top of page
44. Al Muheet.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 29

🌷அல்முஹீத் ➖ المحيط

🔷️அல்முஹீத் என்ற பெயர் அல் குர்ஆனில் 8 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

🌸ولِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ مُّحِيْـطًا

🌸வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்த(றிப)வனாக இருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன் 4:126)

🌸انَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏ 

🌸(ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயலை சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன் 3:120)

 🌸واللّٰهُ مُحِيْطٌ‌ۢ بِالْكٰفِرِيْنَ.

🌸அல்லாஹ் நிராகரிக்கும் இவர்களை (எப்பொழுதும்) சூழ்ந்துகொண்டு இருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன் 2:19)

🔷️அல்முஹீத் என்ற பெயர் அல்இஹாதா என்ற சொல்லில் இருந்து பிறந்தது.

🔷️இஹாதா என்றால்➖ சூழ்ந்துகொள்ளுதல் என்று அர்த்தம்.

🔷️அல்முஹீத் என்றால்➖ சூழ்ந்துகொள்ளக்கூடியவன். அல்லாஹுத்தஆலா அறிவாலும் ஆற்றலாலும் , வல்லமையாலும் அனைத்தையும் சூழ்ந்துக்கொள்ளக் கூடியவன்.

🔖அல்லாஹ் குர்ஆனில்

👇👇👇

 🌸واِذْ قُلْنَا لَـكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِ‌

🌸நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன் 17:60)

🌸لتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمً

🌸அல்லாஹ் நிச்சயமாக எல்லாவற்றிற்கும் ஆற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தன்னுடைய அறிவால் சூழ்ந்துள்ளான் என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

📕 (அல்குர்ஆன் 65:12)

 🌸واَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَاَحْصٰى كُلَّ شَىْءٍ عَدَدًا

 🌸அவர்களிடமுள்ள

 அனைத்தையும்  அல்லாஹ் சூழ்ந்து அறிந்துள்ளான.

📕 (அல்குர்ஆன் 72:28)

🔷️ஒரு மனிதன், அல்லாஹ் தன்னுடைய அறிவாலும் ஆற்றலும் வல்லமையும் சூழ்ந்து இருக்கிறான் என்பதை அறியும்போது, அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டை விட்டு வெளியே போவதற்கு விரும்பமாட்டான். அல்லாஹ் எதை விரும்புகிறானோ அதைத்தான் நான் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவான்.

🔷️அல்முஹீத் என்ற சொல் அல்லாஹ் அவனுடைய அறிவால் நம்மை சூழ்ந்து இருக்கிறான் . நான் செய்யக்கூடிய அனைத்தையும் அறியக்கூடியவனாக இருக்கிறான். எனவே நாம் அல்லாஹ்வுக்கு மாறு செய்யக்கூடாது என்கின்ற உணர்வை நமக்கு உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.

🔷அல்லாஹ் தன்னுடைய வல்லமையால் நம்மை சூழ்ந்துள்ளான். அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டிலிருந்து அவனுடைய பிடியிலிருந்து நாம் தப்பி ஓட முடியாது. எனவே அல்லாஹ்வுடைய அடிமையாக வாழ்வதை தவிர நமக்கு வேறு வழி இல்லை என்பதை இந்தப் பெயரை புரிந்து கொள்ளும்போது நாம் அறிந்து கொள்ளலாம்.

🤲எனவே அல்முஹித் என்ற இந்த பெயரை நாம் உணர்ந்து, மனப்பாடம் செய்து அதன்படி நாம் செயல்பட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page