top of page
14. Ar Razzaq.jpg
15. Ar Raaziq.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠பாகம் 9

🌷அர்ரஸ்ஸாக் ➖ الرزاق

🌷அர்ராஸிக் ➖ الرازق

🌼ரஸ்ஸாக் என்ற பெயர் குர்ஆனில், (51: 58) வசனத்தில் இடம் பெற்றிருக்கிறது:

🌿إنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِين

🌿நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.

📕 (அல்குர்ஆன் 51:58)

🌿"خير الرازقين"

🌿 என  ஐந்து இடங்களில் அவனது பெயர் பன்மையாக இடம்பெற்றிருக்கிறது .

🌼ஹதீஸிலும் , ரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது.

🔆 ரஸ்ஸாக் ➖ அதிகமாக ரிஸ்குகளை வழங்குபவன்.

🔆ராஸிக் ➖ ரிஸ்க் வழங்குபவன்.

🌼 படைப்பினங்களுக்குரிய ரிஸ்க்கை பொறுப்பெடுத்து, அந்த ரிஸ்கை வழங்குபவன் தான் ராஸிக், ரஸ்ஸாக்.

🌹இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில்,

🌿۞وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزۡقُهَا وَيَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَمُسۡتَوۡدَعَهَاۚ كُلّٞ فِي كِتَٰبٖ مُّبِينٖ

🌿இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

📕(அல்குர்ஆன் 11:6)

🌼பூமியில் உள்ள எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அதற்குரிய ரிஸ்க் அல்லாஹ்விடம் இல்லாமல் இல்லை என்று வலியுறுத்தி சொல்கிறான்

🌼எல்லா படைப்புகளுடைய ரிஸ்க்கும் அல்லாஹ்விடத்தில் இருக்கிறது. அதற்கு ரிஸ்க் வழங்குகிற பொறுப்பு அல்லாஹ் மீது சாட்டப்பட்டிருக்கிறது என்பதை அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறான்.

மேலும்,

🌿وكَأَيِّن مِّن دَآبَّةٖ لَّا تَحۡمِلُ رِزۡقَهَا ٱللَّهُ يَرۡزُقُهَا وَإِيَّاكُمۡۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

🌿அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

📕(அல்குர்ஆன் -29:60)

🌹دابة

 🌹"என்றால்  பூமியில் வாழ கூடியவை .

(மனிதன், மிருகம், விலங்கு, பறவைகள்)

இவை அனைத்துக்கும் அல்லாஹ் ரிஸ்க் வழங்குவதாக இந்த வசனத்தில் சொல்கிறான்.

🌼மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

🌿وٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ

🌿இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.

📕(அல்குர்ஆன் 2:212)

🌿انَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًا بَصِيْرًا‏ 

🌿நிச்சயமாக உங்கள் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்தும்) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், செயலை உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்கும் தக்கவாறு கொடுக்கிறான்.)

📕 (அல்குர்ஆன் 17:30)

🌼அவன் நாடியவர்களுக்கு குறைத்தும் கொடுப்பான், நாடியவர்களுக்கு அளவில்லாமல் ரிஸ்க்கை கொடுப்பான் என்று சொல்கிறான்.

🌼எனவே இந்த ரிஸ்க்கை அல்லாஹுத்தஆலா பொறுப்பெடுத்து இருக்கிறான்.

🎯அந்த ரிஸ்கை உண்மையிலேயே வழங்குபவன் அல்லாஹ் தான் என்பதை இந்த

அர்ராஸிக், அர்ரஸ்ஸாக் என்ற பெயர்கள் உணர்த்துகிறது.

📜இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ரிஸ்க்கை இரண்டாக பிரித்து சொல்கிறார்கள்.

1⃣"رزق عام"

 2⃣"رزق خاص"

 💚"رزق عام"

💚ரிஸ்குன் ஆம் ➖ என்றால் பொதுவான ரிஸ்க்.

இதனை- ரிஸ்குன் அப்தான் என்றும் சொல்வார்கள். இதன் பொருள் உடல் வளர்வதற்கான ரிஸ்க் என்பதாகும்.

இந்த வகை ரிஸ்க்கை அல்லாஹு தஆலா

🍉நல்லவர்களுக்கு,  கெட்டவர்களுக்கு,

🍉மூமின்களுக்கு , காபிர்களுக்கு என

🍉உலகத்தில் வாழ்கின்ற எல்லோருக்கும் கொடுப்பான்.

💜"رزق خاص"

💜ரிஸ்க்குன் ஃகாஸ் ➖என்பது மூமின்களுக்கு மட்டுமே அல்லாஹுதஆலா கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

🍇அவை இல்ம், ஈமான், ஹலாலானவற்றை மட்டுமே உண்ண வேண்டும், ஹலாலாக வாழ வேண்டும் என்ற உணர்வு.

🍇இந்த ரிஸ்க் மூஃமின்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை குர்ஆன் நமக்கு உணர்த்துகிறது.

🍇இது கிடைப்பவர்கள் தான் பெரிய பாக்கியசாலியாக இருக்கிறார்கள்.

🎯எனவே மறுமையில் கிடைக்கக்கூடிய ரிஸ்க்கை தவறவிட்டு விட்டு, உலக ரிஸ்கிலே தன்னை அழித்துக் கொள்ளக் கூடியவர்கள், அதற்காக தங்களை அதிகமாக ஈடுபடுத்த கூடியவர்களை அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே எச்சரிக்கை செய்திருக்கின்றான்.

🌸எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே,

🔆அர்ரஸ்ஸாக்🔆

🔆அர்ராஸிக்🔆

என்பதை திரும்பத் திரும்ப படித்து, இதன் பொருளை  சரியாக நாம் புரிந்து கொள்வோமாக இருந்தால்,

🍓வாழ்க்கையில் மன உளைச்சல்வராது,

🍓வாழ்க்கையில் பொறாமை வராது,

🎯 மற்றவருக்கு அல்லாஹ் ஒன்றை கொடுக்கும்போது அல்லாஹ் அவனுக்கு எழுதியதை கொடுக்கிறான், எனக்கும் அல்லாஹ் எழுதியதை தருவான் என்ற உணர்வு நமக்கு வரும்.

🎯நிச்சயமாக அல்லாஹுதஆலா நமக்கு எழுதிய ரிஸ்க்கை தராமல் நாம் இந்த உலகத்தை விட்டு போகமாட்டோம்.

🎯அல்லாஹ் ஒன்றை தரக்கூடாது என்று தடுத்துவிட்டால், அதனை தருவதற்கு யாரும் இல்லை என்ற அந்த நம்பிக்கையும் அர்ரஸ்ஸாக்,

அர்ராஸிக் என்ற பெயர்களை படிக்கும்போது நமக்கு ஏற்படும்.

🤲அல்லாஹ்வின் இந்த திருநாமங்களை சரியாக புரிந்து அதை ஈமான் கொண்டு அதற்கு , ஏற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா நமக்கு தௌபிக் செய்வானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page