top of page
36. Al Qawiyy.jpg
37. Al Matheen.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 24

🌷அல்கவிய் ➖ القوي

🌷அல்மதீன் ➖ المتين

💎அல்கவிய் என்ற பெயர் குர்ஆனில் 25 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

📖அல்லாஹ் குர்ஆனில்:

☘️اللّٰهُ لَطِيْفٌ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَآءُ‌ وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏ 

☘️அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகின்றான். அவன் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.

📕(அல்குர்ஆன் 42:19)

☘️كتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِىْ‌ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ‏ 

☘️தானும், தன்னுடைய தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்களென்று அல்லாஹ் விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானாகவும் (அனைவரையும்) மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.

📕(அல்குர்ஆன் 58:21)

☘️فلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا صٰلِحًـا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْىِ يَوْمِٮِٕذٍ‌ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏ 

☘️(வேதனையைப் பற்றிய) நம்முடைய கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் இருக்கிறான்.

📕(அல்குர்ஆன் 11:66)

💎அல்மதீன் என்ற பெயர் குர்ஆனில் ஒரு வசனத்தில் இடம்பெற்றுள்ளது,

☘️انَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ‏ 

☘️(நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்கமுடியாத பலசாலியுமாவான்.

📕(அல்குர்ஆன்  51:58)

💎அல்கவிய் என்றால்➖ பலமுள்ளவன் என்று அர்த்தமாகும்.

💎அவனை மிகைக்க யாராலும் முடியாது. அவனை பலவீனப்படுத்தவும் யாராலும் முடியாது. அப்படிப்பட்ட பலமுள்ளவன்.

💎அல்மதீன் என்றால்➖ மிக உறுதியானவன். பலத்தில் கடுமையான பலமுள்ளவன் என்று அர்த்தமாகும்.

💎அல்லாஹ் அவனுடைய நபிமார்களுக்கு  அவனுடைய நேசர்களுக்கு உதவி செய்தது அவனுடைய பலத்தில் உள்ளது.

🍃உதாரணமாக:

 🌼அல்லாஹ் சூரத்துல் ஹூத் 66வது வசனத்தில் சாலிஹ் (அலை) அவர்களை பாதுகாத்த அந்த சம்பவத்தை

اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏

நிச்சயமாக உம்முடைய ரப்பு கவிய் ஆகவும் அஜீஸ் ஆகவும் இருக்கிறான்.

💙அல்லாஹ் கவிய் ஆக இருப்பதனால் தான் அநியாயக்காரர்களையும், பாவிகளையும் பல்வேறு விதமான தண்டனைகளை கொண்டு உலகத்தில் அழித்திருக்கிறான்.

📝சூரத்துல் அன்பால் 52 ஆவது வசனத்தில் ஃபிர்அவ்ன் எப்படி அவனுடைய தண்டனை ஆக்கிரமித்தது என்பதை

☘️ انَّ اللّٰهَ قَوِىٌّ شَدِيْدُ الْعِقَابِ‏

☘️நிச்சயமாக அல்லாஹ் கவிய் ஆகவும் கடுமையாக தண்டிப்பவனாகவும் இருக்கிறான்.

💙அல்லாஹுத்தஆலா 'கவிய்' ஆக இருப்பதால் இந்த உலகத்தில் பாவிகளை அநியாயக்காரர்கள் தண்டிக்கிறான்.

💙அல்லாஹ் கவிய் என்பதினால் வானங்களும் பூமிகளும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

💙அல்லாஹ் கவிய் என்பதனால் , தன் அடியார்களுக்கு நாடிய விதமாக ரிஸ்க்கை அளிக்கிறான்.

👇👇

 📝சூரத்துல் ஷுறா 19 ஆவது வசனத்தில் ,

☘️اللّٰهُ لَطِيْفٌۢ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَآءُ‌ۚ وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ

☘️அல்லாஹ் அவன் நாடியவர்களுக்கு ரிஸ்க்கை கொடுக்கிறான் அவன் கவிய் ஆகவும், அஜீஸ் ஆகவும் இருக்கிறான்.

💎அல்லாஹு தஆலா கவிய் எனும் போது அவனிடமே நாம் அனைவரும் மீள் வேண்டும் என்பது புரிகிறது.

💎ஒரு அடியான் அடைக்கலம் தேடுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே கிடையாது.

💎ஒரு மனிதன் கடைசியாக போய் நிற்கும் இடம் அல்லாஹ்வின் சந்நிதானம்.

💎அல்லாஹ் நாடியதை எல்லாம் செய்கின்ற ஆற்றல் படைத்தவன் ஏனெனில் அவன் கவிய் ஆக இருக்கிறான்.

💙அல்லாஹ் கவிய் என்று ஒரு மனிதன் அவனை ஏற்றுக் கொள்ளும்போது,  அல்லாஹ்விடத்தில் அவன்  மீளுகின்றான்; அல்லாஹ்விடத்தில் அவன் இறைஞ்சுகின்றான். அல்லாஹ்வின் மீது அவன் தங்கியிருக்கிறான்.

💎நபி ﷺ  அவர்கள் அபூ மூஸா அல் அஷரி (ரலி )அவர்களிடம் "அபூ மூசாவே لاحول ولاقوة الا بالله என்று நீர் கூறும். அது சுவர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்றாகும்" என்று கூறினார்கள்.

💎அபூதர்(ரலி) அவர்கள் கூறினார்கள் "என் நண்பர் நபி ﷺ அவர்கள் 7 விஷயங்களை ஏவினார்கள் ; அதில் ஒன்றுதான் لاحول ولاقوة الا بالله என்பதை அதிகமாக சொல்லுங்கள்; ஏனென்றால் அது அர்ஷுக்கு கீழே இருக்கக்கூடிய ஒரு பொக்கிஷமாக காணப்படுகிறது".

📍லா ஹவ்ல  (لاحول) என்றால்➖ மாற்றம் ஏற்படுவது கிடையாது.

📍வலா குவ்வத்த  (ولا قوة) என்றால் ➖சக்தி என்பது கிடையாது.

📍இல்லா பில்லாஹ் என்றால் ➖ ( الا بالله) அல்லாஹ்வைக் கொண்டே தவிர.

🍀மாற்றம் ஏற்படுவதற்கு அல்லாஹ்வின் நாட்டம் தேவை. சக்தி என்பது அல்லாஹ்வின் சக்தியை கொண்டு தான் அமையும் என்பதை நபி ﷺ அவர்கள் இந்த ஹதீஸ்மூலம் நமக்கு கூறுகிறார்கள்.

🎯அல்லாஹ்  அல்கவிய், அல்மதீன் என்று நாம் ஈமான் கொள்ளும்போது, அந்த பெயர் உயர்த்தக்கூடிய இத்தனை கருத்துக்களை நாம் ஈமான் கொள்ளும்போது, நாம் பலவீனமானவர்கள் என்பதை உணர வேண்டும். அல்லாஹ்விடத்தில் நாம் தஞ்சம் அடைய வேண்டும். அவனிடமே நாம் மீள வேண்டும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

🤲எனவே அல்லாஹ்வின் பெயர்களை புரிந்து அதன்படி நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க அல்லாஹு ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் தவ்ஃபீக் செய்வானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page