top of page
19. Al Haadee.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் ➖12

🌷அல்ஹாதி ➖ الهادى

🥀பாவப்பட்ட மக்கள் என்பவர் யார்❓

🥀 பாவப்பட்ட மக்கள் என்பவர்கள் இந்த உலகிற்கு வந்து அல்லாஹ்வைப் பற்றி அறியாமல் போனவர்கள்.

🌟அல்லாஹ்வைப் பற்றி அறிய இஸ்லாம் நமக்கு பல வழிமுறைகளை காட்டித் தந்துள்ளது. அதில் ஒன்று தான் அல்லாஹ்வின் பெயர்களை, பண்புகளை அறிவது.

🌹அல்ஹாதி (الهادى) ➖வழிகாட்டுபவன்

🌹அல்ஹாதி என்ற பெயர் ஹிதாயத் என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது.

🌹அல் ஹாதி என்ற பெயர் அல் குர்ஆனில் 2 இடங்களில் வந்துள்ளது.

1⃣

 🍀ولِيَـعْلَمَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّكَ فَيُؤْمِنُوْا بِهٖ فَـتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ‌  وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

🍀(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.

📕(அல்குர்ஆன் 22:54)

2⃣

🍀وكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِيْنَ‌ وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَّنَصِيْرًا‏ 

🍀மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.

📕(அல்குர்ஆன் 25:31)

🌕அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்பது பலவழியாக அமையும் என்று அகீதா உலமாக்கள் கூறுகிறார்கள்.

1⃣முதல் வகை:

🔵"அல்ஹிதாயதுல் ஆம்மா" ➖பொதுவான வழிகாட்டுதல்.

☘️உலகில் அல்லாஹ் படைத்த படைப்புகள் ஒவ்வொன்றிருக்கும் அவை வாழ்வதற்குறிய வழிகளை வழங்குபவன்.

🍃உதாரணமாக:

🌿பிறக்கும்   குழந்தைக்கு தன் உணவு எங்கே உள்ளது என்ற வழிகாட்டுதலை கொடுப்பவன் அல்ஹாதி....

🌿மிருகத்தின் குட்டிக்கும் அதன் உணவு தாயின் மார்பகத்தில் உள்ளது என்று வழிகாட்டுபவன் அல்ஹாதி.

 🌿மனிதன் இந்த உலகில் வாழ்வதற்கு தேவையான அனைத்து வழிகாட்டுதலும் அல்லாஹ்வினால் வழங்கப்படுகிறது.

 

2⃣இரண்டாவது வகை:

🔵"ஹிதாயத்துல் இர்ஷாத் வல் பயான் லில்முகல்லஃபீன்" ➖அல்லாஹ்வின் சட்டங்களை பின்பற்றுவதில் நேர்வழி எது❓ வழிகேடு எது❓ என்பதை காண்பிப்பவன்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

🍀وهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌‏ 

🍀மேலும், (நன்மை, தீமையாகிய) இரு வழிகளை நாம் அவனுக்குக் காண்பித்துவிட்டோம்.

(📕அல்குர்ஆன் 90:10)

3⃣மூன்றாவது வகை:

🔵"ஹிதாயத்துல் தௌபிக் வல் இல்ஹாம்"➖நேர்வழியை கொடுப்பவன்.

🔵அல்லாஹ்வை தவிர இந்த உலகத்தில் யாரும் யாருக்கும் நேர்வழியை கொடுக்க முடியாது.

🌹நபி ﷺ அவர்கள் தஃவா பணியில் தனக்கு உறுதுணையாக இருந்த தனது சிறிய தந்தை அபூதாலிபின் மரணவேளையில்; '"லா இலாஹ இல்லல்லாஹு” என்ற வார்த்தையை சொல்லுங்கள், இதை வைத்து நான் அல்லாஹ்விடம் மன்றாடுவேன்' என்று கூறினார்கள்.

ஆனால் அபூதாலிபுக்கு  ஹிதாயத் கிடக்கவில்லை.

🌹அல்லாஹ் குர்ஆனில் கூறினான், 👇👇

🍀انَّكَ لَا تَهْدِىْ مَنْ اَحْبَبْتَ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏ 

🍀(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

📕(அல்குர்ஆன் 28:56)

🌹அல்லாஹ் நாடியவருக்கு மட்டும் தான் நேர்வழி கிடைக்கும்.

🌸எனவே அல்லாஹ் ஹாதி என்பது ➖ நேர்வழியை கொடுப்பவன் என்ற அர்த்தமும் இதில் அடங்கி இருக்கிறது.

🌸அல் ஹாதி➖

1⃣ சொர்க்கத்திற்கு வழிகாட்டுபவன்.

2⃣ நரகத்திற்கு வழிகாட்டுபவன்.

என்ற அர்த்தமும் இருக்கிறது.

🌹சொர்க்கத்திற்கு வழி காட்டுபவன்

☘️ونَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ‌ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ هَدٰٮنَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا اللّٰهُ‌ ‌ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ‌  وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَـنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ 

☘️அன்றி, (இவ்வுலகில் ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து   நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(கள் பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி அவர்கள் "இந்த (சுவனபதியை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதனை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்" என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) "பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்" என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.

📕 (அல்குர்ஆன் 7:43)

🌹நரகத்திற்கு வழிகாட்டுபவன்

☘️احْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏ 

☘️அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று சேர்த்து,

☘️منْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰى صِرَاطِ الْجَحِيْمِ‏ 

☘️"அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்" (என்றும்),

(அல்குர்ஆன் 37:22,23)

🌹அல்ஹாதி➖ என்றால் வழிகாட்டுபவன்.

🍁மனித, ஜின், பருவ வயதை அடைபவர்களுக்கு எது நேர்வழி எது வழிகேடு என்பதை காட்டுகிற வனாகவும்,

🍁ஹிதாயத் (நேர்வழியை) வழங்குபவனாகவும், அல்லது அதில் நுழைவிப்பவனாகவும்,

🍁சொர்க்கத்திற்கு வழி காட்டுபவன் அல்லது நரகத்திற்கு வழிகாட்டுபவனாகவும் இருக்கின்றான் என்பதை இந்த ஹாதி என்ற பெயர் உணர்த்துகிறது.

🤲எனவே இந்தப் பெயரை நாம் சரியாக புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக. 🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page