

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 34
🌷அல்ஹகம் ➖ الحكم
💐அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அந்த திருநாமங்களில் 99 திருநாமங்களை அல்லாஹ்வுடைய தூதர் தனிப்படுத்துவப்படுத்தி அவற்றை யார் பொருளுணர்ந்து மனனம் செய்கிறாரோ அவருக்கு சொர்க்கம் என்று கூறினார்கள் . எனவே கண்டிப்பாக! நாமும் அந்தப் பெயர்களை மனனம் செய்து அல்லாஹ் வாக்களித்த சொர்க்கத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
🔮அல்ஹகம் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் தன் திருமறையில்,
🍁افغير الله أبتغي حكما
🍁நபியே கூறும் அல்லாஹ் அல்லாதவனையா நீதிபதியாக நான் தேடுவேன்.
📕 (அல்குர்ஆன் 6:114)
👆👆அல்லாஹ் ஹகம் என்ற பெயரை இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.
🔮ஹானி இப்னு யஜீத் அல் ஹாரிஸி, என்பவர் நபி ﷺ அவர்களை சந்திப்பதற்காக அவருடைய மக்களோடு வருகிறார். (ஒரு கூட்டம் ) அந்த நேரத்தில் அந்த மக்கள் ஹானி என்பவரை அழைக்கும்போது அபுல் ஹகம் என்று அழைத்தனர். நபி ﷺ அவர்கள் இதை கவனித்துவிட்டு ஹானி அவர்களை அழைத்து கேட்டார்கள், "அல்லாஹ்தான் ஹகம், ஹுகும் அல்லாஹ்விடத்தில் தான் இருக்கின்றன.
எனவே உனக்கு எப்படி அபுல் ஹகம் என்ற பட்டப்பெயர் வந்தது?" என்று நபி ﷺ அவர்கள் கேட்டார்கள், அதற்கு ஹானி சொல்கிறார்; "என்னுடைய மக்களிடத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் என்னிடத்தில் வருவார்கள். அதற்கு நான் தீர்ப்பு வழங்குவேன் அந்த தீர்ப்பை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் , அதனால் தான் எனக்கு அந்த மக்கள் அபுல் ஹகம்(தீர்ப்பு வழங்குவரின் தந்தை) என்று பெயர் சூட்டினார்கள்".
இதை நபி ﷺ அவர்கள் கேட்டுவிட்டு கூறினார்கள், "எவ்வளவு ஒரு நல்ல விஷயம்!" என்று சொல்லிவிட்டு "உனக்கு ஆண்பிள்ளை யார் இருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள் . அவர் கூறினார் "ஷுரைஹ், முஸ்லிம், அப்துல்லாஹ்" என்ற ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். நபி ﷺ அவர்கள் கேட்டார்கள் : "அவர்களில் யார் பெரியவர்?" ஹானி அவர்கள் "ஷுரைஹ் தான் மூத்த பிள்ளை" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டுவிட்டு நபி ﷺ அவர்கள் "நீ இப்போதிலிருந்து அபு ஷுரைஹ்" என்று கூறினார்கள். அபுல் ஹகம் என்ற பெயரை மாற்றுமாறு நபி ﷺ அவர்கள் இவ்வாறு வழிகாட்டினார்கள்.
📕 (அபூதாவுத், நஸாயீ)
📚 இமாம் புகாரி(ரஹ்) அவர்களும் ,அல் அதபுல் முஃப்ரத் என்ற நூலில் இந்த சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்.
🍁ان الله تعالى هو الحك
🍁"அல்லாஹு தஆலா அவன் தான் அல்ஹகம்"என்பதை நபி ﷺ அவர்கள் பதிவு செய்கிறார்கள். அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று அல்ஹகம் என்பது.
🔮அல் ஹகம் என்பது ஹுகும் என்ற சொல்லிலிருந்து வந்தது. ஹுகும் என்றால் சட்டம், தீர்ப்பு என்று அர்த்தமாகும். ஹகம் என்றால் தீர்ப்பு வழங்குபவன் என்பது நேரடியான கருத்தாக இருக்கிறது.
🔮அல்லாஹு தஆலா தான் உண்மையிலேயே தீர்ப்பு வழங்கக் கூடியவனாக இருக்கின்றான். எல்லா சட்டமும் அல்லாஹ்வுக்கே சொந்தமாகும், ஒன்றை ஹலால் என்றும், ஹராம் என்றும் சொல்வது, எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என்பதும் எல்லாம் அல்லாஹ்வுக்குரிய சட்டமாகும். அல்லாஹ்வை தவிர மற்ற யாரும் சட்டம் இயற்றும் உரிமையை பெற முடியாது. ஏனென்றால் அல்லாஹ் ஹகமாக இருக்கிறான்.
📖அல்லாஹ் குர்ஆனில்,
1⃣
☘فالحكم لله العلي الكبير
☘தீர்ப்பு மிக்க மேலானவனும் , மகாபெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது.
📕 (அல்குர்ஆன் 40:12)
2⃣
☘و له الحكم
☘ தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது.
📕 (அல்குர்ஆன் 28:70)
🔮அல்லாஹ் பல வசனத்தில், சட்டம் இயற்றுபவனாவும், தீர்ப்பு வழங்குபவனாகவும், இருக்கிறேன் என்று கூறுகிறான்.
🎯அல்ஹகம் அல்லாஹ்தான் என்று ஒரு மனிதன் அறியும்போது அவன் அல்லாஹ்வின் தீர்ப்பை கொண்டு தான் தீர்ப்பு சொல்லவேண்டும், மனிதன் அவன் இயற்றிய சட்டத்தை கொண்டு தீர்ப்பு சொல்ல முடியாது.
🤲அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்றான அல்ஹகம் என்ற, இந்த பெயரை நாம் புரிந்து செயல்படுத்த அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக.🤲

