top of page
16 Al Waahid.jpg
17. Al Ahad.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 10

🌷அல்அஹத் ➖ الأحد

🌷அல்வாஹித் ➖الواحد

💎அல்அஹத் (الأحد) என்றால் தனித்தவன்.

💎அல்அஹத் என்ற பெயர் அல்குர்ஆனில் சூரத்துல் இஃக்லாஸ் எனும் குல்ஹூவல்லாஹு அஹத் சூராவில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது

💎இந்த பெயர் குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் இடம்பெற்றாலும் இந்த சூரா மகத்தான ஒரு சூரா என நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்

💎அபூ ஸயீத் அல்குத்ரீ(رضي الله عنه) அறிவித்தார்:

 இறைத்தூதர் ﷺ அவர்கள் , 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்' என்று கூறினார்கள்.

📕(ஸஹீஹ் புகாரி : 5013)

💎ஏனென்றால் அல்லாஹ்வுடைய வஹ்தானியத்தை  பறைசாற்றுகின்ற காரணத்தினால் இந்த சிறப்பு இதற்கு இருக்கிறது.

💎நபி ﷺ அவர்கள் ஒரு சிறு படையின் தலைவராக ஒருவரை நியமித்து அனுப்பியிருந்தார்கள்.  அவர் தன் தோழர்களுக்குத் தொழுகை நடத்தும்போது ஒவ்வொரு ரகஅத்திலும் ருகூ செய்யும் முன்பு ‘குல்ஹுவல்லஹு அஹது’ சூராவை ஓதுவார்கள்.  அவர்கள் ஊர் திரும்பியபோது அவருடைய தோழர்கள், இச்செய்தியை நபி ﷺ அவர்களிடம் கூறிய போது, அவர்கள் மக்களிடம், ‘அவர் ஏன் அப்படிச் செய்தார்’ என கேட்கச் சொன்னார்கள்.  மக்கள் அவரிடம் கேட்டபோது அவர், 'அது அளவற்ற கருணையாளனின் தன்மைகளை வர்ணிக்கிறது. அதனால் அதை ஓதுவதை நான் நேசிக்கிறேன்’ என்று கூறினார்கள். நபி ﷺ ‘அவரிடம் அல்லாஹ்வும் அவரை நேசிக்கிறான் என்று சொல்லுங்கள்.’என்று கூறினார்கள்.

💎அல்அஹத் ➖ தனித்தவன்

💎அஹத் என்ற சொல்லின் அர்த்தம்➖ 'தனித்தவன்' என்பதாகும். அவனோடு இரண்டாவதாக யாரும் இருக்க மாட்டார்கள்.

💎அல்வாஹித் (الواحد) ➖ ஒருவன்

💎அல்வாஹித் என்ற இந்தப் பெயர் அல்குர்ஆனில் 22 இடங்களில் இடம் பெற்று இருக்கிறது.

💎வாஹித் என்றால் "ஒன்று" என்று அர்த்தம்.

💎அரபு மொழியில் எண்களை  குறிப்பிடும்போது ஒன்று என்பதற்கு  வாஹித் என்ற சொல்லை பயன்படுத்துவார்கள்.

💎அல்வாஹித் என்றால் (ஒன்று) ஒருவன் என்பது அர்த்தமாகும்.

💎அல்லாஹ்வுடைய பெயராகிய வாஹித், அஹத் என்பவை பல அர்த்தங்களை நமக்கு தருகின்றன.

👇👇👇👇

1⃣ எல்லாவிதமான பூரணத்துவமான அம்சங்களிலும் சிறப்புகளிலும் அல்லாஹ் தனித்தவன்,

💎அந்த தனித்துவம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது, அதிலே வேறு யாருமே சேர முடியாது என்பதை இந்த இரண்டு பெயர்களும் சுட்டிகாட்டுகின்றன.

2⃣அல்லாஹ்வுடைய 'தாத்தில்' அவன் தனித்தவன். அல்லாஹ்வுக்கு நிகராக யாருமே வர முடியாது.

💎தாத்➖ என்ற வார்த்தையை தமிழிலே மொழிபெயர்க்க இயலாது. காரணம் அதற்கு நிகரான சொல் தமிழில் கிடையாது.

📌தாத்- என்றால் உள்ளமை.  (ஒரு யதார்த்தமான நிலை)

3⃣அல்லாஹ்வுடைய ஸிஃபத்துகளில் (பண்புகளில்), அவனுடைய தன்மைகளில் அல்லாஹ் தனித்தவன். அவை அனைத்துமே குறைபாடில்லாத உயர்ந்த பண்புகள்.

📌ஸிஃபாத்➖ என்றால் அல்லாஹ்வுடைய பண்புகள், தன்மைகள்.

 💎அல்லாஹ்வுடைய பண்புகளில் அல்லாஹ்வோடு இன்னுமொருவர் வந்து நிற்க முடியாது. அல்லாஹ் மட்டும்தான் அவனுடைய பண்புகளில் தனித்தவனாக இருக்கின்றான் என்பதை அல்அஹத்,  அல்வாஹித் என்ற பெயர்கள் சொல்கின்றன.

💎அல்லாஹ்வுடைய திருநாமங்கள் நிறைய இருக்கின்றன.

💎அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்களை அடையாளப்படுத்தி அவற்றை பொருளுணர்ந்து நம்பிக்கை கொண்டு மனனமிட்டவருக்கு சுவர்க்கம் கிடைக்கும் என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

💎அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.

📕 (ஸஹீஹ் புகாரி : 6410)

 4⃣ அல்லாஹ்வுடைய ஒவ்வொரு திருநாமங்களிலும் அவன் தனித்தவன்தான்.

💎மனிதர்களில் ஒருவரை பார்த்து ரஹீம் என்று சொல்லலாம். ஆனால் அந்த பெயர் அல்லாஹ்வுக்கு வரும்போது அதில் அவன் தனித்தவன். இந்த ரஹீம் அல்லாஹ்வோடு அருகில் நிற்க முடியாது. அல்லாஹ்வுடைய பெயர்களுக்கு நிகராக எந்த ஒரு படைப்பும் வந்து நிற்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

5⃣அல்லாஹ்வுடைய அனைத்து செயல்களிலும் அல்லாஹ் தனித்தவன். உதாரணமாக அல்லாஹ்வுடைய செயல்களான பேசுவது, இறங்குவது, சிரிப்பது, இப்படியான அனைத்து செயல்களிலும் அல்லாஹ் தனித்தவன்.

💎மனிதனும் பேசலாம், சிரிக்கலாம், கேட்கலாம், பார்க்கலாம், ஆனால் அல்லாஹ்வுக்கு பக்கத்தில் அவனுக்கு நிற்க முடியுமா என்று கேட்டால்❓முடியாது‼️

🎯ஏனென்றால் அல்லாஹ் தனித்துவமானவன். எல்லா விஷயங்களிலும் அல்லாஹ் தனித்தவனாக இருந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு நிகராக இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது.

🎯இந்தப் பெயர்களை ஒரு மனிதன் சரியாக புரிந்து ஈமான் கொண்டால், அவன் எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்த கூடியவனாக இருப்பான். அல்லாஹ்வுக்கு நிகராக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் யாரையும், எதனையும் அவன் கொண்டு வர மாட்டான் என்பதை உணர்த்துவதுதான் அல் அஹத், அல் வாஹித் என்ற பெயர்களை கற்பதின் பிரயோசனமாக இருக்கிறது.

🤲எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த பெயர்களை சரியான முறையில் அறிந்து அதற்கேற்ப வாழ்வதற்கு நம் எல்லோருக்கும் தவ்ஃபீக் செய்வானாக🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page