆனில் 11 இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.
💎 அல்ஃகல்லாக் (الخلاق)
என்ற பெயர் அல்குர்ஆனில் 2 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:👇
🌼انَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ
🌼நிச்சயமாக உமதிரட்சகன் அவனே (அனைத்தையும்) படைத்தோன், (இவர்களைப்பற்றி) நன்கறிந்தோன்.
📕 (அல்குர்ஆன் 15:86)
🌼اوَلَيْسَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْؔ بَلٰی وَهُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ
🌼வானங்களையும், பூமியையும் படைத்தானே அத்தகையவன், அவர்களைப் போன்றதைப் படைக்கச் சக்திபெற்றவனாக இல்லையா? ஏன் இல்லை? (அவனே ஆற்றலுடையவன்.) நிச்சயமாக, அவனே மிகப் பெரும் படைப்பாளன், நன்கறிகிறவன்.
📕 (அல்குர்ஆன் 36:81)
🔆'அல்ஃகாலிக்' என்றால் 'படைப்பாளன்' 'படைக்க கூடியவன்' என்பது அர்த்தமாகும்.""
🔆'அல்ஃகல்லாக்' என்றால் 'அதிகமாகப் படைக்க கூடியவன்' என்பது அர்த்தமாகும்.
💎 பொதுவாக இந்த 'அல்ஃகாலிக்' 'அல்ஃகல்லாக்' என்ற பெயர்களுக்குள் 'அல்ஃகல்க்'➖ 'படைத்தல்' என்கிற பண்பு இருக்கிறது.
💎'அல்ஃகல்க்' என்கிற இந்தச் சொல் குர்ஆனில் இரண்டு அர்த்தங்களில் பிரயோகிக்கப்பட்டு உள்ளது.
💚அர்த்தம்1⃣: முன்னுதாரணங்கள் என்று ஒன்று இல்லாமல், இல்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்குவது.
🌼انَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ
🌼நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும், (நிர்ணயிக்கப்பட்ட) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
📕 (அல்குர்ஆன் 54:49)
🌼الَّذِىْ خَلَقَ فَسَوّٰى ۙ
🌼அவன் எத்தகையவனென்றால், அவனே(படைப்பினங்களனைத்தையும்) படைத்து பிறகு (அவற்றைச்) செவ்வையாக்கினான்.
📕 (அல்குர்ஆன் 87:2)
🌼بدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَىْءٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
🌼 முன் மாதிரியின்றியே வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவன், அவனுக்கு மனைவியே இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளையிருக்க முடியும்? இன்னும், ஒவ்வொரு பொருளையும் அவனே படைத்திருக்கின்றான், அன்றியும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
📕 (அல்குர்ஆன் 6:101)
🌼يوْمَ نَـطْوِىْ السَّمَآءَ كَطَـىِّ السِّجِلِّ لِلْكُتُبِ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ وَعْدًا عَلَيْنَا اِنَّا كُنَّا فٰعِلِيْنَ
🌼(நபியே!) எழுதப்பட்ட (பெரும்) ஏடுகளைச் சுருட்டுவதைப்போல, நாம் வானத்தைச் சுருட்டிவிடும் நாளை (நினைவு கூர்வீராக!) முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திரும்பவும்) மீளவைப்போம், (இது) நம் மீது கட்டாயமான வாக்குறுதியாகும், நிச்சயமாக நாம் (இதை) செய்வோராய் இருக்கிறோம்.
📕 (அல்குர்ஆன் 21:104)
💎மேலுள்ள வசனங்களிலிருந்து அல்லாஹ் கூறக்கூடிய இந்த வார்த்தையின் அர்த்தம் இல்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்குவது.
💚'அல்ஃகல்க்' என்பதன் இன்னுமொரு அர்த்தம்2⃣:
💚'தக்தீர்' ➖ 'நிர்ணயித்தல்' என்பதாகும்.
💚அல்குர்ஆனில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ள இடங்கள்:👇
🌼انَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ اِلَيْهِ تُرْجَعُوْنَ
🌼 “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் விக்கிரகங்களைத்தான், நீங்கள் பொய்யாக (உங்கள் கைகளால் அவைகளைப்) படைத்துக்கொண்டீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவை உங்களுக்கு உணவளிக்கச் சக்திபெறமாட்டா. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே தேடுங்கள். அவ(ன் ஒருவ)னையே வணங்குங்கள், அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள், அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
📕 (அல்குர்ஆன் : 29:17)
🌷وتَخْلُقُوْنَ اِفْكًا
❌இதற்கு நீங்கள் படைக்கிறீர்கள் என்று அர்த்தம் கிடையாது.
💙பொய்யை நீங்கள் நிர்ணயித்து வடிவமைக்கிறீர்கள் என்று தான் இந்த வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்க வேண்டும்.
🌷فتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ
🌷ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும்பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன்.
📕 (அல்குர்ஆன் 23:14)
💙❌இந்த வசனத்தில் ஃகாலிக்கீன்➖ என்பது 'இல்லாமையில் இருந்து ஒன்றை படைப்பவர்களில் அல்லாஹ் சிறந்தவன்' என்ற அர்த்தம் கிடையாது.
💙அப்படி இல்லாமையில் இருந்து ஒன்றை படைப்பவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. அவ்வாறு படைப்பவன் அல்லாஹ் மட்டுமே.
💙இந்த இடத்தில் இந்த சொல், (இருப்பதைக் கொண்டு) 'நிர்ணயித்து வடிவமைப்பது' என்று அர்த்ததில் இஙகு பயன்படுத்தப்பட்டுள்ளது.
💎ஆகவே 'ஃகல்க்' ➖படைத்தல் என்ற வார்த்தையை அல்லாஹ்வோடுதொடர்பு படுத்தும் போது இல்லாமையிலிருந்து படைத்தவன் என்ற அர்த்ததில் பயன்படுத்தப்பட வேண்டும்.
💎இல்லாமையிலிருந்து படைத்தவன் அல்லாஹ் மட்டும் தான்.
💎மனிதர்களோடு இந்த வார்த்தையை தொடர்பு படுத்தும் போது 'நிர்ணயித்தல், வடிவமைத்தல்' என்ற அர்த்தம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
🌐அல்லாஹ்வைத் தவிர உள்ள எல்லாமே 'العالمون'➖ 'அல்ஆலமூன்' என்று சொல்லப்படும்.
🌐அல்ஃகாலிக் அல் ஃகல்லாக் என்பதை நாம் சரியாக அறிகிற போது இந்த உலகம் முழுவதையும், 'அல்ஆலமூன்' அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ்தான் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
🌐அனைத்தையும் அல்லாஹ் படைத்திருக்கிறான்.
🌐அல்லாஹ்வை தவிர உள்ள அனைத்தும் படைக்கப்பட்டவை.
🌐இந்த அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக வீணாக படைக்கவில்லை.
🌐அல்லாஹ்தஆலா அனைத்தையும் அர்த்தத்தோடு தான் படைத்திருக்கிறான்.
💙அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
🌼ومَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ
🌼வானையும், பூமியையும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
📕 (அல்குர்ஆன் 21:16)
🎯அல்லாஹுத்தஆலா படைத்திருக்கும் அனைத்து படைப்புகளுமே அர்த்தத்தோடு தான் படைக்கப்பட்டிருக்கிறது.
🌎பூமியில் உள்ள அனைத்தையும் மனிதர்களுக்காக படைக்கப்பட்டிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
🌼هوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
🌼 அவன் எத்தகையவனென்றால், பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக அவன் படைத்தான்; பின்னர் அவன் வானத்தை படைக்க கருதியபோது அவைகளை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகின்றவன்.
📕 (அல்குர்ஆன் 2:29)
⁉️நாம் மனிதர்கள் எதற்க்காக படைக்கப்பட்டுள்ளோம்?⁉️
❤️ومَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
❤️மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.
📕 (அல்குர்ஆன் 51:56)
💎அல்லாஹ் மனிதனை படைத்த நோக்கம் அவன் ஒருவனையே நாம் இபாதத் செய்ய வேண்டும் என்பதற்காக.
📌அதாவது காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் மரணிக்கும் வரை அல்லாஹ் சொன்னபடி, அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த படி நாம் வாழ வேண்டும் என்பதற்காக தான் அல்லாஹ் நம்மை படைத்திருக்கிறான்.
💖அல்ஃகாலிக் அல்ஃகல்லாக் என்ற பெயர்களின் அர்த்தத்தை நாம் அறிந்து உணரும் போது, நமக்கு அல்லாஹ்வின் மீது ஒரு பெரிய கண்ணியம் ஏற்படுகிறது. அவன் மீது மதிப்பு ஏற்படுகிறது, அல்லாஹ் தான் வணங்கி வழிபட தகுதியானவன் என்ற உணர்வு ஏற்படுகிறது.
💖எனவே அவனை மாட்டுமே நாம் வணங்க கூடியவர்களாக மாறுகிறோம்.
🤲அல்லாஹுத்தஆலா அப்படியான நல்ல மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக.🤲

