

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 23
🌷அல்அளீம் ➖ العظيم
🍄அல்லாஹ்வினுடைய திருநாமமாகிய (العظيم) அல்அளீம் என்பது குர்ஆனில் 9 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
🍄சூரத்துல் பகராவில் ஆயத்துல் குர்ஸி என்று நாம் அழைக்கக்கூடிய 255 ஆவது வசனத்தின் இறுதியில்
🌼وهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
என்பது இடம்பெறுகிறது.
🌼فسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ
ஆகவே, (நபியே!) நீங்கள் மகத்தான உங்கள் இறைவனின் திருப்பெயரை துதி செய்து கொண்டிருப்பீராக!
📕 (அல்குர்ஆன் 69:52)
🍄அல்அளீம், அல்கபீர் நெருக்கமான கருத்துக்களையுடைய பெயர்கள்.
🍄அல்அளீம் என்பது ➖'அளம' 'عظمة' என்பதிலிருந்து வந்திருக்கிறது.
'அளம' என்றால் ➖அரபு மொழியில் தோற்றத்தில் பிரம்மாண்டமானது, அந்தஸ்தில் உயர்ந்து இருப்பது நிலையில் உயர்ந்திருப்பது என்பதையும் இந்த வார்த்தை குறிக்கும். சுருக்கமாக மகத்தானது, பிரம்மாண்டமானது என்பது அர்த்தமாகும்.
🍄அல்அளீம் என்பதன் அர்த்தம் அல்லாஹ் அவனுடைய 'தாத்'ல் மகத்தானவனாக, மிகப்பெரியவனாக இருக்கிறான் என்பதாகும்.
🍄அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா ஒன்றுமில்லாத சூனியம் கிடையாது.
அவனுக்கென்று ஒரு தாத் இருக்கிறது.
🍄தாத் என்றால் அல்லாஹ்வுக்கு இருக்கிற உண்மையான நிலையென்று அர்த்தமாகும்.
🌹அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
🌼ومَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِه ۖ وَالْاَرْضُ جَمِيْعً قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌۢ بِيَمِيْنِهٖ ؕ
🌼அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்.
📕 (அல்குர்ஆன் 39:67)
🍄அல்லாஹ்வினுடைய கையில் வானங்களும் பூமியும் கடுகைவிட சிறியதாக இருக்குமென்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இந்த ஆயத்தின் தஃப்ஸீரில் கூறினார்கள்.
🍄நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :
7வானங்களும் அல்லாஹ்வின் குர்ஸிக்கு முன்னால் வைத்தால் ஒரு திறந்த வெளியிலே போடப்பட்ட வளையல் போன்று காணப்படும். குர்ஸியை விட அர்ஷின் சிறப்பு எப்படி என்றால் திறந்தவெளியில் போடப்பட்ட வளையல் போன்றுதான் காணப்படும் என்று கூறினார்கள்.
🍄அல்லாஹ்வினுடைய அர்ஷ், குர்ஸி, 7 வானங்கள், பூமி அனைத்தையும் பார்க்கும்போது அல்லாஹ் அவனுடைய தாத் ஆல் எவ்வளவு மகத்தானவன் என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.
🍄அல்லாஹ்வை அல்அளீம் என்று சொல்வதின் மூலம் அவனுடைய ஸிஃபாத்துகள் அனைத்துமே மிக பிரம்மாண்டமானவை, சிறந்தவை, கண்ணியமானவை.
🍄அல்லாஹ் அவனுடைய செயல்களால் அவன் மகத்தானவன், மிகப்பெரியவன் என்ற கருத்தை அளீம் என்கிற இந்த பெயர் உணர்த்துகிறது.
🍄அல்லாஹ் அளீம் என்று நாம் கூறும்போது அவனை போன்று அவனுடைய படைப்புகளில் யாரும் கண்ணியப்படுத்தபடவோ, உயர்த்தபடவோ கூடாது என்பதையும் உணர்த்துகிறது.
🍄அல்லாஹு தஆலா அவனுடைய ரிஸ்கை, அவனுடைய கூலியை விரும்பியபடி அவனுடைய அடியார்களுக்கு மகத்தானதாக கொடுக்கிறான்.
🔖 அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
🌼ومَنْ يَّـتَّـقِ اللّٰهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّاٰتِهٖ وَيُعْظِمْ لَهٗۤ اَجْرًا
🌼எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்.
📕 (அல்குர்ஆன் 65 :5)
🍄யார் அவருடைய ரிஸ்கை விசாலமானதாக ஆக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாரோ, அவருடைய தவனை நீடிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறாரோ அவர் தன்னுடைய இரத்த உறவுகளை சேர்ந்து வாழட்டும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
🎯அல்லாஹ்வை நாம்அல் அளீம் என்று ஏற்றுக்கொள்ளும்போது நாம் அவனுடைய அடிமைகள் , நாம் பெருமைப்படவோ, ஆணவப்படவோ, கர்வம் கொள்ளவோ வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
🤲எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக🤲

