




🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 21
💖நம்மை படைத்து நிர்வகிக்கின்ற அல்லாஹு ரப்புல் ஆலமீன் பற்றி அறிவது மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு சிறந்த வணக்கமாகும்.
💖படைத்தவனை அறிவதும், படைத்தவனுக்காக வாழ்வதும், மறுமையில் அவனைப் பார்ப்பதும், மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் ,உண்டாக்கும்.
🌷இன்று மிக மிக முக்கியமான நான்கு பெயர்களை பார்க்க இருக்கின்றோம்
1⃣ அல்அஃபூவ் - العفو
2⃣ அல்கஃபூர் - الغفور
3⃣ அல்கஃப்பார் - الغفار
4⃣ அத்தவ்வாப் - التواب
👆👆
இந்த நான்கு பெயர்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். அதனால் ஒரே அமர்வில் இந்த நான்கு பெயர்களும் பார்க்கலாம்.
💖அல்அஃபூவ் என்கிற பெயர் குர்ஆனில் 5 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.
💖அல்கஃபூர் என்கிற பெயர் 91 இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
💖அல்கஃப்பார் என்கிற பெயர் 5 இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.
💖அத்தவ்வாப் என்பது 11 இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
💖"அலஅஃபூவ்"
என்கிற பெயர் "அல்கஃபூர் " என்கிற பெயரோடு சேர்த்து அல்லாஹ் குர்ஆனில்,
🌼۞ذَٰلِكَۖ وَمَنۡ عَاقَبَ بِمِثۡلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِيَ عَلَيۡهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ
🌼அது (அப்படியே ஆகும்) எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே (துன்புறுத்தியவனை) தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.
📕 (அல்குர்ஆன் 22- 60)
💖அல்குர்ஆனில் அல்லாஹ் அஃபூவ் , கஃபூர் என்கிற பெயர்களை ஒன்றாக சொல்கிறான்.
👇👇
🌼فأُوْلَٰئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا
🌼அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்;. ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
📕 (அல்குர்ஆன் 4-99)
💖கஃபூர் என்கிற பெயரை, ரஹீம் என்கிற பெயரோடு சேர்த்து சொல்கிறான்.
🌼ليُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ وَيَتُوْبَ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
🌼(அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பி விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
📕 (அல்குர்ஆன் 33:73)
💖கஃப்பார் என்கிற பெயர் குர்ஆனில்,
🌼وإِنِّي لَغَفَّارٞ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا ثُمَّ ٱهۡتَدَىٰ
🌼"எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்" (என்று கூறினோம்).
📕 (அல் குர்ஆன் 20- 82)
💖தவ்வாப் என்கிற பெயர் குர்ஆனில்,
🌼إلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَٰئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
🌼எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
📕 (அல் குர்ஆன் 2-160)
💖அல்குர்ஆனில் இப்படி பல இடங்களில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
💖அல்லாஹ்வின் பாவமன்னிப்பை நாம் பெறுவதற்கு நபி ﷺ அவர்கள் ரமலானில் கடைசி பத்து இரவுகளில் ஓதக்கூடிய பிரத்யேகமான ஒரு பிரார்த்தனையை கற்றுத்தந்துள்ளார்கள். சிறிய பிரார்த்தனையாக இருந்தாலும் நிறைவான பொருள் கொண்ட அல்லாஹ்விடம் அதிக பெறுமதியான இந்தப் பிரார்த்தனையை நாம் அனைவரும் மனனமிட்டு அதிகமாக பிரார்த்திக்க வேண்டும்.
"அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால் அந்த இரவில் என்ன சொல்ல வேண்டும்” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கற்றுத் தந்தார்கள்.
🌸اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
🌸அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபعஃபு அன்னீ
பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னித்து விடு!
📜அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
📕 (நூல் : திர்மிதீ 3435)
💖அஃபூவ் என்ற பெயரின் அர்த்தத்தில் மன்னிப்பு என்ற அர்த்தமும் அழித்துவிடு என்ற அர்த்தமும் இருக்கிறது.
💖அல்லாஹுத்தஆலா மன்னிப்பவனும், நம்முடைய பாவங்களை அழிப்பவனாகவும் இருக்கிறான் என்பது அஃபூவ் என்பதனுடைய அர்த்தமாகும்.
💖நாம் பாவத்தை செய்கிறோம் அல்லாஹ்விடம் அதற்கு ஏற்றவாறு மன்னிப்பு கேட்கிறோம். அதற்கு அல்லாஹ் நம்மை மன்னித்து பாவங்களை அழித்து விடுகிறான். அதற்குப் பிறகு அந்த பாவங்கள் நம்முன் வந்து நிற்காது என்பதை இந்த அஃபூவ் என்ற பெயர் கூறுகிறது.
💖கஃபூர் என்பது மன்னித்தல், மறைத்தல் என்கிற அர்த்தத்தை கொண்டது.
💖அல்லாஹ்விடம் நாம் தவ்பா செய்தால் நம்மை மன்னிப்பான், நம் பாவங்களை மறைப்பான், அதை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்த மாட்டான் என்ற அர்த்தத்தை கஃபூர் என்பது தருகிறது.
💖கஃபூர் என்கிற பெயரின் அதிகப்படியான அர்த்தத்தை தரக்கூடியது கஃப்பார் என்பது.
💖அதிகமதிகம் கஃபூர் ஆக இருப்பவன் கஃப்பார். மன்னிப்பவன் மறைப்பவன்.
💖தவ்வாப் என்றால் அல்லாஹ் தன் அடியார்களின் தவ்பாக்களை ஏற்றுக் கொள்பவன் என்பது அர்த்தமாகும்.
👆👆
இந்த நான்கு பெயர்களும் நமக்கு மிகப்பெரிய ஆறுதலாகும்.
💖இன்னும் அல்லாஹ் அர்ரஹ்மான், அர்ரஹீம் என்பதன் பிரதிபலிப்பாகவே இந்த நான்கு பெயர்களையும் நாம் பார்க்கிறோம்.
💖இந்த உலகத்தில் பலவீனமாக படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய பாவங்களை வெளிப்படுத்தி, அல்லது அந்த பாவங்களை கொண்டு இந்த உலகத்தில் தண்டிக்க நாடினால், அல்லது பாவங்கள் மன்னிக்கப்படும் என்கிற வாசலை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால், நம்முடைய நிலைமை என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ❗️
💖அல்லாஹ்வை நாம் அனைத்தையும் விட அதிகமாகவே நேசிக்க வேண்டும். இந்த நான்கு பெயர்களும் படிக்கின்ற போது அந்த நேசம் வரும்.
💖அல்லாஹ்வை இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட விரும்புவோம் ; நேசிப்போம்; ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்,
👇👇👇
🌼قلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
🌼(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
📕(அல்குர்ஆன் 39:53)
💖நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான் எந்த அளவுக்கு என்றால் நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்;
🌸ان الله يقبل التوبه العبودي ما لم يغرغر.
👆ஒரு அடியானுடைய உயிர் அவனுடைய தொண்டை குழியை அடைகிற வரைக்கும் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.
நபி ﷺ அவர்கள் சொல்கிறார்கள்;
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்து இஸ்திக்பார் செய்யுங்கள்.
நான் ஒரு நாளைக்கு நூறு தடவை தவ்பா செய்கிறேன்.
💖முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வுடைய மிக நேசத்திற்குரிய நபி ﷺ, நபிமார்களுக்கெல்லாம் தலைவர், சுவர்க்கத்தில் முதலாவதாக நுழையக் கூடியவர், அவர்கள் இப்படி சொல்லுகிறார்கள் என்றால் நம்மைப் போன்ற மனிதர்கள் பாவமன்னிப்பு கேட்கும் விஷயத்தில் போட்டி போட வேண்டும்❗️
💖அல்லாஹ் முஃமின்களை பார்த்து சொல்கிறான்.
👇👇
🌼وسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ
🌼உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.
📕(அல்குர்ஆன் : 3:133)
🎯அல்லாஹ் , அஃபூவ், கஃபூர், கஃப்பார், தவ்வாப் என்று அறிகின்ற ஒரு அடியார் நிச்சயமாக அல்லாஹ்வை நேசிப்பான்.
🎯அல்லாஹ்வை பயப்படுவான்; அல்லாஹ்வுக்கு மாறு செய்ய விரும்பமாட்டான்; அல்லாஹ்வுடைய திருப்தி பெற்றுக்கொண்ட நிலையில் அவனை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவான்.
🤲அல்லாஹ்வுடைய இந்தப் பெயர்களை புரிந்து அவனை நேசிக்க கூடியவர்களாகவும், அவனுக்கு அஞ்சி வாழக் கூடியவர்களாகவும் நம்மை ஆக்கி அருள்வானாக ஆமீன்.🤲

