top of page
41. Al Kareem.jpg
42. Al Akram.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 27

💐அல்லாஹ்வைப் பற்றி அறியாமல் வாழ்கிற மனிதனைவிட துர்பாக்கியசாலி, நஷ்டவாளி வேறு யாரும் இல்லை.

💐இப்பிரபஞ்சத்தை படைத்து அதில் உள்ளவற்றை படைத்து பரிபாலித்து கொண்டிருக்கின்ற அல்லாஹ்வைப் பற்றி அறிவது கட்டாயக் கடமையாகும்.

🌷அல்கரீம் ➖ الكريم

🌷அல்அக்ரம் ➖ الاكرم

🍁அல்கரீம் என்ற பெயர் அல்குர்ஆனில் மூன்று இடங்களில் வந்துள்ளது.

1⃣

🌸قالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏ 

🌸இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.

📕 (அல்குர்ஆன் 27:40)

2⃣

🌸ياَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ‏ 

🌸மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

📕 (அல்குர்ஆன் 82:6)

3⃣

🌸فتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌  لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ رَبُّ الْعَرْشِ الْـكَرِيْمِ‏ 

🌸ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!

📕 (அல்குர்ஆன் 23:116)

🍁அல்அக்ரம் (الاكرم)

"🌸اقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏ 

🌸ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

📕 (அல்குர்ஆன் 96:3)

🍁அல்கரீம் , கரம் என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும்.

🍁கரம் என்றால் அதிக நன்மை, அதிக பயன் என்ற அர்த்தம் தரும்.

🍁நபி ﷺ அவர்கள் யூசுப் (அலை) அவர்கள் பற்றி  சொல்லும் போது "இன்னல்கரீம இப்னுல் கரீம் யூசுப் இப்னு யாகூப்."

கரீமுடைய மகன் கரீம் யூசுப் ஆகும் என்று சொன்னார்கள்.

🍁யூசுப் (அலை) அவர்களுக்கு - நபித்துவம், அதிக அறிவு ஞானம், அதிக அழகு

கொடுக்கப்பட்டது .

இதை  நபி ﷺ அவர்கள் அல்கரீம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள்.

🍁அல்லாஹ்வுடைய கலாமாகிய அல்குர்ஆனை அல்லாஹ் கரீம் என்று சொல்கிறான்.👇

🌸انَّهٗ لَـقُرْاٰنٌ كَرِيْمٌۙ‏ 

🌸நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும்.

📕 (அல்குர்ஆன் 56:77)

🍁அல்லாஹ் தன் அர்ஷை பற்றி சொல்லும்போது அல்கரீம் என்று குறிப்பிடுகிறான்.

🍁சொர்க்கத்தில் நல்லடியார்களுக்கு தயார் செய்து வைத்திருக்கும் நன்மைகளை பற்றி சொல்லும்போது அல்கரீம் என்று சொல்கிறான்,

👇👇

🌸اولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ‌ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‌‏ 

🌸இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.

📕(அல்குர்ஆன் 8:4)

🌸 ن تَجْتَنِبُوْا كَبٰٓٮِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْـكُمْ مُّدْخَلًا كَرِيْمًا‏ 

🌸நங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.

 📕 (அல்குர்ஆன் 4:31)

🌸اوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ‏ 

🌸அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கின்றோம்.

📕(அல்குர்ஆன் 26:7)

🍁இப்படி நன்மைகள் அதிகமாக நிறைந்த ஒன்றை குறிப்பிடுவதற்கு அல்லாஹ் கரீம் என்று சொல்கிறான்.

🍁அந்த வகையில் அல்லாஹ் அல்கரீம் என்று சொன்னால் நன்மைகள் நிறைந்தவனாகவும் வாரி வழங்க கூடியவனாகவும் இருக்கிறான். அவனை விட தன் அடியார்களுக்கு அதிகமாக வாரி வழங்குகின்ற ஒருவரும் இல்லை என்பதையும் இந்த பெயர் உணர்த்துகிறது.

🎯கரீம் என்ற சொல்லின் அதிகபட்சமான நிலையை  உணர்த்துவதுதான் அல்அக்ரம் என்ற சொல்லாகும்.

அல்லாஹு தஆலா கரீம் என்றால் அவனிடம் இருந்து கிடைக்கக்கூடிய கொடைகள் தொடர்ச்சியாக கிடைக்கிறது என்ற அர்த்தத்தையும் அது பிரதிபலிக்கிறது.

🍁அல்கரீம் என்பது➖ அல்லாஹ்விடமிருந்து நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும் என்பதையும் இது குறிக்கும். குறைகளை விட்டும் நீங்கியவன் என்ற அர்த்தத்தையும் இது தருகிறது.

🌸الَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَسْجُدُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَ الْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَكَثِيْرٌ مِّنَ النَّاسِ‌  وَكَثِيْرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ‌ وَمَنْ يُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ‌ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يَشَآءُ ۩  ‏ 

🌸வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.

📕 (அல்குர்ஆன்  22:18)

🍁 அல்லாஹ்தான் தன் அடியார்களுக்கு கொடுக்கிறான். அவன் ஒன்றை  தன் அடியார்களுக்கு  கொடுத்து விட்டால் அவனை விட சிறப்பாக கொடுப்பதற்கு யாரும்  இல்லை என்பதை இந்த அல்கரீம் என்ற வார்த்தை மேல் உள்ள வசனத்தில் அறியலாம்.

🎯அல்லாஹு தஆலா நன்மைகள் நிறைந்தவன் தாராளமாக தன் அடியார்களுக்கு கொடுக்கக் கூடியவன். பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் கொடுக்கக் கூடியவன் என்பதையும் இந்த அல்கரீம் என்ற அல்லாஹ்வின் தன்மையிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

🍁அல்லாஹ்விடம் நெருங்கக் கூடிய அடியானை கைவிடமாட்டான்.

🌸انَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ مَنْ اَحْسَنَ عَمَلًا‌ ‏ 

🌸(எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை.

📕 (அல்குர்ஆன் 18:30)

🍁அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவனிடம் நாம் சென்று விட்டால் அவன் கரீம். நிச்சயமாக கூலிகள் எதையும் வீணாக்காமல் முழுமையாக கொடுக்கக் கூடியவன்.

🍁அல்லாஹ் அல்கரீம் ஆக இருப்பதினால் தான் நம்மிடம் அவன் என்னிடம் கேளுங்கள் நான் தருகிறேன் என்று சொல்கிறான்.

🌸وقَالَ رَبُّكُمُ ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْ 

🌸இன்னும், உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன்,

📕 (அல்குர்ஆன் 40:60)

🎯அல்லாஹ் அல்கரீம் அல்அக்ரம் என்ற தன்மையுடையவன் என்று நாம் புரியும் பொழுது அல்லாஹ்விடம் நன்மைகளை நாடக் கூடியவர்களாகவும் அந்த நன்மைகளுக்காக முயற்சி செய்பவர்களாகவும் மாற முடியும்.

🤲எல்லாம் வல்ல அல்லாஹ் (அல்கரீம்) நமக்கு தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page