

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 17
🌷அல்அலீம் ➖ العليم
💖அல்அலீம் ➖ அனைத்தையும் அறிந்தவன்
💝அல்அலீம் என்ற பெயர் அல் குர்ஆனில் சுமார் 157 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.
🌼அல்லாஹ் குர்ஆனில்,
☘️اللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً يَخْلُقُ مَا يَشَآءُ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ
☘️அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.
📕 (அல்குர்ஆன் 30:54)
☘️ذ لِكَ الْـفَضْلُ مِنَ اللّٰهِ وَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا
☘️இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
📕 (அல்குர்ஆன் 4:70)
☘️والشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
☘️இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
📕 (அல்குர்ஆன் 36:38)
☘️فمَنْ بَدَّلَهٗ بَعْدَمَا سَمِعَهٗ فَاِنَّمَآ اِثْمُهٗ عَلَى الَّذِيْنَ يُبَدِّلُوْنَهٗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ
☘️வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
📕 (அல்குர்ஆன் 2:181)
🌼அல்அலீம் என்றால்➖ அல்லாஹ் அறிவாளன், அவனுடைய அறிவு வெளிப்படையான, உள்ளார்ந்த, ரகசியமான, பகிரங்கமான, அனைத்தையும் அறியக் கூடியவன்.
🌼கழே உள்ளவை, மேலே உள்ளவை, நடந்தவை, நடப்பவை, நடக்க இருக்கிறவை அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்.
🌼எந்த ஒரு விஷயமும் அவனிடமிருந்து மறைந்து விடாது, என்ற கருத்துக்களை தரக்கூடிய ஒரு பெயராக இருக்கிறது.
🌼அல்குர்ஆனில், "அல்அலீம்" என்ற பெயர் அல்லாஹ்வுடைய அறிவைப் பற்றி பல்வேறு கோணங்களில் நமக்கு அடையாளப்படுத்தப்படுகிறது.
🌼அல்லாஹ்வுடைய அறிவின் விசாலத்தை பற்றி அல் குர்ஆனில் பல்வேறு வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான் :
👇👇👇
💜وَسِعَ رَبِّىْ كُلَّ شَىْءٍ عِلْمًا
💜என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்;
📕 (அல்குர்ஆன் 6:80)
💜ربَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا
💜“எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்!
📕 (அல்குர்ஆன் 40:7)
💜وسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًا
💜 “எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.
📕 (அல்குர்ஆன் 20:98)
🌼அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான், அவனுடைய அறிவு எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறது என்றும் ; மறைவானவை, பகிரங்கமான, கண்ணுக்கு தெரிந்தவை, தெரியாதவை அனைத்தையும் அறியக்கூடியவனாக இருக்கிறான் என்பதை அல்குர்ஆனில் கூறுகிறான் :👇👇
☘️ربَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِىْ وَمَا نُعْلِنُ وَمَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْ شَىْءٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ
☘️“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, வானத்திலோ உள்ள எந்த பொருளும் மறைந்ததாக இல்லை.
📕 (அல்குர்ஆன் 14:38)
☘️يعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ
☘️ கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
📕 (அல்குர்ஆன் 40:19)
☘️واِذِ اعْتَزَلْـتُمُوْهُمْ وَمَا يَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَى الْـكَهْفِ يَنْشُرْ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَيُهَيِّئْ لَـكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا
☘️அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).
📕 (அல்குர்ஆன் 18:16)
🌼அல்லாஹ்வுடைய அறிவு என்பது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது, அவன் அனைத்தையும் அறிந்தவன் என்பதையும், அல்அலீம் என்ற பெயரின் அர்த்தமாக இருக்கிறது.
💜انَّ اللّٰهَ يَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
💜“நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும்,பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்;
📕 (அல்குர்ஆன் 49:18)
💜واللّٰهُ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
💜"அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
📕 (அல்குர்ஆன் 49:16)
🏵️அல்லாஹ், சில விஷயங்களில், அறிவின் திறவுகோல்களை அவனிடத்தில் வைத்திருக்கிறான். அவனைத் தவிர வேறு யாரும் அதை அறிய மாட்டார்கள், என்று அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்:
☘️وعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
☘️அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
📕 (அல்குர்ஆன் 6:59)
☘️انَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَّمَا تَدْرِىْ نَـفْسٌ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
☘️ நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
📕 (அல்குர்ஆன் 31:34)
🏵️ குர்ஆனைப் படித்துப் பார்க்கும் பொழுது, அல்லாஹ்வுடைய அறிவின் விசாலம் மிகவும் பெரியது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
🏵️ அல்லாஹ் ➖அல்அலீம் என்பதை ஒரு மனிதன் சரியாக அறிந்து, ஈமான் கொள்ளும் போது அவனுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும்.
🏵️ ஒரு இஸ்லாமிய அறிஞர் கூறியது போல்
"அல்அலீம் என்ற➖ இந்த வார்த்தை, மனிதனுக்கு உபதேசம் செய்வதற்குரிய மிகப்பெரிய வழிமுறையாகும், பாவங்களிலிருந்து அவனை தடுக்கக்கூடிய மிகப்பெரிய அம்சமாகவும் காணப்படுகிறது" என்று கூறினார்கள்.
🤲அல்அலீம் என்ற அல்லாஹ்வுடைய பெயரை சரியான முறையில் நாம் புரிந்து, ஈமான் கொண்டு, அதற்கேற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்ய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக.🤲

