top of page
62. Ash Shakoor.jpg
63. Ash Shakir.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 41

💐அல்லாஹுத் தஆலா அவை பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும்.

💐அவனை உண்மையான அடிப்படையில் ஈமான் கொள்ள வேண்டும்.

💐 அவனுடைய உண்மையான அடியாராக வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தோடு அவனைப் பற்றி அறிந்து வருகிறோம்.

 🌷அஷ்ஷகூர் ➖ الشكور

 🌷அஷ்ஷாகிர் ➖ الشاكر

📖 அல்குர்ஆனில், 6 இடங்களில் வருகிறது.

🌹لِيُوَفِّيَهُمْ اُجُوْرَهُمْ وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖ  اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ‏ 

🌹அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.

📕 (அல்குர்ஆன் 35:30)

🌹ذٰ لِكَ الَّذِىْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ‌ قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰى‌ وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا‌  اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ

🌹ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன் 42:23)

🌹اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ‏ 

🌹நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்.

📕(அல்குர்ஆன் 64:17)

🌹اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا  وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ‏ 

🌹நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன்  2:158)

🌹يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّـطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰٓى اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ‌ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا‏ 

🌹வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.

📕 (அல்குர்ஆன்  4:47)

🌼இந்த இரண்டு பெயர்களும் ஷுக்ர் என்ற வேர் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

🌼ஷுக்ர் என்றால் நன்றி செலுத்துதல் அஷ்ஷகூர் என்றால் நன்றி பாராட்டுபவன், நன்றி உடையவன் என்று அர்த்தமாகும்.

🌼அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், நன்றி உடையவன் என்றால் அல்லாஹ்விற்காக ஒரு அடியான் ஒரு அமலைச் செய்தால் அதை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

🍁 அதற்குக் கூலி கொடுப்பதோடு, அந்த கூலியை இரட்டிப்பாக, பன்மடங்காக அதிகரித்து கொடுப்பவன் என்ற அர்த்தமாகும். நல்லடியார்களுக்கு அல்லாஹ் கூலி கொடுப்பதாக வரக்கூடிய வசனங்களில் இதை காணலாம்.

☘لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ

☘அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.

📕 (அல்குர்ஆன் 35:30)

☘وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَذْهَبَ عَـنَّا الْحَزَنَ  اِنَّ رَبَّنَا لَـغَفُوْرٌ شَكُوْرُ ۙ‏ 

☘“எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

📕 (அல்குர்ஆன் 35:34)

👆 இந்த வசனத்தில் கூலியை கொடுப்பவன், கவலைகளை போக்குகிறான் என்ற அர்த்தமும் வருகிறது.

🍁கூலியை அதிகரித்து இரட்டிப்பாக்கி கொடுக்கும் இடங்களில், அவனுடைய அருட்கொடைகளை வழங்கியிருக்கிற இடங்களில் அல்லாஹ் இந்த ஷகூர் என்ற பெயரை பயன்படுத்துகிறான்.

🍁எனவே ஓர் அடியான் செய்யும் அமல்களை வீணாக்காமல் அந்த அமல்களுக்கு உரிய கூலியை கொடுப்பவன் என்பது அஷ்ஷகூர் என்பதன் அர்த்தம் ஆகும்.

🍁அல்லாஹ் அஷ்ஷகூர் என்று சொல்லக் கூடிய சில இடங்களில் அல்கஃபூர்  என்றும் கூறுகிறான்.

🍁அல்லாஹ் அஷ்ஷகூர் எனும் போது எவ்வாறு தன் அடியார்களுக்கு கூலியை அள்ளி அள்ளி கொடுக்கிறான் அதுபோல் அல்லாஹ் அல் கஃபூர் எனும் போது தன் அடியானை மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

🎯அல்லாஹ்வின் தன்மையான அஷ்ஷகூர் அஷ்ஷாகிர் என்பதை ஒரு அடியான் புரிந்து கொள்ளும்போது அந்தத் தன்மை தன்னிடம் வர வேண்டும் என்ற எண்ணம் வரும்.

🎯அல்லாஹ் அல்குர்ஆனில் தன் அடியார்களுக்கு நன்றியோடு நடந்து கொள்ள கட்டளை இடுகிறான். சில நல்லடியார்களை பற்றி கூறும் போது அவர்களை ஷாகிர் என்று அல்லாஹ் கூறுகிறான்.

🍁மனிதர்களிடம் வளர்க்கப்பட வேண்டிய மிக உயர்ந்த பண்பாக நன்றியோடு நடந்து கொள்ளுதல் என்ற பண்பு காணப்படுகிறது.

📖அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

☘وَإِذۡ تَأَذَّنَ رَبُّكُمۡ لَئِن شَكَرۡتُمۡ لَأَزِيدَنَّكُمۡۖ وَلَئِن كَفَرۡتُمۡ إِنَّ عَذَابِي لَشَدِيدٞ

☘("இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).

📕 (அல்குர்ஆன் 14 : 7)

🎯நன்றி பாராட்டுதல் எனும் பண்பு இந்த காலத்தில் மனிதர்கள் மத்தியில் மிகவும் அரிதாக உள்ளது.  இந்த பெயர்கள் மனிதர்களிடம் நன்றி பாராட்டுதல் என்ற இந்த பண்பை கட்டி எழுப்ப கூடியதாக இருக்கிறது.

🎯நிச்சயமாக நாம் நம் பிள்ளைகளை நன்றி உள்ளவர்களாக வளர்க்க வேண்டும் .

அல்லாஹ்விற்கு, பெற்றோர்களுக்கு, சகோதரர்களுக்கு,  ஆசிரியர்களுக்கு மற்றும் நமக்கு உதவக்கூடிய வர்களுக்கு நன்றியுடன் நடக்க கூடியவர்களாக வளர்க்க வேண்டும்.

🎯அஷ்ஷகூர் அஷ்ஷாகிர் என்ற இந்த பெயர்கள் அல்லாஹ் நன்றி உடையவன் என்பதை நமக்கு உணர்த்துவதுடன், மனிதர்கள் நன்றி பாராட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

🤲எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நன்றியோடு நடக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக ஆமீன்.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page