top of page
18. As Samad.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 11

🌷அஸ்ஸமத் ➖ الصمد

💜அரபு மொழியில் "அஸ்ஸமத்" என்ற வார்த்தைக்குரிய அர்த்தம்:

🔆"அஸ்ஸயீத் அல்முத்ஆ" -  மக்கள் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய எஜமானன் என்ற அர்த்தம்.

🔆 மற்றொரு அர்த்தம் "அஸ்ஸமத்"- மிகவும் உயர்ந்தவன் என்று இருக்கிறது.

👆👆

அரபு மொழியில் இந்த இரண்டு அர்த்தமும் உள்ளது.

💜அல்லாஹ்- எஜமானன்.

அதிலே அவன் பூரணத்துவமானவன். எஜமானிய பண்பிலே பூரணமானவனாக இருக்கிறான் என்பது ஸமத் உடைய அர்த்தமாக இருக்கிறது.

💜பூமியில் உள்ள அனைத்து படைப்பினங்களும், மனித, ஜின் மற்றும் ஆகாயத்தில் உள்ள அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ் விடத்தில் தேவையுள்ளதாக இருக்கிறது என்பது ஸமத் உடைய அர்த்தமாக இருக்கிறது.

📜சில இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள்,

👇👇👇

மனிதனுக்கு வயிறு இருக்கிறது, அதனால் அவனுக்கு பசி என்பது இருக்கிறது. இப்படியான நிலை அல்லாஹ்விற்க்கு கிடையாது.

💜அல்லாஹ் -அஸ்ஸமத்

அவன் சாப்பிடக்கூடிய தேவை கிடையாது, குடிக்க வேண்டிய தேவை கிடையாது.

மாறாக உண்ண கொடுக்கிறவனாகவும், குடிக்க கொடுக்கிறவனாகவும் இருக்கிறான். இதனால் தேவையற்றவன் என்ற அர்த்தம் ஸமத் என்பதற்க்கு வருகிறது.

💜அஸ்ஸமத் என்பதற்க்கு தேவையற்றவன் என்று பொருள் கொடுக்கும்போது அந்த ஸமத் உடைய பூரணமான பொருள் நமக்கு வராது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும்போது,👇👇

☘️اللّٰهُ الصَّمَدُ‌ ‏ 

☘️அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

☘️لمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏ 

☘️அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

📕 (அல்குர்ஆன் 112:2,3)

💜அல்லாஹ் -அஸ்ஸமத் என்பதினால் அவன் யாராலும் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை என்று சொல்கிறான்.

💜அல்லாஹ்- அஸ்ஸமத் என்பதினால் அவனுக்கு வாரிசுகள் கிடையாது.  மவுத் என்பது இல்லை , என்பதை ஸமத் என்ற வார்த்தை உணர்த்துகிறது.

💜அஸ்ஸமத் என்றால்- மக்கள், படைப்புகள் அனைத்துமே வழிபடக்கூடிய எஜமானன் என்ற அர்த்தமாக இருக்கிறது.

💜ஸமத் என்பது -அந்தஸ்த்தால் உயர்ந்தவன், பண்புகளால் விசாலமானவன்,

என்கிற கருத்துக்கள் இருப்பதாகவும் உலமாக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

💜ஸமத் என்பது-மிக உயர்ந்தவன் என்கிற அர்த்தமும் இருக்கிறது.

💜அல்லாஹு தஆலா அவனுடைய "தாத்"தால் உயர்ந்தவன்.

⚡️"தாத்"தால் உயர்ந்தவன்  என்றால் படைப்புகளை விட்டு ஏழு வானங்களுக்கு மேல் அர்ஷின் மேல் உயர்ந்திருக்கிறான் என்ற அர்த்தமும் ஸமத் என்ற வார்த்தைக்கு இருக்கிறது.

💜அல்லாஹுடைய அனைத்து பண்புகளுமே உயர்ந்த பண்புகள்.

அது எந்த பண்பாக இருந்தாலும் சரி, மிக உயர்ந்த பண்பாக தான் இருக்கும்.

📜 இமாம் இப்னு கஸீர் رحمه الله குறிப்பிடும்போது

👇👇

 ஸமத் என்றால்- لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ அவனைப்போன்று ஒன்றுமில்லை என்ற அர்த்தத்திலும் ஸமத் என்ற வார்த்தையை புரிய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

 📝 இதற்கு ஆதாரமாக சூரத்துல் இஹ்லாஸ் உடைய கடைசி ஆயத்தை குறிப்பிடுகிறார்கள்.

  ☘️ولَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏ 

☘️அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

📕(அல்குர்ஆன் 112:4)

⚡️எனவே ஸமத் என்றால்-  அல்லாஹ்வைப் போன்று ஒன்றுமில்லை, அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்ற கருத்தும் இருக்கிறது.

⚡️எல்லாப் படைப்புகளும் தங்களுடைய தேவைகளின் போது நாடப்பட வேண்டியவன் என்ற அர்த்தமும் ஸமத் என்பதற்க்கு இருக்கிறது.

💜அல்லாஹ் உடைய பெயர்களில் அஸ்ஸமத் என்பது இத்தனை அர்த்தங்களையும்  உள்ளடக்கி இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

🎯உண்மையில் ஒரு மனிதன் அல்லாஹ் ஸமத் என்பதை புரிந்துகொள்ளும்போது,

👍அல்லாஹ்வின் பால் தான் எவ்வளவு தேவை உள்ளவன் என்பதை புரிந்து கொள்கிறான்.

👍மனிதனுக்கு என்ன சூழ்நிலை வந்தாலும் அவனுடைய உள்ளம் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே திரும்பும்.

👍அல்லாஹ்விடத்திலே மட்டும்தான் பிரார்த்திப்பான்,

👍அல்லாஹ்விடத்திலே மட்டும்தான் மன்றாடுவான்,

👍அல்லாஹ்விடத்திலே மட்டும்தான் முறையிடுவான் .

என்பதை இந்த ஸமத் வலியுறுத்தக்கூடிய மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது.

 🤲எனவே அன்புள்ள சகோதரிகளே, "அஸ்ஸமத்" என்கிற வார்த்தையை சரியாக புரிந்து, அதன் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக..!!!🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page