


🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 5
🌷 الْحَـىُّ ➖அல்ஹய்யு
🌷 الْقَيُّوْمُ ➖அல்கய்யூம்
🔅'அல்ஹய்யு' என்ற பெயர் அல்குர்ஆனில் 5 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
🔅'அல்கய்யூம்' என்ற பெயர் தனித்து வரவில்லை. அல்ஹய்யு என்ற பெயருடன் சேர்ந்தே அல்குர்ஆனில் 3 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: 👇
🍁 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ
🍁 அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. (அவன்) ஜீவனுள்ளவன், (என்றென்றும்) நிலைத்திருப்பவன், அவனை சிறு துயிலும், உறக்கமும், பீடிக்காது. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவையன்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் முற்றிலும் (மற்றெவரும்) அறிந்து கொள்ளமாட்டார்கள். அவனுடைய ‘குர்ஸிய்யு’ வானங்களிலும், பூமியிலும் விசாலமாக (பரவி) இருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது. மேலும் அவன் மிக்க உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.
📕 (அல்குர்ஆன் 2:255)
🍁اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ
🍁அல்லாஹ் (அவன் எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன். (என்றும்) நிலையானவன்.
📕 (அல்குர்ஆன் 3:2)
🍁وعَنَتِ الْوُجُوْهُ لِلْحَىِّ الْقَيُّوْمِ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا
🍁(அந்நாளில் அல்லாஹ்வான) நிலையானவனாகிய நித்திய ஜீவனுக்கு (முன்) யாவருடைய முகங்களும் கவிழ்ந்துவிடும், எவன் (இணையாக்குதல் என்னும்) அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.
📕 (அல்குர்ஆன் 20:111)
🔅'அல்ஹய்யு' என்றால் உயிரோடு இருப்பவன் என்பது அர்த்தமாகும்.
🔅அல்ஹய்யு என்கிற பெயருக்குள் 'அல்ஹயாத்' 'உயிரோடு இருத்தல்' என்கிற ஒரு ஸிஃபத் இருக்கிறது.
🔅எனவே அல்லாஹ் உயிரோடு இருப்பவன்.
🔅உயிரோடு இருப்பவன் என்றால் மவுத் இல்லாது உயிரோடு இருப்பவன்.
📜இதைப்பற்றி ஷேக் அப்துர் ரஸாக் அல் அப்பாத் அவர்கள் கூறும்போது; "அல்லாஹ்வின் பண்பான ஹயாத் என்பது, இல்லாமையில் (என்ற ஒரு நிலையில்) இருந்து வந்த ஹயாத் அல்ல. அழிதல் என்ற நிலை இல்லாத ஹயாத். எந்த குறையும் ஏற்படாத ஹயாத்" என்று கூறினார்கள்.
📌இந்த கருத்தை தான் அல்ஹய்யு என்ற வார்த்தை தருகிறது.
🍁وتَوَكَّلْ عَلَى الْحَـىِّ الَّذِىْ لَا يَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ وَكَفٰى بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرَ ا ۛ ۙ
🍁இறந்து விடமாட்டானே அத்தகைய உயிருள்ளவனின் மீது (உமது காரியங்களை ஒப்படைத்து அவன் மீது முழு) நம்பிக்கையும் வைப்பீராக! இன்னும், அவனின் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்வீராக! இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை நன்குணர்ந்திருப்பது அவனுக்குப் போதுமானதாகும்.
📕 (அல்குர்ஆன் 25:58)
📌இப்படி பல இடங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
🌹நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:
🌼"அன்த ஹய்யுல்லதீ லாயமூது."
🌼"நீ மரணமில்லா உயிருள்ளவன் என்று கூறினார்கள்."
🎯மனிதன் இல்லாமையில் இருந்து வந்தவன். அழிந்து விடக் கூடியவன்.
🌹அல்லாஹ் இல்லாமை என்ற ஒரு நிலை இல்லாத ஹய். அழிந்து விடாத ஹய். இந்த ஹய்யு என்கிற பெயருக்குள் இருக்கும் ஹயாத் என்கிற பண்பு தான் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கி வழிபட தகுதியானவன் என்பதை வலியுறுத்துகிற மிக முக்கியமான ஒரு பண்பு.
📖 ஆயத்துல் குர்ஸியில்:
🍁اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ
🍁அல்லாஹ் (அவன் எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன். (என்றும்) நிலையானவன். என்று அல்லாஹ் இதை கூறுகிறான்.
🎯எனவே நாம் ஒருவரை வணங்க வேண்டும் என்றால், வணங்க தகுதியானவராக அவர் இருக்க வேண்டும் என்றால் அவர் இல்லாமை என்ற ஒரு நிலையில் இருந்து வராத ஒரு ஹய்யாகவும், மரணிக்காமல் என்றென்றும் உயிர் வாழ கூடிய ஒரு ஹய்யாகவும் அவர் இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான அடிப்படையாக இருக்கிறது.
🔆'அல்கய்யூம்'➖ என்றால் தன்னுடைய காரியங்களைத் தானே நிறைவேற்றிக் கொண்டு தன்னுடைய படைப்புகளையும் பராமரிக்கிறவன் என்பது அதனுடைய அர்த்தமாக இருக்கிறது.
🎯அல்கய்யூம் என்பதை நிலையானவன் என்று கூறுகிறோம். அதைவிட தன்னுடைய எல்லா காரியங்களையும் தானே நிறைவேற்றுபவன். (தன் படைப்புகளிடம்) அடியார்களிடம் எந்த தேவையும் அற்றவன் என்று புரிந்து கொண்டால் அல்கய்யூம் என்ற பெயர் நம்மிடம் சரியான முறையில் செல்வாக்கு செலுத்த கூடியதாக இருக்கும்.
🌹'அல்ஹய்யு, அல்கய்யூம்' என்ற இந்த இரண்டு பெயர்களும் உலமாக்கள்
' اسماء الأعظم'
அல்லாஹ்வின் மகத்தான பெயர்கள் என்று கூறுகிறார்கள்.
🌹ஒரு சஹாபி துஆ செய்யும் போது அல்ஹய்யு அல்கய்யூம் என்று துஆ செய்வதை கண்ட நபி ஸல் அவர்கள்; "அல்லாஹ்வின் மகத்தான பெயர்களை கொண்டு இவர் துஆ செய்துவிட்டார். எனவே அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றி விடுவான்" என்று கூறினார்கள்.
🌹எனவே 'யா ஹய்யு, யா கய்யூம்' என்று அல்லாஹ்வின் இரண்டு பெயர்களை கூறி துஆ கேட்டால் நம் தேவைகள் நிறைவேறும் என்பது இந்த இரண்டு பெயர்களுக்கும் இருக்கும் ஓர் சிறப்பம்சமாக இருக்கிறது.
📌எனவே இந்த இரண்டு பெயர்களையும் புரிந்து மனப்பாடம் செய்ய முயற்சி செய்வோம்.

