


🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 32
🌷அல்வலீ ➖ الولى
🌷அல்மௌலா ➖ المولى
💧அல்லாஹ்வை அறிவது ஒவ்வொரு மீது கடமையாகும். இது ஃபர்ள் ஐன் ஆக உள்ளது. அல்லாஹுதஆலாவை ஒழுங்காக அறிந்தால் தான் கப்ரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். அஸ்மாஉல் ஹுஸ்னா மூலமாக நாம் அல்லாஹ்வை பற்றி அறிந்து வருகிறோம்.
💧அல்வலீ, அல்மௌலா என்ற இரண்டு பெயர்களின் அடிப்படை அல்விலாயா என்ற வார்த்தையிலிருந்து வந்துள்ளது.
💧அல்வலீ, அல்மௌலா என்ற பெயர்களுக்கு ➖இரட்சகன், அரசன், எஜமானன், அருள்பாளிப்பவன், விடுதலை செய்பவன், ,உதவி செய்பவன், நேசிப்பவன், நெருக்கமாக இருப்பவன் போன்ற கருத்துக்களை கொண்டுள்ளது.
💧அல்வலீ என்ற பெயர் அல்குர்ஆனில் பல இடங்களில் வந்துள்ளது. அல்மௌலா என்ற பெயர் 12 இடங்களில் வந்துள்ளது.
📖அல்லாஹ் குர்ஆனில்,
☘فَاللّٰهُ هُوَ الْوَلِىُّ وَهُوَ يُحْىِ الْمَوْتٰى وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
☘ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
📕 (அல்குர்ஆன் 42:9)
☘وَيَنْشُرُ رَحْمَتَهٗ وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ
☘இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
📕 (அல்குர்ஆன் 42:28)
ஆகிய வசனங்களிலும்,
☘وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآٮِٕكُمْ وَكَفٰى بِاللّٰهِ وَلِيًّا وَّكَفٰى بِاللّٰهِ نَصِيْرًا
☘மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
📕 (அல்குர்ஆன் 4:45)
👆👆ஆகிய வசனங்களிலும் வலீ என்ற பெயர் வந்துள்ளது.
1⃣
☘ّهُوَ مَوْلٰٮكُمْ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
☘அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
📕(அல்குர்ஆன் 22:78)
2⃣(சூரா ஹஜ் 78) வது வசனத்தில்,
3⃣(சூரா ஆல இம்ரான்: 3:150)
4⃣(சூரா தஹ்ரீம் : 66: 2)
👆ஆகிய வசனங்களில் மௌலா என்ற பெயரை குறிப்பிட்டுள்ளான்.
💎அல்லாஹு தஆலா அல்வலீ என்று சொல்லும்போது, நாம் அவனுடைய நெருக்கத்தை, நேசத்தை, உதவியை நாடக்கூடிய நிலை நம்மிடம் ஏற்படக்கூடியது.
💎பொதுவாக உலமாக்கள் விலாயா என்ற வார்த்தையை இரண்டு விதமாக நோக்குகிறார்கள்.
🌹விலாயா ஆம்மா (பொதுவான)➖ அனைத்து படைப்பினங்களையும், படைத்து நிர்வகிப்பவன், பராமரிப்பவன், குறிப்பாக மனிதர்களையும் பராமரிப்பவன்.
இந்த கருத்தை சூரா அல்அன்ஆம் 62வது வசனத்தில் குறிப்பிடுகிறான்.
☘ثُمَّ رُدُّوْۤا اِلَى اللّٰهِ مَوْلٰٮهُمُ الْحَـقَُِّ
☘பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்;
📕(அல்குர்ஆன் 6:62)
இதில் பொதுபடையாக அல்லாஹ் எல்லாரையும் பராமரிப்பவன் என்று குறிப்பிடுகிறான். குறிப்பாக காஃபிர்களையும், கெட்டவர்களையும் சொல்கிறான்.
💎விலாயா ஃகாஸ்ஸா ➖ (முஃமின்களுக்கு மட்டும் குறிப்பான) அல்லாஹ் முஃமின்களை, அவனுடைய அடியார்களை அவன் பராமரிப்பதும், உதவி செய்வதும், நெருக்கமாக இருப்பதும் ஆகும்.
☘اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ
☘அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள்;
📕 (அல்குர்ஆன் 2:257)
💎ஈமான் கொண்டவர்களுக்கு, நெருக்கமாகவும், நேசனாகவும், உதவி செய்பவனாகவும் இருக்கிறான்.
☘اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ
☘நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
📕 (அல்குர்ஆன் 7:155)
👆இந்த வசனத்தில் முஃமின்களுக்கு வலீயாக இருக்கிறான், அன்பு, இரக்கம் காட்டுகிறான், பாவங்களை மன்னிக்கிறான்.
☘اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
☘நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
📕 (அல்குர்ஆன் 2:286)
👆இதில் முஃமின்களுக்கு மௌலாவாக இருக்கிறான், எனவே காஃபிர்களுக்கு எதிராக இருந்து முஃமின்களுக்கு அவன் உதவி புரிகிறான்.
💧🌹விலாயா ஆம்மா (பொதுவான) என்று சொல்லும்போது அனைவருக்கும் ரிஸ்க் அளித்து, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து பராமரிப்பவன்.
💧🌹விலாயா ஃகாஸ்ஸா (குறிப்பான) என்று சொல்லும்போது முஃமின்களுக்கு உதவி செய்பவன், பாதுகாப்பவன், அன்பு, இரக்கம் காட்டுபவன், பாவங்களை மன்னிப்பவன்.
💧வலீ என்பதன் பன்மை அவுலியா. (இறை நேசர்கள்)
அல்லாஹ் தனக்கென்று அவுலியாக்களை ஏற்படுத்துகிறான். தன்னுடைய நேசர்களை அவுலியாவுல்லாஹ், அவுலியாவுர்ரஹ்மான் என்று குறிப்பிடுகிறான்.
💎அவுலியாக்கள் யார் என்பதை அல்லாஹ் தஆலா மட்டுமே அறிய முடியும். அவர்களின் தன்மையைப் பற்றி (சூரா யூனுஸ், வசனம் 62_64) வரை கூறுகிறான்.
☘اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
☘(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
📕 (அல்குர்ஆன் 10:62)
☘الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ
☘அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
📕 (அல்குர்ஆன் 10:63)
☘لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
☘அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
📕 (அல்குர்ஆன் 10:64)
💧அல்லாஹ்விற்காக வலீகள், அவுலியாக்கள் உலகம் அழியும் வரை பூமியில் இருப்பார்கள்.
🌹வலீகளில் சிறந்தவர்கள் நபிமார்கள்.
🌹நபிமார்களில் சிறந்தவர்கள் ரசூல்மார்கள்.
🌹ரசூல்மார்களில் சிறந்தவர்கள் உலூல் அஸ்ம் என்று சொல்லக்கூடிய 5 தூதர்கள்.👇
🌹நூஹ் (அலை), இப்ராஹிம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மது ﷺ.
🌹 இவர்கள் அனைவரிலும் சிறந்தவர் முஹம்மது ﷺ அவர்கள்.
🥦இவர்கள் அனைவரும் அவுலியாக்கள், சஹாபாக்களும் அவுலியாக்கள்.
🤲அல்வலீ, அல்மௌலா என்ற பெயர் அல்லாஹ் மீது ஆசையை, அவனின் நெருக்கத்தை, நேசத்தை ஏற்படுத்த கூடிய பெயராக அமைந்து, அதை புரிந்து வாழ நம் அனைவருக்கும் அருள் புரிவானாக, ஆமீன்.🤲

