top of page
49. Al Hakeem.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 33

🌷அல்ஹகீம் ➖ الحكيم         

💛 அல்ஹகீம் என்ற சொல் திருக்குர்ஆனில் 94 இடங்களில் இடம்பெறுகின்றன.

📖அல்லாஹ் குர்ஆனில்,

🌸و الله عزيز الحكيم

🌸அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கிறான்.

📕 (அல்குர்ஆன் 5:38)      

                                           

💙அல்ஹகீம் என்ற அரபு சொல் மொழி ரீதியாக பல அர்த்தங்களை குறிக்கிறது.👇👇

💙 எல்லா காரியங்களிலும்        சட்டங்களை அறிந்தவன்.

💙எல்லா விஷயங்களிலும் தீர்ப்பு வழங்கக் கூடியவன் என்பதும் அல்ஹகீமின் நேரடியான மொழிபெயர்ப்பாகும்.

💙அதுபோல் ஒவ்வொன்றையும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும், நுணுக்கமாகவும், ஒழுங்காகவும், செய்யக்கூடியவன் என்பது  அல்ஹகீம் என்ற பெயருக்கு அர்த்தம் ஆகும்.

💙அதாவது எந்த ஒன்றை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அதை அந்த இடத்தில் வைப்பது என்பது அர்த்தமாகும்.

💙கெட்டவற்றை செய்யவிடாமல் தடுப்பவன் என்பதும் இதனுடைய அர்த்தங்களில் ஒன்றாக அரபு அகராதியில் இருக்கிறது.

💖அல்லாஹு தஆலா அல்ஹகீம் என்று சொன்னால் அந்தப் பெயர் நமக்கு உணர்த்த வேண்டிய கருத்து நிறைய இருக்கிறது.👇👇

💖அல்லாஹ்  அவனுடைய வார்த்தைகளில், செயல்களில், சட்டங்களில், அல்ஹகீம் ஆக இருக்கிறான். எனவே அவன் உண்மையை தவிர வேறு எதுவும் பேச மாட்டான், சத்தியத்தை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டான்.   அவனுடைய சட்டங்கள் எல்லாம் சத்தியமானவை,       நேர்மையானவை,                   நீதியானவை என்பது ஒரு அர்த்தமாகும்.

💖அல்லாஹ் அல்ஹகீம் எனும் போது அவன் ஒவ்வொன்றையும் நேர்த்தியாகவும் சீராகவும் செய்வான். அதில் எந்தவிதமான கோணல் மாணல்களும் இருக்காது குறைபாடுகளும் இருக்காது என்பதும் ஒரு அர்த்தமாகும்.

💖அல்ஹகீம் சொல்லும் நாம் அவனுடைய நிர்வாகத்தில் அவனுடைய (தத்பீரில்)   பராமரிப்பில் எந்தவிதமான குறைகளும் இல்லாமல் நேர்த்தியான முறையில் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான கருத்தாகும்.

💖அல்லாஹு தஆலா சீராகவும் சிறப்பாகவும் ஒழுங்காகவும் படைத்து இருக்கிறான்.

🔮 அல்லாஹ் மனிதனைப் பற்றிக் கூறும் போது,                                                    

🌸(لقد خلقنا الإنسان في أحسن تقويم )

🌸 திடமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

📕 (அல்குர்ஆன் )

🌸الذي خلق فسوا

🌸அவனே யாவற்றையும் படைத்து செவ்வய்யாக்கினான்.

📕 (அல்குர்ஆன்)    

🌏 அல்லாஹ் எல்லாவற்றையும் சீராக தான் படைத்துள்ளான். அதில் உள்ள நுணுக்கங்கள், ஞானங்கள், எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன என்பதுதான் அல்ஹகீம் என்ற பெயருக்கு அர்த்தமாக இருக்கிறது. 

💖அல்லாஹ் எந்த ஒன்றையுமே வீணாகப் படைக்கவில்லை. அவன் படைத்த அனைத்திலும் அர்த்தம் இருக்கிறது, எந்த சட்டத்தையும் வீணாக அல்லாஹ் மனிதனுக்கு கொடுக்கவில்லை. அவனுடைய ஒவ்வொரு சட்டத்திலும் நிச்சயமாக நியாயம் இருக்கிறது என்பது அல்ஹகீம்  என்ற பெயர் நமக்கு உணர்த்துகிறது.        

💖இப்படி பல  அர்த்தங்களை தரக்கூடிய மிகச்சிறந்த அழகிய பெயர் அல்ஹகீம் என்ற பெயராகும்.

🎯இந்த பெயரை சரியான முறையில் புரிந்து கொண்டால் இந்த உலகில் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழலாம்.

🎯அல்லாஹ் வறுமையை தருகிறான் என்றால் அதில் ஹிக்மத் இருக்கும்.

🎯அல்லாஹு தஆலா அங்கவீனமான ஒரு குழந்தையை தருகிறான் என்றால் அதில் ஹிக்மத் இருக்கும்.

🎯அல்லாஹு தஆலா வாழ்க்கையில் கஷ்டம், சோதனைகள், தோல்விகள் தருகிறான் என்றால் அதில் ஹிக்மத் இருக்கும்.

🎯அல்லாஹ்வை ஹகீம் என்று நாம் அறியும்போது அவன் செய்யும் ஒவ்வொன்றையும், நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் , சரியாகவும், உண்மையின் அடிப்படையில் செய்கிறான் என்று நாம் அறியும் போது நிச்சயமாக எந்த விஷயமும் நம்மை விரக்தி நிலைக்கு கொண்டு செல்லாது. நம்முடைய உள்ளத்தை துன்பப் படுத்தாது. நிச்சயமாக நாம் சந்தோசமாக இருக்கலாம்.

 

🤲'அல்லாஹ்வை' இன்னும்! இன்னும்! நாம் சரியான முறையில் அறிந்து நாம் ஈமான் கொள்ள நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page