


🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 36
🌷அல்முஃமின் (المؤمن) ➖உறுதிப்படுத்துபவன்
🌷அஸ்ஸாதிக் (الصادق) ➖ உண்மையாளன்.
☘அல்முஃமின் என்ற பெயர் அல்குர்ஆனில்:
🔆هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ
🔆 அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
📕 (அல்குர்ஆன் 59:23)
☘அஸ்ஸாதிக் என்ற பெயர் அல்குர்ஆனில்:
🔆وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِىْ ظُفُرٍ وَمِنَ الْبَقَرِ وَالْغَـنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُوْمَهُمَاۤ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَاۤ اَوِ الْحَـوَايَاۤ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ ذٰ لِكَ جَزَيْنٰهُمْ بِبَـغْيِهِمْ وَاِنَّا لَصٰدِقُوْنَ
🔆 நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.
📕 (அல்குர்ஆன் 6:146)
🔮இந்த இரண்டு பெயர்களும் அல்குர்ஆனில் ஒரு இடத்தில் மட்டுமே இடம்பெற்றிருப்பது இதற்குரிய முக்கியமான அம்சமாகும்.
🔮இரண்டு பெயர்களும் நெருக்கமான அர்த்தங்களை கொண்டதனால், இவை இரண்டையும் ஒன்றாக நாம் பார்க்கிறோம்.
🌹🌹அல்முஃமின்🌹🌹
💙அல்முஃமின் என்று சொன்னால் அரபுமொழியில், உண்மை படுத்துதல், உறுதிப்படுத்துதல், அபயமளித்தல் என்ற அர்த்தத்தை தரக்கூடிய பெயராக இருக்கிறது.
💙இஸ்லாமிய ரீதியாக அல்லாஹ்வுக்கு நாம் இந்த பெயரை கொடுக்கும் பொழுது, பல அர்த்தங்கள் காணப்படுகின்றன;👇👇
🌼அல்லாஹ் மனிதர்களை அநீதியிலிருந்து பாதுகாக்கக் கூடியவன். அல்லாஹ் எல்லா மனிதர்கள் விஷயத்திலும் நீதியானவன், அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான் என்ற அர்த்தத்தைத் தருகிறது.
🌼அல்லாஹ்வை ஈமான் கொண்ட மக்களை தண்டனையிலிருந்து பாதுகாக்கக் கூடியவன், என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.
🌼அதேபோல், தண்டனைக்கு உட்பட தேவையில்லாதவர்களை தண்டனையிலிருந்து பாதுகாப்பவன், என்ற அர்த்தத்தையும் தருகிறது.
🌼கதாதா (ரஹி) அவர்கள் கூறினார்கள், அல் முஃமின் என்று சொன்னால், "அல்லாஹ் உண்மையான கடவுள், அவன் தான் உண்மையில் வணங்கி வழிப்பட தகுதியானவன் என்பதை உறுதிப்படுத்த கூடியவன்" என்பது அதனுடைய அர்த்தமாக இருக்கிறது.
🌼'அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு வாக்களித்த வாக்குறுதிகளை இம்மையிலும், மறுமையிலும் உண்மைப்படுத்தி, உறுதிப்படுத்த கூடியவன்' என்பதும் இதற்குரிய அர்த்தமாக இருக்கிறது என்று இமாம் குர்துபி (ரஹி) அவர்கள் அவருடைய தப்ஸீரில் குறிப்பிடுகிறார்கள்.
🌼அல்லாஹ் அல்முஃமின் என்று சொன்னால், பயம் உள்ள மனிதர்களுடைய உள்ளத்திலிருந்து பயத்தை நீக்கி அமைதியையும் நிம்மதியையும் பரப்பக் கூடியவன்.
🔆الَّذِىْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ
🔆 அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
📕 (அல்குர்ஆன் 106:4)
🌼அல்லாஹ் அவனுடைய நேசர்களையும், நல்லடியார்களையும் பயத்திலிருந்து பாதுகாத்து, அவர்களுடைய உள்ளத்தில் இம்மையிலும் மறுமையிலும் அமைதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தக் கூடியவன்.
🍃உதாரணமாக :
🍁பத்ரு யுத்தத்தில் மக்களிடையே பயத்தை போக்கி நிம்மதி அளித்ததைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
🔆اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ
🔆 (நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்;
📕(அல்குர்ஆன் 8:11)
🔆اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا
🔆 (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்;
📕 (அல்குர்ஆன் 8:12)
🍁குறிப்பாக அல்லாஹ்வுடைய நல்லடியார்கள் மவுத் ஆகிற நேரத்தை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
🔆اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
🔆எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால்மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
📕 (அல்குர்ஆன் : 41:30)
💙கப்ரிலும் அல்லாஹ் அவனுடைய நல்லடியார்களுக்கு அபயமளிக்கிறான்.
🍁நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள் :
🔆 "கப்ரில் மலக்குகள் வந்து ஒரு அடியானை எழுப்பி வைக்கும்பொழுது, அல்லாஹ் அவனுடைய நல்லடியார்களுக்கு ஒரு நிம்மதியையும், அமைதியையும் கொடுக்கிறான்" என்பது அல்முஃமின் என்ற பெயர் தரக்கூடிய கருத்தாகும்.
💙மறுமையிலும் அல்லாஹ் அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பான், என்பதை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
🔆لَا يَحْزُنُهُمُ الْـفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ هٰذَا يَوْمُكُمُ الَّذِىْ كُنْـتُمْ تُوْعَدُوْنَ
🔆 (அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்).
📕 (அல்குர்ஆன் 21:103)
🌹🌹அஸ்ஸாதிக் --- அல்லாஹ் உண்மையாளன், உண்மை படுத்தக்கூடியவன்🌹🌹
🔮எனவே அவனுடைய அடியார்களின் எண்ணங்களை எல்லாம் அல்லாஹ் உறுதிப்படுத்துவான், உண்மைப் படுத்துவான்.
🔮நபி ﷺ அவர்கள் அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள் :
🔆 'ஒரு அடியான் என்னை பற்றி நினைக்கும் பொழுது நான் அவனிடத்தில் இருப்பேன். அவன் என்னிடத்தில் துஆ கேட்டால் நான் அவனோடு இருப்பேன்' என்று அல்லாஹ் கூறுகிறான்.
🖌 (ஹதீஸ் குத்ஸி)
🔮ஒரு அடியான் அல்லாஹ்வை பற்றி வைக்கக்கூடிய நல்லெண்ணத்தை அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்.
🔮அல்லாஹ் அவனுடைய அவ்லியாக்களையும், ரசூல்மார்களையும் அற்புதங்களைக் கொண்டு உண்மைப் படுத்துவான்.
💖 இந்த இரண்டு பெயர்களும் அல்லாஹ்வைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை நம்முடைய உள்ளங்களிலே ஏற்படுத்துகிறது.
💖 நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி, என்பது அல்லாஹ்வினால் உத்தரவாதப்படுத்த பட்ட ஒன்று என்ற எண்ணமும் நமக்கு ஏற்படுகிறது.
🤲அல்லாஹ்வை சரியாக புரிகிற போது நிச்சயமாக நாம் இந்த உலகத்தில் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்பீக் செய்வானாக.🤲

