

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 15
🌷அஸ்-ஸமீஃ ➖ السميع
🌸பல பயான்கள், நல்லுபதேசங்கள் என எத்தனைவிதமான காரியங்களில் நாம் ஈடுபட்டாலும் நம்மிடம் நல்ல மார்க்க ஞானம் இல்லாதிருத்தலுக்கு முக்கிய காரணம், அல்லாஹ்வை பற்றிய அறிவு இல்லாததுதான்.
🌸அல்லாஹ்வை பற்றி அறிந்தால் அவனை அஞ்சக் கூடியவர்களாகவும் அவனை அதிகம் நேசிக்க கூடியவராகவும் இருப்பார்கள்.
🌸அல்லாஹ்வை பற்றி அறிவது மிக உயர்ந்த அமலாகும். அல்லாஹ்வை "அஸ்மாவுல் ஹுஸ்னா" என்ற அவனின் அழகிய திருநாமங்கள் மூலம் நாம் அறியலாம்.
🌸அவனது பெயர்களில் மிக முக்கியமான மற்றும் அழகான ஒரு பெயர் "அஸ்-ஸமீஃ".
📖இந்த பெயர் குர்ஆனில் 50 இடங்களில் வந்துள்ளது.
🍃உதாரணமாக ,
1⃣
☘️قدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِىْ تُجَادِلُكَ فِىْ زَوْجِهَا وَ تَشْتَكِىْۤ اِلَى اللّٰهِ وَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا اِنَّ اللّٰهَ سَمِيْعٌ بَصِيْرٌ
☘️(நபியே!) எவள் தன் கணவரைப் பற்றி உங்களிடம் தர்க்கித்து (அவரைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டுக் கொண்டான். (அதைப்பற்றி) உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும், (ஒவ்வொருவரின் செயலையும்) உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.
📕 (அல்குர்ஆன் 58:1)
2⃣
☘️فاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ مِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا يَذْرَؤُكُمْ فِيْهِ لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
☘️அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கின்றான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
📕 (அல்குர்ஆன் 42:11)
3⃣
☘️واِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ
☘️இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய்.
📕 (அல்குர்ஆன் 2:127)
👆போன்ற இடங்களில் வந்துள்ளது.
🌸அஸ்_ஸமீஃ ➖செவியேற்பவன்.
💖ஸமீஃ என்றால் ➖மொழிகள் வேறுபட்டாலும், தேவைகள் வேறுபட்டாலும் அனைத்தையும் செவியேற்கக்கூடியவன். எல்லாவிதமான சப்தங்கள், இரகசியம், பரகசியம் என அனைத்தையும் துல்லியமாக செவியேற்பவன்.
💖அல்லாஹ்வின் இந்த பண்பை நபி ﷺ அவர்கள் ஹதீஸுல் குத்ஸி என்று குறிப்பிடுகிறார்கள்.
🍁அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி ﷺ அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
என் அடியார்களே!
அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.
என் அடியார்களே!
உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.
என் அடியார்களே!
உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.
என் அடியார்களே!
உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே. ஆகவே, என்னிடமே ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன்.
என் அடியார்களே!
நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன்.
என் அடியார்களே!
உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!
என் அடியார்களே!
நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும்!
📕 ஸஹீஹ் முஸ்லிம் : 5033.
💖அல்லாஹ்வுடைய பண்பான செவிமடுத்தல் மிகவும் அற்புதமானது.
🍁ஒருமுறை நபி ﷺ அவர்களும், சஹாபாக்களும் பயணத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது உயரமான ஓரிடத்தை கடக்கும் போது சத்தத்தை உயர்த்தி தக்பீர் சொன்னார்கள்.
அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள், நீங்கள் உங்கள் சத்தத்தை உயர்த்தி கஷ்டப்படாதீர்கள், மெதுவாக தக்பீர் சொன்னால் போதுமானது. நீங்கள் செவிடனயோ அல்லது உங்களை விட்டும் தூரமாக இருக்க கூடியவனையோ அழைக்க வில்லை. நல்ல முறையில் கேட்கக்கூடிய, பார்க்கக்கூடிய, உங்களுக்கு நெருக்கமாக இருக்கக்கூடியவனை தான் அழைக்கிறீர்கள்.
📕 (ஸஹிஹுல் புஹாரி, முஸ்லிம் )
💖இந்த பண்பை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தான், பாவத்தில் வீழ்ந்துவிடுபவர்களாக இருக்கின்றனர்.
🍃உதாரணமாக➖
🌸முஷ்ரிக்குகளில் சிலர் அல்லாஹ்வுக்கு மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பம் இருப்பதாக, தங்களுக்குள் பேசிய போது, அவர்களுக்கு அல்லாஹ் பதில் அளிக்கும் விதமாக இந்த வவசனத்தை இறக்கினான்.
👇👇
☘️امْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ
☘️அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல: மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.
📕(அல்குர்ஆன் 43:80)
☘️இப்னு மஸ்வூத் (ரலி ) அறிவிக்கிறார்கள். ஒரு முறை கஃபாவிற்கு மூன்று பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உடல்கள் பெருத்தவர்களாக , அறிவாற்றல் சிறுத்தவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் கேட்கிறார், நாம் பேசுவதை அல்லாஹ்வால் செவியேற்க முடியுமா? மற்றவர் பதில் அளிக்கிறார், நாம் சப்தமாக பேசினால் கேட்க முடியும், ஆனால் நாம் பொறுமையாக பேசினால் அல்லாஹ்வால் கேட்க முடியாது.
மூன்றாமவர் சொல்கிறார், நாம் சப்தமாக பேசினால் அல்லாஹ்வால் கேட்க முடியும் என்றால், நிச்சயமாக நாம் பொறுமையாக பேசினாலும் அல்லாஹ்வால் கேட்கக் முடியும் என்று கூறியுள்ளார்.
🍁இதை பற்றி அல்குர்ஆனில்,
☘️دوَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ
☘️“உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
📕 (அல்குர்ஆன் 41:22)
🌸நாம் சப்தமாக பேசினாலும், மௌனமாக பேசினாலும், கூட்டமாக பேசினாலும், தனித்தனியே பேசினாலும் நிச்சயமாக அல்லாஹ் மிக துல்லியமாக கேட்டுக் கொண்டு இருக்கிறான்.
💖அஸ்_ஸமீஃ ➖ என்ற அல்லாஹ்வின் இந்த பண்பு, நம் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு பெயர்.
🤲அல்லாஹ் நாம் பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்கிறான், என்ற உள்ளச்சத்தோடு வாழ்ந்து, நல்லதையே பேசக்கூடிய மக்களாக நம் அனைவரையும் ஆக்கிவைப்பானாக.🤲

