top of page
21. Al Fattah.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 14

🌷அல்ஃபத்தாஹ் ➖ الفتاح

🔮இந்த பெயர் அல்குர்ஆனில் 2 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

1⃣

🍁قلۡ يَجۡمَعُ بَيۡنَنَا رَبُّنَا ثُمَّ يَفۡتَحُ بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَهُوَ ٱلۡفَتَّاحُ ٱلۡعَلِيمُ

🍁"நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்" என்றும் கூறுவீராக.

📕 (அல்குர்ஆன் 34: 26)

2⃣

🍁قدِ ٱفۡتَرَيۡنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنۡ عُدۡنَا فِي مِلَّتِكُم بَعۡدَ إِذۡ نَجَّىٰنَا ٱللَّهُ مِنۡهَاۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَاۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَاۚ رَبَّنَا ٱفۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِٱلۡحَقِّ وَأَنتَ خَيۡرُ ٱلۡفَٰتِحِينَ

🍁"உங்கள் மார்க்கத்தை விட்டு; அலலாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் தீரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்" (என்று கூறி), "எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்).

📕 (அல்குர்ஆன் 7: 89)

👆👆என்கிற வசனங்களில் இடம் பெற்றிருக்கிறது.

🔮அல் ஃபத்தாஹ் என்ற பெயர்

ஃபதஹ் என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.

🌸ஃபதஹ என்றால்➖ திறந்தான்;

🌸ஃபத்தாஹ் என்றால்➖ அதிகமாக திறக்க கூடியவன் என்று அர்த்தமாகும்.

🔮அல்ஃபத்தாஹ்-விற்கு விளக்கம் கொடுக்கக் கூடிய உலமாக்கள் அது பல அர்த்தங்கள் உள்ளடக்க கூடியதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

🔮அதில் ஒன்றுதான்,

ஃபத்தாஹ் என்ற பெயருக்கு அர்த்தம்:

🍁الفتاح الذي يفتح مغالق القلوب بلهدى الإيمان

🍁உள்ளங்கள் மூடி இருக்கும்போது அந்த உள்ளங்களை ஈமானை கொண்டும், நேர்வழியை கொண்டும் திறக்கக் கூடியவன் என்ற அர்த்தம் உள்ளதாக கூறப்படுகிறது.

🌸வரலாற்றிலும் பல உள்ளங்களை அல்லாஹ் இப்படி திறந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

🍃உதாரணமாக :

💙மூஸா (அலை) காலத்தில், ஃபிர்அவ்ன் மூஸா  (அலை) அவர்களை ஒரு சூனியக்காரர் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்காக, சூனியக்காரர்களை அழைத்து அவர்கள் முன்னாள் மூஸா (அலை) அவர்களையும் கொண்டு வந்து போட்டியை நடத்திய வரலாறு அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

🍁قالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰى‏ 

🍁பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! (சூனியத்தை) நீங்கள் எறிகின்றீர்களா? அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?" என்று கேட்டார்கள்.

🍁قالَ بَلْ اَلْقُوْا‌ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى‏ 

🍁அதற்கவர் "நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்" என்று கூறினார். (அவர்கள் எறியவே எறிந்த) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவது போல் இவருக்குத் தோன்றின.

🍁فاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى‏ 

🍁ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.

🍁قلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى‏ 

🍁(அச்சமயம் நாம் அவரை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள்! நிச்சயமாக நீங்கள்தான் உயர்ந்தவர்" என்று கூறினோம்.

🍁واَ لْقِ مَا فِىْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا‌ اِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍ‌  وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى‏ 

🍁அன்றி, உங்களது வலது கையில் இருப்பதை நீங்கள் எறியுங்கள்! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே(யன்றி உண்மையல்ல). சூனியக்காரர்கள் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டார்கள்" (என்றும் கூறினோம்).

🍁فاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى‏ 

🍁(மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதனைக் கண்ணுற்ற) in அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு "நாங்களும் மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்கள்.

🍁قالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَ‌ فَلَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَـنَّكُمْ فِىْ جُذُوْعِ النَّخْلِ وَلَـتَعْلَمُنَّ اَيُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰى‏ 

🍁(இதனைக் கண்ட ஃபிர்அவ்ன்) "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தாம் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களுடைய தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டிப் பேரீச்ச மரத்தின் வேர்களில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி  விடுவேன். நிலையான வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார் என்பதையும் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று கூறினான்.

🍁قالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِىْ فَطَرَنَا‌ فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ‌  اِنَّمَا تَقْضِىْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ‏ 

🍁அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ செய்துகொள். நீ செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்.

🍁انَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِيَـغْفِرَ لَـنَا خَطٰيٰنَا وَمَاۤ اَكْرَهْتَـنَا عَلَيْهِ مِنَ السِّحْرِ‌ وَاللّٰهُ خَيْرٌ وَّاَبْقٰى‏ 

🍁நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்களுடைய குற்றங்களையும் உன்னுடைய நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலைத்திருப்பவனும் ஆவான்" என்று கூறினார்கள்.

📕 (அல்குர்ஆன் 20:65 -73)

👆👆 இந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களை திறந்து விடுகிறான்.

🔮அல்ஃபத்தாஹ் என்றால்➖

الذي يكشف الغمه أن عباده ويسرئ البلفرج ويرفع الكرب

🌸மக்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள் துயரங்களை அகற்று பவன், அவர்களுடைய கஷ்டங்களை நீக்கி வைப்பவன்.  என்பதும் அல் ஃபத்தாஹ் என்ற அர்த்தங்களில் ஒன்று என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

🌸மனிதனுக்கு சோதனைகளில் இருந்து விடுவிப்பவனும் அல்லாஹ் தான் என்பதும் இதனுடைய அர்த்தமாகும்.

🌸அதனால்தான் மஸ்ஜிதுக்கு செல்லும்போது ஓதக்கூடிய துஆ-வில்

☘️"اللهم إفتح لي ابواب رحمتك"

☘️"யா அல்லாஹ் உன்னுடைய ரஹ்மத்துடைய  வாசல்களை திறந்து விடு.*

என்று துஆ கேட்க வேண்டுமென்று நபி ﷺ  அவர்கள் கற்றுத் தருகிறார்கள்.

🎯மஸ்ஜித் என்பது ரஹ்மத்தான ஒரு இடம். அங்கு செல்லும் போது ரஹ்மத்தின் வாசல்களை திறந்துவிடு; கஷ்டங்களை நீக்கி விடு என்று கேட்கின்றோம்.

🔮அல்ஃபத்தாஹ் என்று சொன்னால்➖

الذي يفتح عباده الابواب العلم الحكمة والمعرفة

தன்னுடைய அடியார்களுக்கு கல்வி ஞானம் அறிவு போன்றவற்றின் வாசல்களை திறந்து விடுபவன் என்கிற அர்த்தமும் உள்ளது.

🌸அதனால் தான் அல்லாஹ் கல்விக்காக துஆ கேட்க வேண்டும் என்று சொல்கிறான்.

☘️"وقل رب زدني علما"

☘️"என்னுடைய இரட்சகனே எனக்கு கல்வி அறிவை அதிகப்படுத்துவாயாக"

🌸கல்வியும் அல்லாஹ் தரக்கூடியது என, ஃபத்தாஹ் என்ற வார்த்தை சொல்லக்கூடிய செய்தியாக இருக்கிறது.

🔮அல்ஃபத்தாஹ் ➖சாம்ராஜ்யங்களையும், நாடுகளையும், உலகத்தையும், தன்னுடைய நல்லடியார்களுக்கு வெற்றிகொள்ள செய்பவன் என்ற அர்த்தமும் இருக்கிறது.

🌸அதனால்தான் மக்கா வெற்றியை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.👇

☘️إنَّا فَتَحۡنَا لَكَ فَتۡحٗا مُّبِينٗا

☘️(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்.

📕 (அல்குர்ஆன் 48: 1)

🔮அல்ஃபத்தாஹ்➖மறுமையிலும் அல்லாஹ் அடியார்களுக்கு மத்தியில் சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்கக்கூடியவன்.👇👇

☘️اولٰٓٮِٕكَ الَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ‌  فَاِنْ يَّكْفُرْ بِهَا هٰٓؤُلَۤاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوْا بِهَا بِكٰفِرِيْنَ‏ 

☘️இவர்களுக்குத்தான் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம். ஆகவே, அவைகளை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விட்டால் (இவர்களுக்குப் பதிலாக) நிராகரிக்காத (உண்மை முஸ்லிம்களான) மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம்.

📕(அல்குர்ஆன் 6:89)

🔮அல் ஃபத்தாஹ் ➖ அல்லாஹ் வழங்கக்கூடிய வெற்றியை ஃபத்தாஹ் என்ற அர்த்தமாக இருக்கிறது.

🤲இந்த அற்புதமான அழகான பெயரை சரியாக புரிந்து அல்லாஹ்வின் பக்கம் நெருங்க கூடியவர்களாகவும், அல்லாஹ்வுடைய உதவியை நாடக் கூடியவர்களாகவும் அல்லாஹ் நமக்கு கிருபை செய்வானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page