top of page
43. Al Muhaymin.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 28

💐நம்மை படைத்து நமக்கு ரிஸ்க்கை  கொடுத்து எண்ணிலடங்கா நிஃமத்தை அளித்து கொண்டு இருக்கின்ற, அல்லாஹ் பற்றி அறிய வேண்டும் என்ற ஆசையோடு அவனுடைய திருநாமங்களை கற்று வருகிறோம்.

🌷அல்முஹைமின் ➖ المهيمن

📖அல் குர்ஆனில் ஒரு இடத்தில் இந்த பெயர் வருகிறது.

☘️هوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏ 

☘️அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

📕 (அல்குர்ஆன் 59:23)

🌼அல்லாஹ் இவ்வசனத்தில் பலபெயர்களை குறிப்பிட்டு இறுதியாக அல்முஹைமின் என்ற பெயரை பதிவுசெய்கிறான்.

🌼அல்முஹைமின் அரபியில் அல்ஹய்மனா  என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

🌼ஹய்மனா என்றால்➖ பாதுகாப்பு, கண்காணிப்பு ஆக்கிரமிப்பு, அதிகாரம் செலுத்துதல் என்ற அர்த்தங்களை கொண்டதாகும்.

🌼அல்முஹைமின் என்ற பெயருக்கு

🌱"அஷ்ஷஹித்"➖ கண்காணிப்பவன்

🌱"அல்அமீன்"➖ நம்பிக்கைக்கு உரியவன் என்ற அர்த்தம் வரும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

🌼அல்லாஹ், அல்முஹைமின் என்று சொன்னால் அதற்கு நாம் பல அர்த்தங்களை கொடுக்கலாம்.

🌱"அஷ்ஷாஹீது அலா ஃகல்கிஹி"➖'தன்னுடய  படைப்புகளை கண்காணிப்பவன்'  

☀️தன்னுடய படைப்புகளுடைய ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க கூடியவன்.  அவனிடம் எதுவுமே மறைந்து விடாது. அவனுடைய படைப்பினங்கள் செய்யக்கூடிய பேசக்கூடிய அனைத்தையும் உற்றுநோக்கியவனாக இருக்கிறான்.

☀️அல்லாஹு தஆலா தன்னுடைய அடியார்களுடைய காரியங்களையும் பராமரித்து கண்காணிக்கிறான்.

☀️அல்லாஹு தஆலா தன்னுடைய அடியார்களில் நாடியவர்களை பயத்திலிருந்தது பாதுகாத்து, நிம்மதியான, அமைதியான வாழ்க்கையை வழங்குகிறான்.

🌱அல்முஹைமின்➖ நாணயமானவன், நம்பிக்கையானவன் அல்லாஹ்விற்கு கட்டுப்படுபவர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் அவர்களுக்கு நிறைவான கூலிகளை கொடுக்கக்கூடியவன்.

☀️பாவிகளுக்கும் அவர்களுடைய பாவத்தை அள்ளி கொடுக்காமல் அவர்களுடைய பாவம் அளவிற்கு தண்டனையை கொடுக்கிறவன்.

🌼அல்முஹைமின், ➖உண்மை படுத்தக் கூடியவன்.

🍁அல்லாஹ் நபிமார்களை உண்மைப்படுத்தினான். அவர்களுக்கு முஃஜிஸத்களை கொடுத்து உண்மை ஆக்கினான்.

🎯ஒரு மனிதன் அல்லாஹ்வை அல்முஹைமின் என்று அறிந்து கொள்ளும்போது, அவன் அல்லாஹ்வின் சட்டங்களை பேணி நடக்க கூடியவனாகவும்,தன்னுடைய வார்த்தைகளையும்,செயல்களையும் அல்லாஹ் பொருந்தி கொள்ளும் வகையிலும் அமைத்துக்கொள்வான்.

🌼 அல்முஹைமின் என்ற அல்லாஹ்வின் பெயரை சரியான அர்த்தத்தோடு தெரிந்து ஈமான் கொண்டு அதற்கேற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

🤲ஓஎல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page