top of page
32. Al Alee.jpg
33. Al Aa'la.jpg
34. Al Muta'al.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 22

☘️அல்லாஹ் தன்னை பற்றி அறிந்து கொள்ளும் படி குர்ஆனில் கட்டளையிடுகிறான்.

🍁فاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ  

🍁(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்

📕 (அல்குர்ஆன் 49:17)

☘️ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வை அறிந்து கொள்வது கடமை என்று உலமாக்கள் கூறுகிறார்கள்.

☘️ஒருவன் அல்லாஹ்வை அழுகிற போதுதான் அவனுடைய வாழ்க்கை சீராகும். அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்க கூடியவனாக அவன் மாறுவான்.

 

☘️அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்கு அவனுடைய அழகிய திருநாமங்களாகிய

 அல்அஸ்மாஉல் ஹுஸ்னா என்ற பெயர்களின் வாயிலாக அறிவது முக்கியமான வழிமுறையாக காணப்படுகிறது.

🌷அல்அலி - العلي

🌷அல் அல்அலா - الْاَعْلَى

🌷 அல்முதஆல் - المتعال

👆

இந்த மூன்று பெயர்களும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப் பிணைந்தவை.

📖அல்லாஹ் திருக்குர்ஆனில்,   

💎அல்அலி (العلي) என்கிற பெயர் 8 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது,

💎அல்அஃலா(الْاَعْلَى) என்கிற பெயர் குர்ஆனில் 2 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது,

💎அல்முதஆல் (المتعال) என்கிற பெயர் குர்ஆனில் 1 இடத்தில் இடம் பெற்றிருக்கிறது.

🍁اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ  وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏

🍁அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய "குர்ஸி" வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.

📕 (அல்குர்ஆன் 2:255)

🍁واَنَّ اللّٰهَ هُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ‏ 

🍁நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன்

📕 (அல்குர்ஆன் : 22:62)

🍁سبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ‏ 

(நபியே!) மிக மேலான உங்களது இறைவனின் திருப்பெயரை நீங்கள் புகழ்ந்து துதி செய்வீராக;

📕 (அல்குர்ஆன் 87:1)

🍁الَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌‏ 

மிக்க மேலான தன் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தானம் கொடுப்பார்).

📕 (அல்குர்ஆன் 92:20)

🍁علِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَال 

🍁மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன்.

📕(அல்குர்ஆன் 13:9)

👆👆 என்றும் கூறுகிறான்.

☘️இந்த மூன்று பெயர்களும்

 உயர்ந்தவன் என்றே பொருள் தரும்.

1⃣ ☘️அல்லாஹ் முதலில் தாத் -ஆல் உயர்ந்து இருக்கிறான்.

📌தாத் என்றால் உண்மையான நிலை என்று அர்த்தமாகும்📌

☘️அல்லாஹ் தன்னுடைய தாத்தால் உயர்ந்தவனாக இருக்கிறான்.

அல்லாஹ் இதைப்பற்றி குர்ஆனில்,

🍁الرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏ 

🍁(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.

📕 (அல்குர்ஆன் 20:5)

👆

அல்குர்ஆனில் இதைப்பற்றி 6 வசனத்தில் திரும்ப திரும்ப கூறுகிறான்.

☘️அர்ஷ் என்பது 7 வானங்களுக்கு மேலே உள்ள அல்லாஹ்வின் படைப்பு.

☘️அல்லாஹ் அர்ஷின் மேல் தன்னுடைய தாத்தால் உயர்ந்து இருக்கிறான்.

🌹இஸ்தவா என்பதற்கு உயர்ந்து உள்ளான் என்று அபுல் ஆலியா(ரஹ்) போன்ற தாபியீன்கள் அர்த்தம் கூறுகிறார்கள்.

2⃣ ☘️அல்லாஹ் கத்ரால் உயர்ந்து இருக்கிறான், அந்தஸ்தால் உயர்ந்து இருக்கிறான்.

☘️அல்லாஹ்க்கு ஸிஃபாத் இருக்கின்றன.

☘️ஸிஃபாத் என்றால் பண்புகள், தன்மைகள்

☘️அல்லாஹ்வுடைய இந்த பண்புகளும் தன்மைகளும் அவனுடைய அந்தஸ்துக்கும் மகத்துவத்திற்கும் உரிய முறையில் அவனுக்கு இருக்கின்றன.

📌 அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் சொல்லப்பட்டிருப்பது போலவே அல்லாஹ்வின் பண்புகளை மறுக்காமல், வேறு அர்த்தம் சொல்லாமல், உதாரணம் சொல்லாமல், வடிவம் சொல்லாமல், அப்படியே ஈமான் கொள்ள வேண்டும். 📌

☘️அல்லாஹ் வின் ஸிஃபாத்ஐ அடியார் ஸிஃபாத்தோடு ஒப்பிடக்கூடாது. ஏனென்றால் அல்லாஹ் ஸிஃபத்தால் உயர்ந்தவன்முஷ்ரிக்குகள் அடியார்களைப் போன்று அல்லாஹ்வை நினைத்த போதுதான் அல்லாஹ் குர்ஆனில்,

👇👇

🍁ومَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ 

🍁அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை.

📕(அல்குர்ஆன் : 6:91)

என்று கூறுகிறான்.

1⃣ அல்அலி - العلي

2⃣ அல்அலா - الاعلى

3⃣ அல்முதஆல் - المتعال

✍️ அல்லாஹ் ஆற்றலினால் உயர்ந்தவன், வல்லமையால் உயர்ந்தவன், சக்தியினால் உயர்ந்தவன்.

☘️என்பதை இந்த மூன்று பெயர்கள் உணர்த்துகின்றன.

🎯இந்த மூன்று பெயரையும் நாம் ஈமான் கொண்டால் உள்ளத்தில் பணிவும், அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும் என்றும், அல்லாஹ் பக்கம் நெருங்க வேண்டும் என்ற ஆசை வரும்.

🤲எனவே அவனை சரியான முறையில் ஈமான் கொண்டு அவனை நெருங்கக் கூடிய நல்ல அடியானாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக. 🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page