top of page
26. Al Khabeer.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 19

🌷அல்(خ)ஃகபீர்➖ الخبير

🌹அன்புள்ள சகோதரிகளே❗️

🌼 அல்(خ)ஃகபீர் என்ற அல்லாஹ்வுடைய  பெயர் சுமார் 45 இடங்களில் தனியாகவும் சில இடங்களில்  வேறு ஒரு பெயருடன் சேர்ந்தும் குர்ஆனில் இடம்பெற்றிருகிறது.

🍃உதாரணமாக:

1⃣

🔅لا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏ 

🔅பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன்.

📕 (அல்குர்ஆன் 6:103)

2⃣

🔅واِذْ اَسَرَّ النَّبِىُّ اِلٰى بَعْضِ اَزْوَاجِهٖ حَدِيْثًا‌ فَلَمَّا نَـبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْ بَعْضٍ‌ فَلَمَّا نَـبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْبَاَكَ هٰذَا‌ قَالَ نَـبَّاَنِىَ الْعَلِيْمُ الْخَبِیْرُ‏ 

🔅(நமது) நபி தன்னுடைய மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி "இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" எனக் கேட்டார். அதற்கு அவர் "(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்" என்று கூறினார்கள்.

📕 (அல்குர்ஆன் 66:3)

 3⃣

🔅الَمْ تَرَ اِلَى الَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ثُمَّ اَحْيَاھُمْ‌ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَکْثَرَ النَّاسِ لَا يَشْکُرُوْنَ‏ 

🔅(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக் கணக்கில் வெளியேறியவர்களை நீங்கள் கவனித்தீர்களா? அல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை.

📕 (அல்குர்ஆன் 2:243)

🌼அல்லாஹீத ஆலா தனக்கு  (خ)ஃகபீர் என்ற பெயர் இருப்பதை அடையாளபடுத்துவதை நாம் பார்க்கலாம்.

🌼இந்த (خ)ஃகபீர் என்பது  (خ)ஃகபர் மற்றும்  (خ)ஃகிப்ரா என்ற சொல்லில் இருந்தும் பிறந்தது.

🌼இந்த  (خ)ஃகபீர் ➖ஃகிப்ரா என்பதுடைய நேரடியான அர்த்தம் "அறிவு"என்தாகும்.

🌼அலீம், லதீஃப் என்ற பெயருக்கும்  (خ)ஃகபீர்க்கும் மிக நெருக்கமான  தொடர்பு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

👆👆

☘️இந்த அடிப்படையில் அல்லாஹுதஆலா அவனுடைய விசாலமான, நுணுக்கமான அறிவையும் பிரதிபலிக்கின்ற ஒரு  பெயர் தான்  (خ)ஃகபீர் என்ற பெயராகும்.

📖குர்ஆன் தர்ஜுமாக்களில்   (خ)ஃகபீர்➖ என்ற பெயருக்கு அறியக்கூடியவன், நுணுக்கமான அறிவுள்ளவன் என்று  மொழி பெயர்த்திருப்பார்கள்.

👆அதாவது அல்லாஹ்வுடைய அறிவின் விசாலத்தை அடையாளபடுத்தக்கூடிய பெயராக இது இருக்கிறது.

🌹வானத்தில் உள்ளவை,

🌹பூமியில் உள்ளவை,

🌹உலகத்தில் இருக்க கூடியவை,

🌹மறுமையில் இருக்க கூடியவை,

🌹வெளிப்படையானவை,

🌹 கண்ணுக்கு முன்னால் இருக்க கூடியவை,

🌹மறைந்திருக்க கூடியவை,

🌹சடரீதியானவை, அது அல்லாதவை,

👆👆

 இப்படி எல்லா விஷயங்களையும், அல்லாஹுதஆலா அறிந்தவனாக இருக்கின்றான்.

🌼எல்லா இடங்களில் நடக்க கூடியவையும், எல்லா காலங்களில் நடக்க கூடியவையும் அல்லாஹ் அறிந்தவன் ஒரு அணு அளவு கூட அவன் அறிவிலிருந்து மறைந்து விட மாட்டாது. இதை போன்ற பல்வேறு விஷயங்களை இந்த அல்(خ)ஃகபீர் என்ற அல்லாஹ்வுடைய பெயர் பிரதிபலிக்கிறது.

🌼ஒரு நாள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களோடு, ரசூல் ﷺ அவர்கள் ஒரு விஷயம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஆயிஷா (ரலி) யிடம் ஒரு செய்தி கேட்கிறார்கள் ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லவில்லை.அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் அயிஷாவை பார்த்து கேட்டார்கள், "நீ எனக்கு சொல்ல வில்லை என்றால் லத்தீஃப் ஆகிய  (خ)ஃகபீர் ஆகிய அல்லாஹ்" எனக்கு சொல்லி விடுவான்; என்று சொன்னார்கள்.

📕( ஆதாரம்:ஸஹிஹ் முஸ்லிம்)

🌼எனவே அல்லாஹீதஆலா  (خ)ஃகபீராக இருப்பதனால் அடியாருடைய ஒவ்வொரு நிலையும் அவன் அறிந்தவனாக இருக்கின்றான். எனவே அதற்கேற்ப இம்மையிலும், மறுமையிலும் அவர்களுக்கு கூலி கொடுப்பவனாக அல்லாஹ் இருந்து கொண்டிருக்கிறான்.

🌼எனவே நாம் செய்யக் கூடிய நல்லறங்களை எல்லாம் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான். நாம் செய்யக் கூடிய நல்அமல் விஷயத்திலும் அவன்  (خ)ஃகபீராக இருக்கிறான்.

🌼எனவே அதிகமாக நாம் நல்அமல்களை செய்ய வேண்டும். அதே போன்று நம்முடைய பலவீனத்தை  அவன் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான் . எனவே அவன் நம் பிரச்சினைகளுக்கான தீர்வை விரைவில் தருவான் என்று நாம் நம்ப வேண்டும்.

🌼அல்லாஹ் நம் தவறுகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ஆகவே நாம் அதிகமாக இஸ்திஃபார் செய்யவேண்டும்.

🌼யாரெல்லாம் நமக்கு,நம் சமுதாயத்திற்கு , நம் மார்க்கத்துக்கு, சதி செய்கிறார்களோ, அதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். அவர்களுக்கு தகுந்த கூலியை தருவான் என்று ஆறுதல் அடைய வேண்டும்.

🎯அல்(خ)ஃகபீர்➖அனைத்தும் அறிந்தவன் .என்ற அல்லாஹ்வின் பெயர் நமக்கு அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்த, நம்முடைய ஈமானை அதிகரிக்க , நல்லமல்கள் மீது நாட்டம் வரவும், அதிகமாக தவ்பா செய்வதையும் , மனதில் அமைதியையும் ஏற்படுத்த வேண்டும்.

🤲எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page