top of page
57. As Salaam.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம்  37

🌕 நாம் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து அடக்கம் செய்த பிறகு, நமக்கு கேட்கப்படக்கூடிய முதல் கேள்வி,

⁉️உன்னுடைய ரப்பு யார் ❓❓

🌕 நம்முடைய ரப்பை பற்றின அறிவு இல்லாத நிலை என்பது, நம்மை இந்த உலகத்திலும், கபுரிலும், மறுமையிலும் தடுமாறி கைசேதப் படக்கூடிய நிலைமை நமக்கு ஏற்படும்.

🌕 எனவே, அல்லாஹ்வைப் பற்றியும், அல்லாஹ்வுடைய பெயர்கள், தன்மைகள் பற்றியும், அவன் யார் எங்கு இருக்கிறான் என்பதை பற்றியும் அறிந்துகொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கிறது.

🌷அஸ்ஸலாம் (السلام) ➖தூய்மையானவன், சாந்தியானவன்

📖 அஸ்ஸலாம் என்ற பெயர் குர்ஆனில் ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது:

🌸هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏ 

🌸அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

📕 (அல்குர்ஆன் 59:23)

🍉 தர்ஜமதுல் குர்ஆனில் படிக்கும்பொழுது அஸ்ஸலாம் என்பது சாந்தியானவன் என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும்.

🍉 ஸாலிம் என்று சொன்னால் குறைகளிலிருந்து நீங்கியவன் என்பது நேரடியான அர்த்தமாகும்.

🍉 அல்லாஹ்வுடைய தாத், அவனுடைய திருநாமங்கள், பண்புகள், செயல்கள் அனைத்துமே தூய்மையானவை ; எந்தவிதமான குறையில்லாமல், குறைகளுக்கு அப்பாற்பட்டவை என்பது அஸ்ஸலாம் என்ற வார்த்தையுடைய அர்த்தமாக இருக்கிறது.

🍉 நபி ﷺ அவர்கள் தொழுகை முடிந்த பிறகு நமக்கு இதை ஓத கற்று தந்தார்கள் :

🌸اَللّٰهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَاذَاالْـجَلَالِ وَالْإِكْرَامِ.

🌸அல்லாஹ்வே! நீதான் ஈடேற்றம் அளிப்பவன்; ஈடேற்றம் உன்னிடம் இருந்துதான் கிடைக்கிறது; நீ பரக்கத்மிக்கவன்; கண்ணியத்திற்கும் சங்கைக்கும் உரியவனே.

📕 (ஸஹீஹ் முஸ்லிம்)

☝️அல்லாஹ் சாந்தியானவன், அவனுடைய படைப்புகளுக்கு மத்தியில் அமைதியையும், சாந்தியையும் பரப்பக் கூடியவன், அல்லாஹ்விடமிருந்து தான் அமைதியும், சாந்தியும் வருகிறது என்பதை இந்த திக்ரின் மூலம் நபி ﷺ அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

🍉 அஸ்ஸலாம் என்று சொன்னால், அல்லாஹ் அனைத்துவிதமான குறைகளை விட்டும் நீங்கியவன் என்பதும் அர்த்தமாகும்.

🍉 அல்லாஹ்வுடைய ஹயாத் என்பது எல்லாவிதமான குறைகளிலிருந்தும் நீங்கியது, அவனுக்கு மரணம் கிடையாது, தூக்கம் கிடையாது.

📖இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :

🌸الْحَـىُّ الْقَيُّوْمُ ; لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌

🌸 அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்காது;

📕 (அல்குர்ஆன் 2:255)

🍉 அல்லாஹ்வுக்கு சோர்வு, பலவீனம், இயலாமை போன்ற எதுவும் வராது என்பதை அல்குர்ஆன் நமக்கு அடையாளப்படுத்துகிறது.

🍉 இல்முடைய விஷயத்திலும் அல்லாஹ் ஸாலிமாக இருக்கிறான், எதுவுமே அவனிடமிருந்து மறையாது, அவன் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். அல்லாஹ் ஆலிம். அலீம். அவனுடைய அறிவுக்கு முன்னால் அறியாமை என்று ஒன்று கிடையாது. அவனுடைய இல்ம் அறியாமையில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

🍉 பொய் பேசுவது, அநீதி இழைப்பது போன்ற அனைத்து குறைகளிலிருந்தும் நீங்கியவனாக இருக்கிறான்,

🍉 அல்லாஹ்வுடைய ஆட்சி, அதிகாரம், குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

🍉 அல்லாஹ்வுடைய ஒவ்வொன்றுமே குறைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை அடையாளப்படுத்தக் கூடிய ஒரு பெயர்தான் அஸ்ஸலாம் என்ற பெயராகும்.

🍉 அஸ்ஸலாம் என்ற பெயரை நாம் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பெயராகவும் இருக்கிறது, அப்படி பயன்படுத்தும் பொழுது அல்லாஹ் தூய்மையானவன், சாந்தியானவன், குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

🤲 அல்லாஹ்வைப் பற்றின சரியான புரிதலும், நம்பிக்கையும் ஏற்படுவதற்கு, நம் எல்லோருக்கும் அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக 🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page