

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 39
🌹அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களைக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள், என்று அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.
🌹அல்லாஹ்வுடைய திருநாமங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் ஒருவனே அறிந்தவனாக இருக்கிறான்.
🌹நபி ﷺ அவர்கள், "அல்லாஹ்வுடைய 99 பெயர்களை, எவரொருவர் பொருளுணர்ந்து மனனம் செய்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கம் உண்டு" என்று கூறினார்கள்.
🌷அல்ஹமீத் (الحميد)➖புகழுக்குரியவன்
💎அல்ஹமீத் என்ற பெயர் குர்ஆனில் 17 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
💎ஹதீஸிலும் பல இடங்களில் வருகிறது, குறிப்பாக தொழுகையில் தஷஹ்ஹுதில் ஓதக்கூடிய ஸலவாத்துல் இப்ராஹிமில் இடம்பெற்றுள்ளது.
🌸إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
🌸அல்லாஹ்வே.. நிச்சயமாக நீ புகழ்மிக்கவன்! கண்ணியத்திற்குரியவன்!
📕 (ஸஹீஹுல் புகாரி)
💎ஹமீத் என்றால் நேரடியாக புகழுக்குரியவன் என்ற அர்த்தம் தரப்படுகிறது.
💎உண்மையிலேயே அல்லாஹ் அனைத்து புகழுக்கும் உரியவனாக இருக்கிறான்.
💎அவனுடைய அடியார்கள் அவனை புகழ்ந்தாலும் புகழாவிட்டாலும், உண்மையிலேயே புகழுக்குறியவன், அனைத்து புகழுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
💎அல்லாஹ்வுக்கு மிகப் பிடித்த வார்த்தைகளாக, நான்கு வார்த்தைகளை நபி ﷺ அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள் ;
🌸சுபஹானல்லாஹ்
🌸அல்ஹம்துலில்லாஹ்
🌸லாயிலாஹா இல்லல்லாஹ்
🌸அல்லாஹு அக்பர்
💎அல்லாஹ், அல்குர்ஆனை சூரா பாத்திஹாவை கொண்டு ஆரம்பிக்கிம்போது அல்ஹம்துலில்லாஹ் என்ற செய்தியைக் கொண்டுதான் ஆரம்பிக்கிறான்.
💠 சொர்க்கத்திற்குப் போகக்கூடிய சொர்க்கவாசிகளின் வார்த்தையும் அல்ஹம்துலில்லாஹ் என்று தான் இருக்கும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
🌸 وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي هَدَىٰنَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهۡتَدِيَ لَوۡلَآ أَنۡ هَدَىٰنَا ٱللَّهُۖ لَقَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّۖ وَنُودُوٓاْ أَن تِلۡكُمُ ٱلۡجَنَّةُ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
🌸இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்" (இதற்கு பதிலாக, "பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள்.
📕 (அல்குர்ஆன் 7 : 43)
💎மேலும், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :
சுத்தம் ஈமானில் பாதி, அல்ஹம்துலில்லாஹ் மீஸானை நிறைக்கும்.
💎அல்ஹம்துலில்லாஹ் என்று நாம் கூறும் பொழுது அல்லாஹ்வை நாம் புகழ்கிறோம்.
💎புகழ் என்பது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான ஒன்றாகவும், நாம் செய்யக்கூடிய மிக சிறந்த ஒரு திக்குராகவும் இருக்கிறது.
🎯அல்லாஹ் தான் புகழுக்குரியவன் என்று நாம் அறியும்போது, நம்மிடத்தில் ஒரு பணிவு வரும், மற்றவர்கள் நம்மைப் புகழ வேண்டும் என்ற ஆசை நம்மிடத்தில் வராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
💎 அல்லாஹ்தான் ரப்புல் ஆலமீனாக இருக்கிற காரணத்தினால், எல்லா குறைகளையும் விட்டும் நீங்கியவனாக இருப்பதனால், அல்லாஹ்வுக்கே வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவைகளும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளும் சொந்தமாக இருக்கிற காரணத்தினால், அவனே ஹமீதாக இருக்கிறான்.
💎அடியார்கள் அல்லாஹ்வை அதிகமாக புகழக் கூடியவர்களாக இருக்க வேண்டும், அப்படிப் புகழும் பொழுது அது ஒரு சிறந்த திக்ராக மாறும்.
💎நபி ﷺ அவர்கள் காலையில் ஓதுவதற்காக நமக்கு கற்றுக் கொடுத்த திக்ருகளில் மிக சிறந்த ஒன்று :👇
🌸நபி ﷺ அவர்கள் காலையில் வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வரும்போது அவர்களின் மனைவி திக்ரு செய்து கொண்டு இருந்தார்கள். அப்பொழுது நபி ஸல் அவர்கள் நீ இவ்வளவு நேரம் செய்த திக்ரைவிட சிறந்த ஒரு திக்ரை சொல்லி தரட்டுமா என்று கேட்டுவிட்டு கீழ் வரும் திக்ரை கற்றுக் கொடுத்தார்கள்:
🌸سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
(இதை காலையில் மூன்று முறை ஓதவேண்டும்.)
🌸அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தி அவனைப் புகழ்கிறேன்; அவனது படைப்புகளின் எண்ணிக்கை அளவு; அவன் பொருந்திக் கொள்ளும் அளவு; அவனது அர்ஷின் கனமளவு; அவனது வார்த்தையின் மையளவு!
📕(ஸஹீஹ் முஸ்லிம்)
💎 எனவே அல்லாஹ்வைப் புகழ்வது என்பது மிகச் சிறந்த உயர்ந்த ஒரு திக்ராகும்
💎அல்லாஹ் அல்ஹமீத் என்பதனால், அல்லாஹ்வுக்கு தான் எல்லா புகழும் சொந்தம், அந்த அல்லாஹ் மட்டுமே புகழுக்குரியவன்.
💎நாம் தினமும் செய்யும் செயல்களான சாப்பிடும்போதும், தூங்கி கண் விழிக்கும் போதும், நாம் செய்யும் நல்ல காரியங்களிலும் போன்ற அனைத்திற்கும் அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்வைப் புகழ்வது நம்முடைய கடமையாக இருக்கிறது.
🎯 நாம் அல்லாஹ்வை அதிகமாக புகழும்வதன் மூலம் நம்முடைய பணிவையும், பக்குவத்தையும், அல்லாஹ்வின் மீது உள்ள உயர்ந்த எண்ணத்தையும் பிரதிபலிக்கக் கூடிய ஒன்றுதான் அல்ஹம்துலில்லாஹ் என்று நாம் சொல்லக்கூடிய அந்த வார்த்தை.
🎯எனவே, அல்லாஹ் அல்ஹமீத் என்பதை நாம் சரியாக புரிந்து கொண்டால், நம்மிடத்தில் பணிவும், பக்குவமும் வரும், நாம் புகழக்குரியவர்கள் அல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்வோம், உண்மையிலேயே புகழுக்குரியவன் அல்லாஹ் மட்டுமே, அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சொந்தமானது.

