top of page
45. Al Muqeet.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 30

🌷அல்முகீத் ➖ المقيت

🍉அல்முகீத் என்ற பெயர் அல்குர்ஆனில் ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது.

🔖 அல்லாஹ் குர்ஆனில்

 ☘️وكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا‏

☘️அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன் 4:85)

🍉அல்முகீத் என்ற பெயருக்கு பல்வேறு அர்த்தங்களை அரபு மொழியில் காணமுடிகிறது.

🌸அல்ஹஃபீழ்- பாதுகாப்பவன்

🌸அல்முக்ததிர்- ஆற்றல்மிக்கவன், வல்லமை மிக்கவன்.

🌸அஷ்ஷஹீத்- கண்காணிப்பவன்.

🌸அல்காயிம் அலா குல்லி ஷய்யிம் பித்தத்பீர்- ஒவ்வொன்றையும் பராமரிக்கக் கூடியவன், நிர்வகிக்க கூடியவன்.

👆இவ்வாறான பல அர்த்தங்கள் உடைய பெயராக தான் அல்முகீத் என்ற பெயர் காணப்படுகிறது.

🍉அல்லாஹ்வை முகீத் என்று சொன்னால் அவன் தன்னுடைய அடியார்களுடைய விஷயத்தில் வல்லமை உடையவனாகவும் அவர்களை படைப்பதற்கு ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிற அதே நேரத்தில் அவர்களுடைய ரிஸ்க்கை பொறுப்பேற்றவனாகவும் இருக்கின்றான்.

🍉அதனால் சில அறிஞர்கள் அல் முகீத் என்பதற்கு உணவு வழங்கக் கூடியவன் என்றும் மொழிப்பெயர்ப்பு செய்வார்கள்.

🍉அல்லாஹ் மனிதனுடைய உணவை பொறுப்பேற்று இருக்கிறான்.

📖அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும் போது

☘️ومَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏ 

☘️பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு, அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தே தவிர இல்லை, அவை தங்குமிடத்தையும், அவை ஒப்படைக்கப்ப(ட்)டு (சேரு)மிடத்தையும் அவன் (நன்கு) அறிகிறவன் (இவை யாவும் (லவ்ஹூல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன.

📕 (அல்குர்ஆன் 11:6)

🍉பூமியில் உள்ள எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் ஊர்ந்து செல்லக்கூடிய எதுவாக இருந்தாலும் அதற்குரிய ரிஸ்க் அல்லாஹ்விடம் இல்லாமல் இல்லை என்று குறிப்பிடுகிறான்.

🍉மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்கள், பறவைகள் ஏனைய ஜீவராசிகள் அவை அனைத்திற்கும் உரிய ரிஸ்க்கை படைத்து அதை உரியவர்களுக்கு கொண்டு சேர்க்கின்ற பொறுப்பு அல்லாஹ்விடம் இருக்கிறது என்பதை இந்த முகீத் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது.

🎯முகீத் என்ற பெயரை சரியான பொருளோடு நாம் புரிந்து கொள்கின்ற நேரத்தில் ரிஸ்க்கு தொடர்பாக நம் வாழ்க்கையில் பதட்டமோ தடுமாற்றமோ ஏற்படாது. ஏனென்றால் நமது ரிஸ்கை அவன் தருவதாக வாக்களித்து இருக்கிறான் ஆகவே நமக்குரிய ரிஸ்க் நம்மை கண்டிப்பாக சேரும் என்ற நம்பிக்கையை இந்தப் பெயர் ஏற்படுத்தும்.

🍉முகீத் என்பதற்கு உடலுக்கு ரிஸ்கை தருவது போல் உள்ளத்திற்கும் ரிஸ்கை தரக் கூடியவன் என்ற அர்த்தமும் இருக்கிறது.

🍉 உள்ளத்திற்கு உரிய ரிஸ்க் என்பது அறிவும் ஈமானும் ஆகும்.

🍉அல்லாஹு தஆலா அல்முகீத் என்று நாம் அறிந்து, மனனம் செய்து, இந்தப் பெயர் சொல்லக்கூடிய பொருளை நாம் சரியாகப் புரிந்து கொள்கின்ற போது இந்த உலகத்தில் நிம்மதியாக சந்தோஷமாக வாழலாம். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கிறவர்களாகவும்  மாறலாம்.

🤲எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக செய்வானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page