top of page
58. Al Quddus.jpg
59. As Subooh.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 38

💐நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் இருக்கின்றன, யார் அவற்றை பொருளோடு எண்ணி மனப்பாடம் செய்கிறார்களோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்."

💐எனவே, அல்லாஹ்வின் திருநாமங்களை பொருளுணர்ந்து மனப்பாடம் செய்து கொள்ளவது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

🌷அல்குத்தூஸ் (القدوس) ➖ மிகப்பரிசுத்தமானவன்

🌷அஸ்ஸுப்பூஹ் (السبوح) ➖ மிகத் தூய்மையானவன்

🍉 இந்த இரண்டு பெயர்களும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தை தரக்கூடிய பெயர்களாகும்.

📖அல்குத்தூஸ் என்ற பெயர் குர்ஆனில் :

🌼هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏ 

🌼அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

📕 (அல்குர்ஆன் 59:23)

🍉 அஸ்ஸுப்பூஹ் என்ற பெயர் குர்ஆனில் நேரடியாக இடம் பெறவில்லை, ஆனால், ஹதீஸில் இடம் பெற்றிருப்பதை நாம் காணலாம்.

🍉 நபி ﷺ அவர்கள் ருகூவிலும், ஸுஜூதிலும் நமக்கு கற்றுத்தந்த ஒரு திக்ர் :

🌼سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ

🌼(அல்லாஹ்) மிகத் தூய்மையானவன்! மிகப் பரிசுத்தமானவன்! வானவர்கள் மற்றும் (வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் எனும்) ரூஹின் இறைவன்! 📕 (ஸஹீஹ் முஸ்லிம்)

☝️ இந்த திக்ரில் நபி ﷺ அவர்கள் இரண்டு பெயர்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

🌹குத்தூஸ் ஸுப்பூஹ் என்றால் தூய்மையானவன், பரிசுத்தமானவன் என்று அர்த்தம்.

🍉 இந்த இரண்டு பெயர்களையும் அடிப்படையாக வைத்து வரக்கூடிய சொற்களை மலக்குகள் பயன்படுத்தியதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :

🌼وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ‌

🌼இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்;

📕 (அல்குர்ஆன் 2:30)

☝️மேல் கூறப்பட்ட ஆயத்தில், 'தஸ்பீஹ்' என்ற வார்த்தையிலிருந்து "ஸுப்பூஹ்" என்ற பெயரும், 'தக்தீஸ்' என்ற வார்த்தையிலிருந்து "குத்தூஸ்" என்ற பெயரும் வந்திருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

🍉 அல்லாஹ் அனைத்து குறைகளை விட்டும் தூய்மையானவன், பரிசுத்தமானவன் என்பதை நமக்கு இந்த இரண்டு பெயர்களும் காட்டுகின்றன.

🍉 அல்லாஹ் பூர்ணமாணவன், அவனுடைய பெயர்கள் அழகின் உச்சத்தில் இருக்கக் கூடியவை.

🍉 அவனுடைய பண்புகள் அனைத்தும் குறைகளற்ற பூரணமானவை, அல்லாஹ்வுக்கு எந்த குறையும் கிடையாது, அவனுக்கு மனித பலவீனங்கள் எதுவும் ஏற்படாது, சிறு தூக்கம், சோர்வு, மறதி போன்றவற்றை விட்டும் பரிசுத்தமானவன் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான்.

🍉 அல்லாஹ்வுடைய படைப்புகளில் யாரும் அல்லாஹ்வுக்கு நிகராக முடியாது, அவைகள் அனைத்தையும் விட்டு அல்லாஹ் தூய்மையானவனாக இருக்கிறான்.

🍉 அல்லாஹ்வுடைய பண்புகள் அனைத்தும் தூய்மையானது, பரிசுத்தமானது.

📖அல்லாஹ் மக்ரு செய்யக்கூடியவன் என்று குர்ஆனில் கூறுகிறான் ;

🌼وَيَمۡكُرُونَ وَيَمۡكُرُ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ

🌼அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்னையுடையவன்.

📕 (அல்குர்ஆன் 8:30)

🍉 மக்ரு என்றால் 'சதி' 'சூழ்ச்சி' என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

🍉 மக்ரு என்பதை அடியார்களுக்கு தொடர்பு படுத்தும்பொழுது, அது குறையுள்ள ஒரு பண்பாக இருக்கும், ஆனால், அல்லாஹ்வோடு சேர்ந்து வரும் போது, அல்லாஹ் அந்த விஷயத்தில் உயர்ந்தவன், மேலானவன், அது அவனுக்கு எந்தக் குறைகளுமற்ற ஒரு சிறந்த பண்பாகவே இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

🍉 அல்லாஹ் ஸுப்பூஹ், குத்தூஸ் என்ற காரணத்தினால், அவனுடைய படைப்புகளுடன் எக்காரணத்திற்காகவும் ஒப்பாகமாட்டான், அதைவிட்டும் அவன் பரிசுத்தமானவன் என்பதை இந்தப் பெயர்கள் நமக்கு சொல்லும் அர்த்தமாக இருக்கிறது.

🎯 இந்த இரண்டு பெயர்களையும் ஒரு மனிதன் சரியாக புரிந்து கொண்டால், இணைவைப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.

🍉நிறைய மக்கள் அல்லாஹ்வுக்கு நிகராக அல்லாஹ்வின் படைப்புகளை ஆக்குகிறார்கள். அவர்கள் அல்லாஹ் ஸுப்பூஹ், குத்தூஸ் என்பதை அறியாமல் இருப்பது தான் காரணம்.

🍉 அல்லாஹ் ஸுப்பூஹ், குத்தூஸ் என்றால் பரிசுத்தமானவன், தூய்மையானவன், அனைத்து குறைகளுக்கும் அப்பாற்பட்டு நிறைவானவன் என்ற கருத்தை நமக்கு தரக்கூடியதாக இருக்கிறது.

🤲 எனவே, அல்லாஹ்வை சரியாக புரிந்து தவ்ஹீதை நிலைநாட்டி, ஷிர்கிலிருந்துஈடேற்றம் பெற, அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக 🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page