top of page
12. 13. Al Malik & Al Maalik.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

 

💠 பாகம் 8

🌷الملك ➖அல்மலிக்

🌷المليك ➖ அல்மலீக்

🔮அல்மலிக் என்ற பெயர் அல்குர்ஆனில் ஐந்து இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

🔮அல்மலீக் என்ற பெயர் அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

🍁انَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّنَهَرٍۙ‏

🍁நிச்சயமாக பயபக்தியுடையோர் சுவனபதிகளிலும் (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள்.

📕 (அல்குர்ஆன் 54:54)

🍁فىْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ‏

🍁(மெய்யாகவே) மிக்க உண்மையான இருக்கையில், மிக்க சக்தி வாய்ந்த அரசனிடத்தில் இருப்பார்கள்.

📕 (அல்குர்ஆன் 54:55)

🔮இந்த இரண்டு பெயர்களுமே அல்லாஹ்வுக்கு முல்க் என்ற ஒரு ஸிஃபத் இருப்பதை  உணர்த்துகிறது.

🔮முல்க் என்றால் ஆட்சி அதிகாரம் என்பது நேரடியான அர்த்தம்.

🔮முல்க் என்ற சொல் மூன்று விஷயங்களை உணர்த்துவதாக ஷேக் அப்துர் ரஸாக் இப்னுல் அப்பாத் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்:

🌸முதலாவதாக: 'அல் மலிக்' என்ற இந்த பெயருக்குள் இருக்கும் 'முல்க்' என்ற ஸிஃபத்தின் அர்த்தம்  அதிகாரம் என்பதாகும்.

அதிகாரம் என்றால் பலம், கண்ணியம், சக்தி, பூரணமான அறிவு, எல்லாவற்றையும் நிறைவேற்றக் கூடிய தன்மை, எல்லாவற்றை நிர்வகிக்கக் கூடிய ஆற்றல், அன்பு, இரக்கம், பூமியில் உள்ளவை, வானத்தில் உள்ளவை எல்லாவற்றையுமே நிர்வகிக்கின்ற அந்த தன்மையை தான் முல்க் என்பது குறிக்கும்.

🍃இதற்கு அவர்கள் கூறும் ஆதாரம்:

🍁ولِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

🍁வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

📕 (அல்குர்ஆன் 3:189)

🍁الْمُلْكُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ لِلرَّحْمٰنِ‌ وَكَانَ يَوْمًا عَلَى الْكٰفِرِيْنَ عَسِيْرًا‏ 

🍁அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மா(ன் ஒருவ)னுக்கே இருக்கும், மேலும், நிராகரிப்போருக்கு அது (மிக்க) கடினமான நாளாகவும் இருக்கும்.

📕 (அல்குர்ஆன் 25:26)

🍁يوْمَ هُمْ بَارِزُوْنَ  لَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْهُمْ شَىْءٌ  لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ  لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ‏ 

🍁(மரணித்த) அவர்கள் (மண்ணறைகளிலிருந்து) வெளிப்பட்டவர்களாக வரும் நாளில், அவர்களிலிருந்து எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது, “ஆட்சி, இன்று யாருக்குரியது?” (என்று கேட்டுவிட்டு, அதற்கு விடையாக, “யாவரையும்) அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” (என்று அவன் கூறுவான்).🍁

📕 (அல்குர்ஆன் 40:16)

🌸இரண்டாவது: 'அல்லாஹ் அல்மலிக் அல்லது அல்மலீக் எனும் போது அவனுடைய படைப்புகளான மலக்குகள், ஜின்கள், மனிதர்கள், விலங்குகள் அனைத்துமே அல்லாஹ்வுடைய அடிமைகள் என்பதை  இந்த பெயர்கள் உணர்த்துகிறது.

🌸மூன்றாவதாக: 'அல்லாஹ் இந்த பிரபஞ்சத்தை அவன் விரும்பியபடி நிர்வகிக்கின்ற ஆற்றலும் வல்லமையும் உள்ளவன்' என்பதை மலீக் என்கிற பெயர் உணர்த்துகிறது.

📜இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹி) அவர்கள் கூறும் போது, 'முல்க் என்பது ஆட்சி அதிகாரம். அது அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. அதாவது ஒன்றை கொடுப்பது, தடுப்பது, கண்ணியப்படுத்துவது, இழிவுபடுத்துவது, கூலி கொடுப்பது, தண்டனை கொடுப்பது, கோபிப்பது, பொருந்திக் கொள்வது, விரும்பியவர்களை கண்ணியப்படுத்துவது, விரும்பியவர்களை இழிவுபடுத்துவது, போன்ற அனைத்தையும் உள்ளடக்கக் கூடிய ஒன்று' என்று கூறுகிறார்கள்.

 

🍃இதற்கு ஆதாரமாக உள்ள வசனம்:

🍁قلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌  بِيَدِكَ الْخَيْرُ‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 

🍁(நபியே!) பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே (இம்மை மறுமையின் சகல) ஆட்சிக்கும் அதிபதியே” நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய். மேலும், நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய், இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய் நன்மை(யாவும்) உன் கைவசமே (இருக்கின்றது). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

📕 (அல்குர்ஆன் 3:26)

🍁توْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ‌ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏ 

🍁“நீ இரவைப் பகலில் நுழையச் செய்கின்றாய், இன்னும் நீ பகலை இரவில் நுழையச் செய்கின்றாய், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும் நீயே வெளியாக்குகின்றாய், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் நீயே வெளியாக்குகின்றாய், மேலும் நீ நாடியவர்களுக்குக் கணக்கின்றியே அளிக்கின்றாய்.”

📕 (அல்குர்ஆன் 3:27)

🔮எனவே, அல்லாஹு தஆலா அல்மலிக், அல்மலீக் என்றால் இந்த இரண்டுபெயர்களும் உள்ளடக்கி இருக்கின்ற முல்க் என்ற ஒரு ஸிஃபத் அவனிடம் இருக்கும்போதுதான் அவன் வணங்குவதற்கு தகுதியானவனாக கருதப்படுவான்.

🔮அந்த பூரணத்துவமான முல்க் இல்லாத ஒருவன் வணக்கங்கள் எதற்கும் தகுதி பெற மாட்டான்.

🍃இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

🍁يوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ‌  كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى  ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ  وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍ‏ 🍁அவனே இரவைப் பகலில் நுழையச் செய்கிறான், இன்னும், பகலை இரவில் நுழையச் செய்கிறான், சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருக்கிறான், (இவை) ஒவ்வொன்றும் (அதற்குக்) குறிப்பிடப்பட்ட தவணைப்படியே செல்கின்றன, (இத்தகைய தகுதிகளுக்குரிய) அவன்தான் உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்; அரசாட்சி அவனுடயதே! இன்னும், அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள், ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

📕 (அல்குர்ஆன் 35:13)

🍁انْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَآءَكُمْ‌  وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَـكُمْ  وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ  وَلَا يُـنَـبِّـئُكَ مِثْلُ خَبِيْرٍ‏ 

🍁அவர்களை நீங்கள் அழைத்தபோதிலும், உங்களுடைய அழைப்பை அவர்கள் செவியுறமாட்டர்கள், அவர்கள் செவியேற்ற போதிலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள், மறுமை நாளிலோ நீங்கள் (அவர்களை) இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள். (விஷயங்களை) அறிந்தவனைப் போல் (மற்றெவரும்) உமக்கு(ச் செய்திகளை) அறிவிக்கமாட்டார்.

📕 (அல்குர்ஆன் 35:14)

👆மேற்கண்ட வசனத்தில் அல்லாஹு தஆலா ஷிர்க் எனும் இணை  வைக்கக்கூடியவர்களை நோக்கி; அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கக்கூடியவைகள் கடுகளவு போன்ற ஆக குறைந்த அளவு கூட  எந்த முல்க்கும், எந்த அதிகாரமும் இல்லாதவர்கள். எனவே எந்த அதிகாரமும் இல்லாத ஒருவர் நிச்சயமாக வணங்கி வழிப்பட தகுதியானவராக இருக்க முடியாது என்று கூறுகிறான்.

🎯எனவே அல்லாஹ் "அல்மலிக்"  "அல்மலீக்" என்று நாம் பார்க்கிறபோது, நிச்சயமாக அவன்தான் இந்த பிரபஞ்சங்கள் அனைத்துக்கும் சொந்தக்காரன் என்ற உணர்வு நம்மிடத்தில் வரவேண்டும்.

🎯நாம் அல்லாஹ்வுடைய அடிமைகள் என்கிற  உணர்வும் வரவேண்டும்.

☘️அவ்வாறு நாம் உணர்ந்தால்👇🏼👇🏼 அல்லாஹ்வை பற்றிய கண்ணியம் நம்மிடம் வரும்.

☘️நம்மிடம் இயல்பாகவே பணிவு வரும்.

☘️அப்போது அல்லாஹ்வை சரியான முறையில் கண்ணியப்படுத்த கூடியவர்களாகவும்,

☘️அவனுக்கு அடிமைப்பட்டு வாழக் கூடியவர்களாகவும்,

☘️மற்ற மனிதர்களை மதிக்க கூடியவர்களாகவும் நாம் மாறமுடியும்.

🤲எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா அப்படியான நிலையை நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக ஆமீன்.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page