top of page
51. Al Akhir.jpg
52. Az Zahir.jpg
53. Al Baatin.jpg
54. Al Awwal.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 35

🌷الاول

🌹அல்அவ்வல் ➖ ஆரம்பமானவன்

🌷الاخر

🌹அல்ஆஃகிர் ➖ இறுதியானவன்

🌷الظاهر

🌹அழ்ழாஹிர் ➖உயர்ந்தவன்

🌷الباطن

🌹அல்பாதின் ➖மறைவானவன்

👆மேல்கூறப்பட்ட நான்கு பெயர்களும் இடம்பெற்றிருக்கும் குர்ஆன் வசனம் :

🌸هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ 

🌸(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.

📕 (அல்குர்ஆன் 57:3)

🏮இந்த நான்கு பெயர்களும் ஒரே வசனத்தில் இடம் பெற்றிருப்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.

🏮இந்தப் பெயர்களை சரியாக புரியாத காரணத்தினால், இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ்வைப் பற்றிய மிகப் பெரிய ஒரு வழிகேடு தோன்றிருப்பது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

🏮வஹ்ததுல் வுஜூத் என்று சொல்லக்கூடிய எல்லாமே அல்லாஹ் தான் என்கிற இஸ்லாத்தை விட்டு வெளியேற்ற கூடிய மிக மோசமான கொள்கையை உருவாகுவதற்கு இந்த பெயர்கள் பற்றிய சரியான புரிதல் இல்லாததே காரணம் ஆகும்.

🏮இந்த நான்கு பெயர்களின் அர்த்தத்தை, நபி ﷺ அவர்கள் ஒரு ஹதீஸின் மூலம் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

🏮இந்த நான்கு பெயர்களை நாம் தினமும் ஓத வேண்டும் என்பதற்காக, தூங்குவதற்கு முன் நபி ﷺ அவர்கள் நமக்கு ஒரு துஆவை கற்றுத் தந்தார்கள்:

🌸اَللّٰهُمَّ رَبَّ السَّمٰوَاتِ السَّبْعِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْـحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْـجِيْلِ وَالْفُرْقَانِ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ م بِنَاصِيَتِهِ اَللّٰهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَّأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَّأَنْتَ الظَّاهِرُ   فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَّأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُوْنَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْر

🌸அல்லாஹ்வே... ஏழு வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்கள் இறைவனே! சகலப் பொருட்களின் இறைவனே! வித்துகளையும், விதைகளையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கானை இறக்கியவனே! அனைத்துப் பொருட்களின் கெடுதியை விட்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீயே அவை அனைத்தின் நெற்றி முடியைப் பிடித்திருக் கின்றாய்! அல்லாஹ்வே நீயே முதலாமானவன்!உனக்கு முன் எதுவும் இல்லை; நீயே பிந்தியவன்! உனக்கு பின் எதுவும் இல்லை; நீயே வெளிப்படையானவன்! உனக்கு மேல் எதுவும் இல்லை; நீயே மறைவானவன்! உனக்கு மறைவானது எதுவும் இல்லை; எங்கள் சார்பாக (எங்கள்) கடனை நிறைவேற்றிவிடு! எங்களை வறுமையை விட்டும் (பாதுகாத்துச்) செல்வந்தர்களாக்கி வை!

📕 (ஸஹீஹ் முஸ்லிம்)

🏮நபி ﷺ அவர்கள் கற்றுத்தந்த இந்த துஆவின் மூலம், நான்கு பெயர்களின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம் :

☘اَللّٰهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ

☘அல்லாஹ்வே நீயே முதலாமானவன் ! உனக்கு முன் எதுவும் இல்லை

☘وَّأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ

☘நீயே பிந்தியவன் ! உனக்கு பின் எதுவும் இல்லை

☘وَّأَنْتَ الظَّاهِرُ   فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ

☘நீயே வெளிப்படையானவன் ! உனக்கு மேல் எதுவும் இல்லை

☘وَّأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُوْنَكَ شَيْءٌ

☘நீயே மறைவானவன் ! உனக்கு மறைவானது எதுவும் இல்லை

🏮அல்அவ்வல் என்றால் அல்லாஹ்தான் ஆரம்பமானவன், அல்ஆஃகிர் என்றால் அல்லாஹ்தான் இறுதியானவன்.

📌இதை வைத்து சிலர் அல்லாஹ்வுக்கு அல்கதீம் பழமையானவன் என்ற ஒரு பெயரை சொல்வார்கள்.

📌நாம் ஏற்கனவே அறிந்த அடிப்படையில் அல்லாஹ்வுடைய தன்மைகளை வைத்து அவனுக்கு  பெயர்களை ஏற்படுத்த முடியாது. அது  குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ நேரடியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

🏮அல்அவ்வல் மற்றும் அல்ஆஃகிர் என்ற பெயர்கள், குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்திருக்கிறது ஆனால் அல்கதீம் பழமையானவன் என்ற குர்ஆனிலும் ஹதீஸிலும் பெயர் எங்கும் வரவில்லை அந்தப் பெயரை நாம் அவனுக்கு சொல்ல முடியாது.

🏮அல்அவ்வல் மற்றும் அல்ஆஃகிர் என்ற பெயர்கள், அல்லாஹ் நிலையானவன், அழியாதவன் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

🏮அழ்ழாகிர் என்றால் மேலே உள்ளவன், உயர்ந்தவன், அவனுக்கு மேல் வேறு எதுவுமே கிடையாது என்ற அர்த்தத்தைத் தருகிறது.

🚫சிலர் இந்த பெயரை நேரடி தமிழில் மொழிபெயர்த்து அல்லாஹ்  வெளிப்படையானவன் என்று  கண்களுக்கு தெரிவதெல்லாம் அல்லாஹ் தான் என்று கூறுவது இஸ்லாத்தை விட்டு வெளியேற்ற கூடிய வழிகெட்ட ஒரு சிந்தனையாகும்.

🏮அல்பாதின் என்றால் அல்லாஹ் எல்லாவற்றையும் அறியக் கூடியவனாக இருக்கிறான், ஆனால், அவனுடைய இடத்தை யாராலும் அறிய முடியாத அளவுக்கு அவன் மறைவானவனாக இருக்கிறான், அவனுக்கு எல்லாம் சொந்தமானது என்ற அர்த்தத்தை தருகிறது.

📖அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

☘لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏

☘பார்வைகள் அவனை அடையாது, அவனோ பார்வைகளை அடைகிறான், அவனே (எவரின் பார்வைக்கும் அகப்படாத) நுட்பமானவன், நன்கு உணர்பவன்.

📕 (அல்குர்ஆன் 6:103)

🏮அல்லாஹ் அனைத்தையும் அறிய கூடியவனாக இருக்கிறான் ஆனால்

அல்லாஹுவுடைய யதார்த்தத்தை மனிதர்கள் தங்கள் புலன்களால் அறிந்துகொள்ள முடியாது. அவனுக்கு எல்லாம் சொந்தமானது.

🏮பொதுவாக, மனிதர்களிடையே அல்லாஹ்வைப் பற்றிய சந்தேகம் வருவது என்பது மிக இயல்பான ஒரு அம்சமாகும்.👇👇

🌸நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

"மக்களுக்கிடையே பேசிக் கொள்ளும் பொழுது, படைப்புகள் அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ், எனவே, அல்லாஹ்வை படைத்தது யார் என்று கேள்வி அவர்களுடைய உள்ளங்களில் வந்தால், அதற்கு பதில் தேடாமல் "ஆமன்து பில்லாஹ்" என்று சொல்லுங்கள் என்று நபி ﷺ அவர்கள் கற்றுத் தந்தார்கள்"**

📕 (ஸஹீஹ் முஸ்லிம்)

🌸அபூ ஸுமைல் கூறினார்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன் என் உள்ளத்தில் ஒன்று தோன்றுகிறது அதைப்பற்றி நான் கூற விரும்பவில்லை இன்று அதற்கு இப்னு அப்பாஸ் அலி அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்வைப் பற்றிய சந்தேகம் உன் உள்ளத்தில் தோன்றுகிறதா?" அதற்கு பதில் கூறாமல் நான் சிரித்தேன் அதற்கு இவ்வளவு அப்பாஸ் (ரலி)  'இந்த விஷயத்திலிருந்து ஈடேற்றம் பெற்றவர்கள் யார்? இவ்வாறு அல்லாஹ்வைப் பற்றிய சந்தேகம் வந்தால் சூரத்துல் ஹதீதின் மூன்றாவது வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.

📕 (அபூதாவூத்)

🤲எனவே, இந்த நான்கு பெயர்களின் மூலம் அல்லாஹ்வை நாம் சரியான முறையில் புரிந்து, ஈமான் கொண்டு, அவனுக்காகவே வாழ்ந்து, மரணிக்கிற பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page