top of page
23. Al Basheer.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 16

🌷அல்பஸீர் ➖البصير

🌸அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான், அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவை எத்தனை என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்.

🌸நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள், யார் ஒருவர் அல்லாஹ்வின் 99 திருநாமங்களை பொருளுணர்ந்து மனப்பாடம் செய்கிறார்களோ, அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்.

🌸அல்பஸீர்  என்ற பெயர் அல்குர்ஆனில் 40 க்கும் மே‌ற்ப‌ட்ட இடங்களில்  வந்துள்ளது.

🍃 உதாரணமாக :

🌹சூராத்துஷ் ஷுஃரா 11, 27 வசனம்

🌹சூரத்துன்னிஸா 58

🌹சூராத்துல்பகரா 265

🌹சூராத்து ஆல  இம்ரான் 15

🌹சூரத்துல் முல்க் 19

🌹சூரத்துல் இஸ்ரா 17

ஆகிய வசனங்களில் தனக்கு பஸீர் என்று பெயர் இருப்பதை அல்லாஹ் அடையாளப்படுத்துகிறான்.

🌸அல்பஸீர்➖ பார்க்கக் கூடியவன்

🌸பஸீர் ➖என்றால் மிக துல்லியமாக, தெளிவாக எல்லாவற்றையும் பார்ப்பவன்.

📝இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸியா(ரஹ்) அவர்கள் தன் புத்தகமான தரீக்குல் ஹிஜ்ரத்தைன் குறிப்பிடுகிறார்கள்.👇👇

🌸அல்லாஹ் பஸீரானவன், அவனின் பார்வையின் பூரணத்துவத்தால் சிறிய அணுவளவு படைப்பாக  இருந்தாலும், அதனுடைய முழு விபரங்களையும் அவன் பார்க்கிறான். உதாரணமாக படைப்பினங்களின் உடல்  உறுப்புகளையும், அதன் சதை, இரத்தம், எலும்புகள், நரம்பு ஆகிய எல்லாவற்றையும் மிக நுணுக்கமாக பார்க்கக்கூடியவன்.

🍃உதாரணமாக :

🌸கடுமையான இருட்டில் கருங்கல்லில் ஓர் கட்டெறும்பு ஊர்ந்து சென்றாலும், அல்லாஹ் பார்ப்பான்.

💞அல்லாஹு தஆலா தன் கண்ணியத்திற்கும், மகத்துவத்திற்கும்  பொருத்தமான முறையில் இரண்டு கண்களை கொண்டு பார்ப்பவன் என்பதையும் ஈமான் கொள்ள வேண்டும்.

🌸அல்லாஹ் குர்ஆனில்,

🌹وحَمَلْنٰهُ عَلٰى ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍۙ‏ 

🌹நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம்.

🌹تجْرِىْ بِاَعْيُنِنَا‌ جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ‏ 

🌹அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது.

📕 (அல்குர்ஆன் 54:13,14)

🌹واصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا‌ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ‏ 

🌹(நபியே!) உங்களது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நீங்கள் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர்கள். (ஆகவே, அவர்கள் உங்களைத் தங்கள் இஷ்டப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீங்கள் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உங்களது இறைவனின் புகழைக் கூறித் துதி செய்வீராக!

📕 (அல்குர்ஆன் 52:48)

🌹انِ اقْذِفِيْهِ فِى التَّابُوْتِ فَاقْذِفِيْهِ فِى الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَاْخُذْهُ عَدُوٌّ لِّىْ وَعَدُوٌّ لَّهٗ‌  وَاَلْقَيْتُ عَلَيْكَ مَحَـبَّةً مِّنِّىْ  وَلِتُصْنَعَ عَلٰى عَيْنِىْ ۘ‏ 

🌹"(உங்களது இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே, உங்கள் தாயை நோக்கி) "உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்துவிடுங்கள். அக்கடல் அதனைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக்கொள்வான் என்று (உங்கள்  தாய்க்கு அறிவித்தோ)ம். நீங்கள் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உங்கள்மீது என் அன்பை சொரிந்(து உங்களைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம்.

📕 (அல்குர்ஆன் 20:39)

👆👆ஆகிய வசனங்களில் தனக்கு கண்கள் இருப்பதாக குறிப்பிடுகிறான்.

🌸தன்னுடைய கண்ணியத்திற்கும், மகத்துவத்திற்கும் பொருத்தமான முறையில் அந்த கண்களை கொண்டு அனைத்தையும் துல்லியமாக பார்க்கக்கூடியவன்.

🌹நபி ﷺ அவர்கள் தஜ்ஜாலை பற்றி கூறும் போது,  அவன் குருடனாவான், உங்கள் ரப்பாகிய  அல்லாஹ் குருடனல்ல  என்று குறிப்பிடுகிறார்கள்.

📕 (புஹாரி, முஸ்லிம் )

📝மிகப்பெரிய  இமாம்களில் ஒருவரான இமாம் ஃகுஸைமா(ரஹ் ) தன்னுடைய கிதாப்புத்தவ்ஹீது புத்தகத்தில்,  அஹ்லுஸ் சுன்னா வல்ஜமாஅத்தின்  அகீதா கொள்கையை பற்றி குறிப்பிடுகையில்:👇👇

💙எங்களுடைய ரப்புக்கு இரண்டு கண்கள்  இருக்கின்றன என்று நாம் கூறுகிறோம்.

💙நிலத்திற்கு கீழும், ஏழு பூமிக்கு கீழும், வானத்திலும், வானம் பூமிக்கிடையிலும் உள்ள அனைத்தையும் பார்ப்பவன்.

💙சிறியதோ, பெரியதோ எதுவானாலும் அவனின் பார்வையிலிருந்து மறைந்து விட முடியாது.

💙அவனுடைய கண்களை, மனிதர்களின் கண்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. எதையும் உதாரணமாக சொல்லக்கூடாது ,மறுக்கவும் கூடாது.

🌸அல்லாஹ் குர்ஆனில் ஸமீஃ, பஸீர்  ஆகிய திருநாமங்களை கொண்டு 40 வசனங்களை முடிக்கிறான்.

🎯இதை பற்றி ஒரு மனிதனுக்கு சரியான புரிதல் இருந்தால் அல்லாஹ் நம்மை  எப்போதும் பார்த்து கொண்டு, நாம் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொ‌ண்டு‌ இருக்கிறான் என்று உணர்வு (முராகபா) வரும்.

அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டான்; அல்லாஹ்வை பற்றிய பயம் இருக்கும்.

🤲நாம் உள்ளச்சத்தோடு அல்லாஹ்விற்கு அஞ்சக்கூடிய நிலையில் வாழ்ந்து, பாவத்திலிருந்து மீளக்கூடியவர்களாக  இருந்து, நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வாழக்கூடியவர்களாக , அல்லாஹ் நமக்கு தௌஃபீக் செய்வானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page