top of page
20. Al Wahhab.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 13

🌷அல்அல்வஹ்ஹாப் ➖ الوهاب

🌹அல்லாஹ்வைப் பற்றி அறிகின்ற போது நமக்கு ஆனந்தமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது அதில் எந்த சந்தேகமும் இல்லை.

🌹அல்லாஹ்வைப் பற்றி அறியும்போது , அல்லாஹ்வும்  நம்மை பொருந்திக் கொள்வான். நம் மீது இறக்கமும் அன்பையும் காட்டுவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

🍁அல்லாஹுத்தஆலா குர்ஆனில்,

🌼فاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ‏ 

🌼நங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை  நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

📕(அல்குர்ஆன் 2:152)

🌹அல்லாஹ்வைப் பற்றி கேட்பதும், பேசுவதும் மிக பெரிய பாக்கியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

🌸அல்லாஹ்வுடைய பெயர்களில் மிக அழகான பெயர் அல்வஹ்ஹாப்.

அல்வஹ்ஹாப் (الوهاب)➖ அதிகமாக வழங்குபவன்

🍁அல் குர்ஆனில் மூன்று இடங்களில் இடம் பெறுகிறது.

1⃣

🌼ربَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌  اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 

🌼(அன்றி அவர்கள்) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை  அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!"

📕(அல்குர்ஆன் 3:8)

2⃣

🌼امْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِ‌‏ 

🌼(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா?

📕(அல்குர்ஆன் 38:9)

3⃣

🌼قالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 

🌼ஆகவே, அவர் "என் இறைவனே! என்னுடைய குற்றங்களை   மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி" என்று பிரார்த்தனை செய்தார்.

📕(அல்குர்ஆன் 38:35)

🌹அல்வஹ்ஹாப் -அதிகமாக வாரி வழங்குபவன், கொடுப்பவன் என்று அர்த்தமாகும்.

🌹வஹ்ஹாப் என்பது அரபு மொழியில் ( فعال) ஃபஆல் என்ற அமைப்பில் இடம்பெறுகிறது.

📍ஃபஆல் - அதிகமாக என்று அர்த்தம்

🌹குர்ஆனில் மூலச்சொல் ஆகிய يهب ، وهب என்ற சொல் பயன்படுகிற போது அல்லாஹ் பல முக்கியமான செய்திகளை நமக்கு சொல்கிறான்.

🔵அதில் முதலாவதாக அல்லாஹ் அவனுடைய ரஹ்மத்தை வாரி வழங்குவது.

🌸ஒரு மனிதர் மீது அல்லாஹ் ரஹ்மத்தை வழங்குகிறான் என்றால், அவன் மிக பெரிய பாக்கியசாலி இம்மையிலும் மறுமையிலும்.

🌸ஏனென்றால் ஒரு மனிதன் சுவர்க்கம் செல்ல வேண்டுமென்றால் அல்லாஹ்வுடைய ரஹ்மத் இல்லாமல் செல்ல முடியாது.

🌸 நபி ﷺ கூறினார்கள்; "அல்லாஹ்வின் ரஹ்மத் இல்லாமல் ஒருவர் சுவர்க்கம் செல்ல முடியாது". ஸஹாபாக்கள் "உங்களுக்கும் இந்த நிலைமையா யா ரசூலல்லாஹ்!" என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள்; "ஆம் நானும் என் அமல்களை கொண்டு சுவர்க்கம் செல்ல முடியாது அல்லாஹ்வின் ரஹ்மத் மூலம் தான் சுவர்க்கம் செல்ல முடியும். அல்லாஹ் தன் ரஹ்மதத்தால் நனைந்து கொண்டு விட்டான்."

🌸(ரஹ்மத் என்றால் அல்லாஹ்வுடைய அன்பு, கருணை) அல்லாஹ்  என்னை இவைகளை கொண்டு சூழ்ந்து கொண்டான் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்.

🌼ووَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا‏ 

🌼அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் "அலைஹிஸ் ஸலாம்" என்று எந்நாளும் துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.)

🌼و وَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا‏ 

🌼நம் கருணையைக் கொண்டு அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம்.

📕(அல்குர்ஆன் 19:50,53)

🌼ربَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌  اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 

🌼(அன்றி அவர்கள்) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை  அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!"

📕(அல்குர்ஆன் 3:8)

🌼امْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِ‌‏ 

🌼(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா?

📕(அல்குர்ஆன் 38:9)

👆👆👆

என்ற வசனங்களில் அல்லாஹ் தன்னுடைய ரஹ்மத்தை வாரி வழங்குகிறான் என்பதை சொல்கிறான்.

🌹வஹ்ஹாப் என்பதின் முதல் நிலை அல்லாஹ் தன் அடியார்களுக்கு ரஹ்மத்தை வாரி வழங்குவது என்பதாகும்.

🔵சிலருக்கு இந்த உலகத்தில் ஆட்சி அதிகாரம் வழங்குவதில் (وهب) வஹப என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறான்.

🌼ففَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِىْ رَبِّىْ حُكْمًا وَّجَعَلَنِىْ مِنَ الْمُرْسَلِيْنَ‏ 

🌼ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என்னுடைய இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன்னுடைய தூதராகவும் ஆக்கினான்.

📕 (அல்குர்ஆன் 26:21)

🌼ربِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ 

🌼என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லோர்களுடன்  என்னைச் சேர்த்து விடுவாயாக!

📕(அல்குர்ஆன் 26:83)

🌼قالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 

🌼ஆகவே, அவர் "என் இறைவனே! என்னுடைய குற்றங்களை   மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி" என்று பிரார்த்தனை செய்தார்.

📕(அல்குர்ஆன் 38:35)

 

என்ற வசனங்களில் அல்லாஹ் ஆட்சி அதிகாரம் அவன் நாடியவர்களுக்கு வாரி வழங்குவான் என்ற அர்த்தமாக உள்ளது.

🔵வஹ்ஹாப் என்ற  இந்த பெயர், அல்லாஹ் தன் அடியானுக்கு சாலிஹான மனைவியையும், நல்ல சந்ததிகளையும் வழங்குகிறான் என்ற அர்த்ததையும் தருகிறது .

1⃣

🌸وٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا

🌸மேலும் அவர்கள்; "எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.

📕 (அல்குர்ஆன் 25:74)

☝️வஹாப் என்ற சொல்லில் இருந்துதான் இதில் ஹப் (هب)என்ற சொல் வந்தது.

2⃣

🌸ووَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ نَافِلَةٗۖ وَكُلّٗا جَعَلۡنَا صَٰلِحِينَ

🌸இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.

📕 (அல்குர்ஆன் 21:72)

☝️யஹ்யாவை ஹிபத்தாக நாம் வழங்கினோம் என்று சொல்கிறான்.

3⃣

🌸ووَهَبۡنَا لِدَاوُۥدَ سُلَيۡمَٰنَۚ نِعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٌ

🌸இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.

📕(அல்குர்ஆன் 38:30)

👆தாவூதுக்கு சுலைமான் ஐ ஹிபத்தாக வழங்கினோம் என்று குறிப்பிடுகிறான்.

🔵 வஹ்ஹாப் என்பதின் அர்த்தம்   நல்ல மனைவி நல்ல சந்ததியை வழங்குபவன் என்பதாகவும் இருக்கிறது.

🔵எனவே வஹ்ஹாப் என்பது

🔰ரஹ்மத்தை வழங்குபவன்.

🔰ஆட்சி அதிகாரம் வழங்குபவன்.

🔰நல்ல மனைவியையும் சந்ததியையும் வழங்குபவன்.

🔰உலகத்தில் உள்ள நிஃமத்து களை தன் அடியார்களுக்கு வழங்குபவன் என்ற  அர்த்தமாக உள்ளது.

🎯எனவே ஒரு மனிதன்  அல்லாஹ்வை வஹ்ஹாப் என  புரிந்து ஏற்றுக் கொண்டால் தன் தேவைகளை அல்லாஹ்விடம் கேட்பான்.

🎯அவனுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய ஹிபத்துகளுக்கு நன்றி செலுத்த கூடியவனாக இருப்பான்.

🤲எல்லாம் வல்ல அல்லாஹ் அல்வஹ்ஹாப் தன் ரஹ்மத்தை களை நம்மீது வழங்குவானாக ஆமீன். 🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page