top of page
40. Al Ghaniyy.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 26

🌷அல்ஃகனி (الغني) ➖தேவைகளற்றவன்

🔮அல்ஃகனி என்ற பெயர் அல்குர்ஆனில் 18 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

1⃣

🍁ورَبُّكَ الْغَنِىُّ ذُو الرَّحْمَةِ ‌ اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْ بَعْدِكُمْ مَّا يَشَآءُ كَمَاۤ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّيَّةِ قَوْمٍ اٰخَرِيْنَ ‏ 

🍁உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்று - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.

📕 (அல்குர்ஆன் 6:133)

2⃣

🍁ياَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَى اللّٰهِ وَاللّٰهُ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏ 

🍁மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.

📕 (அல்குர்ஆன் 35:15)

3⃣

🍁للّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏ 

🍁வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.

📕 (அல்குர்ஆன் 31:26)

🔮அரபுமொழியில், அல்ஃகனி என்றால் தேவையற்றவன், செல்வந்தன் என்ற அர்த்தங்கள் இருக்கின்றன.

🔮அல்லாஹ் அல்ஃகனி என்று சொன்னால், அந்தப்பெயர் உள்ளடக்கி இருக்கக்கூடிய அர்த்தம் மிக ஆழமானதும், விரிவானதும் ஆகும்.

🔮அல்லாஹு தஆலா தன்னுடைய 'தாத்'தில் யாருடைய தேவையும் அற்றவனாக இருந்து கொண்டிருக்கிறான். அவனுடைய தாத் யாரின் பாலும் எந்த தேவையும் அற்ற நிலையில் இருக்கிறது.

🔮நாம் எல்லோரும் அல்லாஹ்வுடைய தேவையுள்ளவர்கள், ஆனால், அல்லாஹ், அவனுடைய  செயல்களிளும்,  ஸிஃப்பத்துக்களிளும் யாரிடமும் எந்த தேவையும் இல்லாத நிலையில் இருக்கிறான்.

🔮அல்லாஹ் அல்ஃகனியாக இருப்பதனால் தான், இந்த உலகத்தில் உள்ள அத்தனை மக்களும் அல்லாஹ்வை வணங்கினாலும், அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டாலும், அதனால் அல்லாஹ்வுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

🔮நபி ﷺ அவர்கள் அறிவித்தார்கள், ஒரு ஹதீஸுல் குத்ஸியில் அல்லாஹ் கூறுகிறான்:

🍁"என்னுடைய அடியார்களே நீங்கள் எனக்கு எந்த வகையிலும் பிரயோஜனம் அளிக்கவோ, அல்லது எந்த வகையிலும் தீங்கிழைக்கவோ முடியாது"

📕 (ஸஹீஹ் முஸ்லிம்)

🔮நாம் செய்கின்ற எந்த ஒரு செயலாலும், அல்லாஹ்வுடைய அந்தஸ்து கூடுவதும் இல்லை, குறைவதும் இல்லை.

🔮நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளால், அல்லாஹ் பயனடைகிறான் என்று நாம் எண்ணவும் கூடாது, ஏனென்றால் அல்லாஹ் அல்ஃகனியாக இருக்கிறான்.

🔮அல்லாஹ் தேவையற்றவனாக, நிரப்பமான செல்வந்தனாக இருப்பதனால், அவனுடைய அடியார்கள் கேட்பதையெல்லாம் வாரி வாரி வழங்குகிறான்.

🔮அல்லாஹ் அல்ஃகனி என்ற தேவையற்ற ரஹ்மானாக  இருப்பதனால், படைப்பினங்களுக்கு இருக்கிற எல்லாவிதமான குறைபாடுகளை விட்டும் அவன் நீங்கியவனாக இருக்கிறான்.

🔮அல்லாஹ்வுக்கு மனைவியோ, குழந்தைகளோ, ஆட்சியில் துணையோ, உதவியாளர்களோ அல்லது அவனுக்கு நிகராக யாரும் எவரும் கிடையாது என்று அல்குர்ஆனில் அல்லாஹ் அடையாளப்படுத்துகிறான்.

🔮அல்லாஹ் அல்ஃகனியாக இருப்பதனால் தான், தன்னுடைய ஏழையான அடியார்களைப் பார்த்து தன்னிடம் கேட்கச் சொல்கிறான்.

🍁மனிதர்களிடம் எதையாவது தேவை என்று கேட்டால் ஒரு தடவை அல்லது இரு தடவை செய்வார்கள். பல தடவைகள் உதவி கேட்டால் சலிப்படைந்து விடுவார்கள்.

🔮அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு கேட்பதை கொடுப்பதனால், அவனுடைய ஆட்சியிலிருந்தோ அவனுடைய கஜானாவிலிருந்தோ எதுவுமே குறையாது. அதனால் தான் அல்லாஹ் தன் அடியார்களை பார்த்து; "என்னிடம் கேளுங்கள் நான் உங்களுக்கு தருகிறேன்" என்று கூறுகிறான்.

🔮நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:👇

"யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ, அவர் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்".

🔮அல்லாஹ் அல்ஃகனி என்பதனால், அவனுடைய அடியார்களை அவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுகிறான்.

🔮அல்லாஹ் தன்னுடைய அடியார்களிடத்தில் எந்த தேவையுமற்றவனாக இருப்பதினால், தன்னுடைய அடியார்களில் அவன் விரும்பியவர்களை செல்வந்தனாக ஆக்குகிறான் என்பதை அல்குர்ஆனில் கூறுகிறான் :

وَاَنَّهٗ هُوَ اَغْنٰى وَ اَقْنٰىۙ‏ 

🍁நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.

📕 (அல்குர்ஆன் 53:48)

🎯அல்லாஹ் தான்  உண்மையான செல்வந்தன், எந்த தேவையுமற்ற ரப்புல் ஆலமீன் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, நிச்சயமாக நாம் அனைவரும் அல்லாஹ்விடம் தேவையுள்ளவர்கள் என்பதை நாம் உணரலாம்.

🎯மற்ற மனிதர்கள் மத்தியில் வாழும் போது நாம் தேவை உள்ளவன் தான் என்ற உணர்வோடு வாழலாம்.

🎯நாம் அல்லாஹ்விடம் தேவையுள்ளவர்கள் என்ற உணர்வோடு வாழும் பொழுது, நம்மிடம் பணிவு வரும், மற்ற மனிதர்களை மதிக்கும் தன்மை வரும், மேலும், நிச்சயமாக நம்மிடம் பெருமை வராது.

 

🤲எனவே, அல்ஃகனி என்ற பெிந்து, அதற்கேற்ப வாழ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page