top of page
38. Ash Shaheed.jpg
39. Ar Raqeeb.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 25

🌷அஷ்ஷஹீத் (الشهيد) ➖சாட்சியாளன்

🌷‌ஹஅர்ரகீப் (الرقيب) ➖ கண்காணிப்பவன்

🔮அஷ்ஷஹீத் என்ற பெயர் அல்குர்ஆனில் சுமார் 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

1⃣

💐الَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ ‏ 

💐 வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.

📕(அல்குர்ஆன் 85:9)

2⃣

💐ماۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ‌ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ‌  وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا‌  وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا‏ 

💐 உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன் 4:79)

3⃣

💐انَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصّٰبِـــِٕيْنَ وَالنَّصٰرٰى وَالْمَجُوْسَ وَالَّذِيْنَ اَشْرَكُوْۤا ‌  اِنَّ اللّٰهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌  اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏ 

💐 திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.

📕 (அல்குர்ஆன் 22:17)

🔮அர்ரகீப் என்ற பெயர் அல்குர்ஆனில் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளது.

1⃣

💐يـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌  وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏ 

💐 மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன் 4:1)

2⃣

💐لا يَحِلُّ لَـكَ النِّسَآءُ مِنْ بَعْدُ وَلَاۤ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَـكَتْ يَمِيْنُكَ‌ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ رَّقِيْبًا‏ 

💐 இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். 

📕 (அல்குர்ஆன் 33:52)

3⃣

💐ما قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ‌ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ‌ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏ 

💐 “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);

📕 (அல்குர்ஆன் 5:117)

📜 ஷேக் அப்துர் ரஹ்மான் இப்னு சஅதி (ரஹி) அவர்கள், "அஷ்ஷஹீத் மற்றும் அர்ரகீப்" என்ற இரண்டு பெயர்களும் ஒரே கருத்தைத் தரக்கூடிய பெயர்கள் என்று கூறினார்கள்.

🔮அஷ்ஷஹீத் என்றால் ➖

🌳ஒவ்வொன்றையும் பார்க்கக்    கூடியவன்,

🌳அவனுக்கு எதுவுமே மறையாது,

🌳 மெதுவான அல்லது வெளிப்படையான எல்லாவிதமான சத்தங்களையும் அறியக் கூடியவனாக இருக்கிறான்,

🌳இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற ஒவ்வொன்றையும் பார்க்கக் கூடியவனாக இருக்கிறான்.

🔮அர்ரகீப் என்றால் ➖

🌲உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதை அறியக் கூடியவன்,

🌲கண்காணிக்கக்கூடியவன்.

🔮இந்த இரண்டு பெயர்களும் மனிதர்களுடைய உள்ளத்தில், அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வையும், நம்பிக்கையும் ஏற்படுத்தக்கூடிய பெயர்களாக இருக்கின்றன.

🔮அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அல்குர்ஆனில் பல இடங்களில் வெளிப்படையாக கூறியிருக்கிறான் :

1⃣

💐واعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ‌ 

💐 அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்;

📕 (அல்குர்ஆன் 2:235)

2⃣

💐وهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏ 

💐 நங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

📕 (அல்குர்ஆன் 57:4)

3⃣

💐الَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰى‏ 

💐 நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

📕 (அல்குர்ஆன் 96:14)

4⃣

💐فاِنَّكَ بِاَعْيُنِنَا‌ 

💐 நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்..

📕 (அல்குர்ஆன் 52:48)

5⃣

💐يعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ‏ 

💐 கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.

📕 (அல்குர்ஆன் 40:19)

🔮அல்லாஹ் நம்முடைய ஒவ்வொரு காரியத்தையும், செயலையும், ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அஷ்ஷஹீத் மற்றும் அர்ரகீப் என்ற பெயர்கள் வலியுறுத்துகின்றன.

🎯அல்லாஹ்தான் அஷ்ஷஹீத் அர்ரகீப் என்று நாம் ஈமான் கொள்ளும் போது, நம்முடைய உள்ளங்களில் "முறாக்கபா" என்ற தன்மை உண்டாகிறது,

🔮'முறாக்கபா' என்றால் எந்த நிலையிலும், எந்த நேரத்திலும், எல்லா சந்தர்ப்பத்திலும், அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்கிற உணர்வு நம்மிடத்தில் வரும்.

🔮நபி ﷺஅவர்களிடம் ஜிப்ரீல் (அலை) இஹ்ஸான் பற்றிக் கேட்டபோது, நபி ﷺஅவர்கள் கூறினார்கள்,

👇👇👇👇

💐"ஒரு மனிதன் அல்லாஹ்வை பார்ப்பது போன்று அவனை வணங்க வேண்டும், அவனை நீ பார்க்காவிட்டாலும், அல்லாஹ் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு வணங்க வேண்டும்"

🌸இது இஹ்ஸானுடைய மகாம் என்பார்கள். இந்த தன்மைகளை நம் மனதில் வளர்த்து கொள்வது. இது அஷ்ஷஹீத் அர்ரகீப் என்ற பெயர்கள் ஏற்படுத்தும் மாற்றம் ஆகும்.

🔮"முறாக்கபா" என்ற சிந்தனை நம்முடைய உள்ளங்களில் வந்தால், நிச்சயமாக நம்முடைய உள்ளம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடையும்.

📜உள்ளங்களை பற்றி அதிகம் பேசிய அறிஞர், இமாம் இப்னு கய்யூம் அல் ஜவ்ஸியா (ரஹி)அவர்கள் கூறினார்கள்;

"அல்லாஹ்வைக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி அடைவது என்பது, அல்லாஹ்வை கொண்டு உள்ளம் சந்தோஷம் அடைவது என்பது, அல்லாஹ்வைக் கொண்டு கண்குளிர்ச்சி அடைவது என்பது இந்த உலகிலுள்ள எந்த இன்பமும் அதற்கு நிகராகாது."

🎯"அல்லாஹ்வை அறிந்து, அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கிறான் என்று, அல்லாஹ்வுக்காக ஒவ்வொன்றையும் செய்கின்றோம், அல்லாஹ்வுக்காக என்ற உணர்வு நம்மிடத்தில் வந்தால், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் சந்தோஷமும், இந்த உலகத்தில் எந்த சுகத்தை கொடுத்தாலும் அந்த மகிழ்ச்சிக்கு நிகராகாது".

🎯அல்லாஹ், அஷ்ஷஹீத் மற்றும் அர்ரகீப் என்பதை நாம் அறியும்போது, நிச்சயமாக அல்லாஹ் எதிர்பார்க்கக்கூடிய நல்லடியார்களாக நாம் மாற முடியும்.

🤲மேலும், இந்த உலகத்திலும் நாம் அல்லாஹ்வுடைய கண்காணிப்பைக் கொண்டு மகிழ்ச்சி அடையவும், மறுமையிலும் அல்லாஹ்வை பார்க்கிறபோது ஆனந்தம் அடையவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page