

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 20
🌷அல்கபீர் ➖ الكبير
🌸அல்லாஹ் அல்குர்ஆனில் 6 இடத்தில் கபீர் என்று கூறுகிறான்.
☘️ذ لِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِىَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ وَاِنْ يُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِىِّ الْكَبِيْرِ
☘️இ(த்தண்டனையான)து_ நிச்சயமாக அதன் காரணம்: அல்லாஹ், அவன் தனித்தவனாக அழைக்கப்பட்டால் நீங்கள் நிராகரித்தீர்கள், மேலும், அவனுக்கு (உங்கள் தெய்வங்கள்) இணையாக்கப்பட்டால் (அதை) விசுவாசித்தீர்கள், இப்பொழுது தீர்ப்பு (வழங்குவது) மிக்க உயர்வானவனாகிய மிகப் பெரியவனான அல்லாஹ்விற்கு (மட்டும்) உரியதாகும் (என்று கூறப்படும்).
📕 (அல்குர்ஆன் 40:12)
☘️ذ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الْبَاطِلُ ۙ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ
☘️இவையனைத்தும் "நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்" என்பதற்கும் அத்தாட்சி களாக இருக்கின்றன.
📕 (அல்குர்ஆன் 31:30)
☘️علِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ
☘️(இது மட்டுமா! மற்ற அனைத்தின்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன்.
📕 (அல்குர்ஆன் 13:9)
👆👆ஆகிய இடங்களில் வருகிறது.
🌸அல்கபீர் என்றால் பெரியவன், பெரியது என்று அர்த்தமாகும்.
🌸அல்லாஹு தஆலா பெரியவன் என்று சொல்லும்போது அவனுடைய 'தாத்' ஆல் பெரியவனாக இருக்கிறான்.
🌸அல்லாஹ் ஏழு வானத்தின் மேலே அர்ஷின் மீது உயர்ந்து இருப்பதாக அல்குர்ஆனில் 6 இடத்தில் கூறுகிறான்.
🌸அர்ஷின் மீது அல்லாஹ்வின் குர்ஸி இருக்கிறது.
🌸அர்ஷை பற்றியும், குர்ஸியைப் பற்றியும், குர்ஆனிலும், ஸலஃப் சாலிஹீன்களின் விளக்கங்களிலும் பார்க்கமுடிகிறது.
🌸அர்ஷைப் பற்றி முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறும்போது;
🌹அல்லாஹ்வின் அர்ஷை 8 மலக்குமார்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைப் பற்றி பேசுவதற்கு அல்லாஹ் எனக்கு அனுமதி கொடுத்து இருக்கிறான். அந்த ஒருவரைப் பற்றி நபி ﷺ அவர்கள் கூறும்போது , அந்த மலக்கின் தோல் புஜத்திற்கும், காது சோனைக்கும் இடைப்பட்ட தூரம் 700 வருடம் நடந்து செல்லக்கூடிய தூரமாகும்.
🌸 8 பிரம்மாண்டமான மலக்குகள் சுமக்கின்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய அர்ஷ் பிரம்மாண்டமாக இருக்கிறது.
🌸அர்ஷின் மீது இருக்கும் குர்ஷியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்,
☘️وسع كرسيه السماوت والارض
☘️அல்லாஹ் வின் அரியாசனம் வானங்களிலும் பூமியிலும் பரந்து நிற்கின்றது.
📕 (அல் குர்ஆன் 2:255)
🌸இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்,
அர்ஷுக்கு முன்னால் குர்ஸியின் நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு மிகப் பெரிய திறந்த வெளியிலே ஒரு சின்ன வளையல் போடப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் அந்த வளையல் எப்படி தோன்றுமோ அது போல் தான் அர்ஷ்க்கு முன்னால் குர்ஸி என்று கூறினார்கள்.
🌸குர்ஸியை விட மிக பிரம்மாண்டமானது அர்ஷ்.
🌸அந்த அர்ஷுக்கு மேலே உயர்ந்து இருக்கும் அல்லாஹ் அவனுடைய தாத்தால் மிகப் பெரியவன் என்பதை அல்கபீர் என்ற வார்த்தை உணர்த்துகிறது.
🌸அல்லாஹ் அவனுடைய செயல்களால் மிகப்பெரியவனாக இருக்கிறான்.
☘️لخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
☘️வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, (இறந்த) மனிதர்களை (மறு முறை) படைப்பதைவிட நிச்சயமாக மிகப் பெரிய காரியமாகும். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வளவுகூட அறிந்து கொள்வதில்லை.
📕 (அல்குர்ஆன் 40:57)
👆 இந்த வசனத்தின் மூலம் செயல்களால் பெரியவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
🌸அல்லாஹ் பெரியவன், பெருமைக்குரியவனாகவும் இருக்கிறான்.
🌸அல்லாஹ் ஹதீஸுல் குத்ஸியில் கூறுகிறான்:
🌹"கண்ணியம் என் கீழ் ஆடை ; பெருமை என் போர்வை; இந்த விஷயத்தில் யார் போட்டி போட வருகிறாரோ அவரை தண்டிப்பேன்" என்று அல்லாஹ் கூறுகிறான்.
🎯அல்லாஹ்வை கபீர் என்றும், அக்பர் என்றும், ஈமான் கொள்ளும் முஃமின் தன் உள்ளத்தில் கடுகளவு பெருமை கொள்ள மாட்டான்.
🎯அந்த அடியான் பணிவு உள்ளவனாகவும், தேவை உள்ளவனாகவும், அல்லாஹ்விடத்தில் இறைஞ்ச கூடியவனாகவும், கெஞ்ச கூடியவனாகவும், மன்றாட கூடியவனாகவும் இருப்பான்.
🎯அந்த மனிதன் மற்ற மனிதர்களை மதிப்பான் எல்லா மனிதரையும் சமமாக நினைப்பான்.
🌸மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,
☘️وقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيْرًا
☘️இன்னும், “பிள்ளையை (தனக்கு) எடுத்துக் கொள்ளாதவனும், ஆட்சியில் தனக்கு துணைவன் இல்லாதவனும், இழிவிலிருந்து (காக்க) அவனுக்கு உதவி செய்பவரே இல்லாதவனும் ஆகிய - இத்தகைய அல்லாஹவிற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக” எனவும் (நபியே!) நீர் கூறுவீராக! ஆகவே (மாபெரும் மகத்துவத்திற்குரிய) அவனை மிக மிக பெருமைப்படுத்துவீராக!
📕 (அல்குர்ஆன் 17:111)
🤲 அல்லாஹ்வை கபீர் என்று சொல்லும் நாம் , மற்ற மனிதர்களை புரிந்து, உள்ளத்தில் பணிவு கொண்டு, மனிதர்களை மதிக்கும் தன்மையை வளர்க்க அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக.🤲

