top of page
25. Al Lateef.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 18

🌷அல்லத்தீஃப் ➖ اللطيف

🌼அல்லத்தீஃப் ➖ நுணுக்கமான அறிவுடையவன்

🏵️அல்லத்தீஃப் என்கிற அல்லாஹ்வுடைய பெயர் குர்ஆனில் ஏழு இடங்களில் இடம் பெற்றிருக்கிறது: 👇👇

1⃣

💐لا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏ 

💐 பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.

📕(அல்குர்ஆன் 6:103)

2⃣

💐الَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً  فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةً ً  اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ‌ ‏ 

💐 நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.

📕(அல்குர்ஆன் 22:63)

3⃣

💐ورَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا‌ وَقَالَ يٰۤاَبَتِ هٰذَا تَاْوِيْلُ رُءْيَاىَ مِنْ قَبْلُقَدْ جَعَلَهَا رَبِّىْ حَقًّا‌ وَقَدْ اَحْسَنَ بِىْۤ اِذْ اَخْرَجَنِىْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِىْ وَبَيْنَ اِخْوَتِىْ‌ اِنَّ رَبِّىْ لَطِيْفٌ لِّمَا يَشَآءُ‌ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏ 

💐 இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.

📕 (அல்குர்ஆன் 12:100)

🏵️அரபு மொழியில், அல்லத்தீஃப் என்ற பெயருக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கிறது.

🍃உதாரணமாக:

 🌼கண்ணியப்படுத்துதல், நல்லது செய்தல், நுணுக்கமாக அறிதல், போன்ற பல்வேறு அர்த்தங்கள் இந்தப் பெயருக்கு இருக்கிறது.

🏵️அல்லாஹ்வை அல்லத்தீஃப் என்று குறிப்பிடும் பொழுது, அவனுடைய அறிவு மிக நுணுக்கமானது என்கிற கருத்து பிரதானமான கருத்தாக இடம்பெற்றிருக்கிறது.

🏵️அல்லத்தீஃப் என்று சொன்னால், அல்லாஹ் ஒவ்வொன்றையும் நுணுக்கமான வழிகளில் அதற்குரிய இடங்களில் சேர்பிக்கிறான்.

🏵️அல்லாஹ் கூறுகிறான், "அவர்கள் சில நேரங்களில் அறியாமல் இருந்தாலும், அல்லாஹ் அறியாத புறத்திலிருந்து அவர்களுடைய நலவுகளை அவர்களுக்கு சேர்பிக்கின்றான்".

💐اللّٰهُ لَطِيْفٌ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَآءُ‌ وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏ 

💐 அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

📕(அல்குர்ஆன் : 42:19)

🏵️அல்லாஹ் நுணுக்கமான ஞானம் உடையவன், நுணுக்கமான அறிவுள்ளவன்.

எனவே ஒவ்வொருவருக்கும் எது தேவை, அவர்களுடைய நலவு எதிலே தங்கியிருக்கிறது என்பதை அறிந்து, அவர்களுக்கு சேர வேண்டியவைகளை சேர்பிக்கக்கூடியவன்.

🏵️சில உலமாக்கள் கூறுகிறார்கள்

👇👇

அல்லாஹ், அல்லத்தீஃப் என்று சொல்லும்பொழுது, அவனுடைய படைப்பு மிக நுணுக்கமான அறிவின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்றும், இந்த உலகத்தில் அவன் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமான முறையில் அமைத்திருக்கிறான் என்பதையும் குறிக்கிறது.

🏵️அல்லாஹ் அவனுடைய நேசர்கள் மற்றும் எதிரிகளின் விஷயத்தில் மிக நுணுக்கமான அறிவுடன் செயல்படுகிறான்.

💐لا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏ 

💐 பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.

📕 (அல்குர்ஆன் 6:103)

🏵️அல்லாஹ் அல்லதீஃப் என்கிற அடிப்படையில் இந்த உலகத்தில் நிச்சயமாக யாராலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அல்லது கனவிலோ அல்லாஹ்வை பார்க்க முடியாது. அவ்வாறு பார்த்ததாக கூறுபவர்கள் பொய் சொல்கிறார்கள்.

🏵️ஆனால், மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு அல்லாஹ் தரக்கூடிய மிகப்பெரிய பாக்கியம் அல்லாஹ்வை பார்க்கக்கூடிய வாய்ப்பு.

🎯எனவே, அல்லத்தீஃப் என்றால் அல்லாஹ் மிக நுணுக்கமான அறிவுடையவன், அதன் அடிப்படையில் இந்த பிரபஞ்சத்தை இயக்குபவன், தன்னுடைய படைப்புகளை படைத்திருப்பவன் என்பதை நாம் ஈமான் கொள்ளும் பொழுது, அல்லாஹ்வின் மீது நமக்கு மிகப்பெரிய அன்பும் , பயமும் ஏற்படும், அதைக் கொண்டு அல்லாஹ் விரும்பியவாறு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

🤲எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page