top of page
46. Al Waasi.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 31

🌷அல்வாஸிஃ ➖ الواسع

🌷விசாலமானவன்    

💐நாம் அறியக்கூடிய விஷயங்களில் மிக மகத்தான அறிவானது அல்லாஹ்வை பற்றி அறிவது தான். ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வை சரியாக அறிந்தால் தான், ஈமானின் முதலாவது அடிப்படை பூரணமடையும். அவனுடைய அஸ்மாவுல் ஹுஸ்னா மூலமாக நாம் அல்லாஹ்வை பற்றி  அறிந்து வருகிறோம்.

🌹அல்வாஸிஃ  என்ற பெயர் அல் குர்ஆனில் 8 இடங்களில் இடம் பெற்று  உள்ளது. இதற்கு நேரடியான  அர்த்தம், விசாலமானவன்.

🌹சூரத்துல் பகரா 115, 247 ஆகிய வசனங்களில் வந்துள்ளது.

🌹அல்லாஹு தஆலா அல்வாஸிஃ என்று நாம் சொல்கிறபோது  அவனுடைய பண்புகளால், அறிவால் விசாலமானவன். அவனுடைய அறிவு விசாலமானது. அதிலிருந்து எதையும், எந்த காரியங்களையும் மறைத்து வைக்க முடியாது.

👇🏼இந்த வசனத்தில் அவனுடைய அறிவு விசாலமானது என்று குறிப்பிட்டுள்ளான்.

🌼اِنَّمَاۤ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰـهَ اِلَّا هُوَ‌ وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًا‏ 

🌼“உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.

📕 (அல்குர்ஆன் 20:98)

🌻அவனுடைய ரஹ்மத் விசாலமானது என்று கீழே வரும் வசனங்களில் கூறியுள்ளான்.

👇

🌼وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَيْكَ ‌ قَالَ عَذَابِىْۤ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَآءُ‌  وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ‌  فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَ ‌‏ 

🌼“இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால்  என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.

📕 (அல்குர்ஆன் 7:156)

 🌼رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًاَ

🌼 “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்!

📕 (அல்குர்ஆன் 40:7)

🌼فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍ‌

🌼(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், “உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்;

📕(அல்குர்ஆன் 6:147)

🌻(சூரா நிஸா : 4:130)வது வசனம்

🌻(சூரா ஆல இம்ரான் : 3:73)

🌻(சூரா நூர் 24:32)

ஆகிய வசனங்களிலும்  அவனுடைய ரஹ்மத் விசாலமானது என்று குறிப்பிட்டுள்ளான்.

🌸அல்வாஸிஃ என்ற பெயருக்கேற்ப, அல்லாஹ்வின் அன்பு, அறிவு, கருணை, அதே போல் அவனுடைய மன்னிப்பும் விசாலமானது.  இதை கீழே வரும் வசனங்களில் கூறியுள்ளான்.

🌼وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا  وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ  ۙ‏ 

🌼ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

📕 (அல்குர்ஆன் 2:268)

🌸(சூரா ஜுமர் :53) வது வசனம்

🌸சூரா பகரா : 2:261) வது வசனம்

ஆகிய வசனங்களில்  அல்லாஹ் விசாலமான மன்னிப்பை  வழங்குபவன்  என்று கூறியுள்ளான்.

🌹அல்லாஹ்,  அல்வாஸிஃ  என்று சொன்னால், அவன் அறிவால், அன்பால், கருணையால், மன்னிப்பால் விசாலமானவன்.

🌼اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَة

ِ‌🌼நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்;

📕 (அல்குர்ஆன் 53:32)

🌹அல்லாஹ்வின் மன்னிப்பையும், ரஹ்மத்தையும் பெறுவதற்கு நாம் ஆசை,ஆவல் கொள்ள வேண்டும்.  அல்லாஹ்வின் அறிவிலிருந்து எதுவும் தப்ப முடியாது.

🤲அல்லாஹ் நமது ஒவ்வொரு  அசைவையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து, அல்லாஹு தஆலாவிற்கு பொருத்தமானவர்களாக  இருக்க  அல்லாஹ் அருள் புரிவானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page