top of page
4. Ar Rahman.jpg
5. Ar Raheem.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 4

🌷الرحمن

🌷அர்ரஹ்மான் ➖அன்பு நிறைந்தவன்

🌷الرحيم

🌷அர்ரஹீம் ➖ அன்பை தருபவன்

💖அல்லாஹ்வின் திருநாமங்களைஅறிந்துமனனம் செய்வது நாம் சுவனம் செல்ல சிறந்த வழி.

🌹🍃அர்ரஹ்மான் என்ற வார்த்தை அல்குர்ஆனில் 57 இடத்தில் வந்திருக்கிறது.

🌹🍃 அர்ரஹீம் என்ற வார்த்தை அல்குர்ஆனில் 114 இடத்தில் வந்திருக்கிறது.

💖பொதுவாக அல்லாஹ்டைய ஒவ்வொரு பெயரிலும் ஒரு ஸிஃபத் (பண்பு) இருக்கிறது.

🌹ரஹ்மான், ரஹீம் இரண்டு பெயரும் "ரஹ்மத்" என்ற ஒரே ஸிஃபத்தை (பண்பை) கொண்டிருக்கிறது. அது அன்பு, கருணை, இரக்கம் என்கிற ஸிஃபத்.

🌹🍃அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் ஆரம்பிக்கும் போதே இந்த இரண்டு பெயர்களை முன்னிலை படுத்தி ஆரம்பிக்கிறான்.

🌸بسم الله الرحمن الرحيم.🌸

🌹ஒவ்வொரு சூராவை ஓதும் போதும் சூராவின் ஆரம்பத்தில் இந்த பெயர்களை ஓதி ஆரம்பிக்கிறோம்.

🌹ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த பெயர்களை ஓதி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறோம்.

🌹இரண்டு பெயர்களையும் ஒரு மனிதன் சரியாக புரிந்து கொண்டால் எல்லாவற்றையும் விட அதிகமாக அல்லாஹ்வை அவன் நேசிப்பான்.

🌹அல்லாஹ்வின் அன்பு கருணை இரக்கம் எவ்வளவு விசாலமானது என்பதை இந்த இரண்டு பெயர்களும் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

🌹அல்லாஹ் தன்னுடைய அன்பு இரக்கம் கருணையினால் தான் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் நமக்கு தந்திருக்கிறான்.

🌹நாம் பாவம் செய்யக்கூடியவர்கள், அதிலும் சில நேரம் அளவுகடந்து பாவங்கள் செய்கிறோம்.

🌹அப்படி பாவம் செய்யக் கூடிய நம்மை பார்த்து அல்லாஹ் அழைக்கிறான்:

☘️قلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌  اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌  اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏ 

☘️(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அன்பை கருனையை பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

📕 (அல்குர்ஆன்  39:53)

🌹அல்லாஹ்வின் அன்பும் கருணையும் இருப்பதினால் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

🌹அவனுக்கு அநீதி இழைக்கக் கூடிய ஒரு பாவம் செய்யக் கூடியவர்களுக்கும் அவருடைய அன்பும் கருணையும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

🌹அதே நேரத்தில் முஃமின்களுக்கும் விசேஷமான அன்பும் கருணையும் அல்லாஹ்விடம் இருந்து கிடைத்து கொண்டிருக்கிறது.

🌹மறுமையிலும் உங்களுக்கு அல்லாஹ்வுடைய அன்பும் கருணையும் இருக்கிறது.

🌹அல்லாஹ் தன் அன்பை பற்றி குர்ஆனில் கூறுகிறான்:

  وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ ‌

 என்னுடைய அன்பு எல்லா வஸ்துக்களிலும் சூழ்ந்து விசாலமாகியுள்ளது,

📕 (அல்குர்ஆன்  7:156)

 🌹என்னுடைய அன்பு எல்லாவற்றையும் வியாபித்து விட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்.

🎯எனவே ரஹ்மான் ரஹீம் என்ற பெயரை சொல்லும் போது அல்லாஹ்வின் அன்பை நாம் ஆதரவு வைக்க வேண்டும் அதில் நிராசை அடையக் கூடாது என்பதை உணர்த்துகிறது.

🌹அல்லாஹ்வின் அன்பு தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்👇🏼

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.)

அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா,சொல்லுங்கள்?" என்றார்கள். நாங்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது" என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்" என்று சொன்னார்கள்.

📕 (ஸஹீஹ் முஸ்லிம் : 5315)

🌸ரஹ்மான் ➖அன்பு நிறைந்தவன்

🌸ரஹீம் ➖அன்பு அள்ளிச் சொரிபவன்

🌸இரண்டு பெயர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால்;

❤️"ரஹ்மான் என்பது (அல்லாஹ்வுடைய தாத்தோடு தொடர்புடைய ஸிஃபத் ஆகும்) அல்லாஹ்விடம் இருக்கும் பண்பாகும்."

❤️ரஹீம் என்பது அடியார்களுக்கு அல்லாஹ் அன்பு கருணை காட்டுவதை உணர்த்துவதாகும்.

📌இனி 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மான்னிர் ரஹீம்' ஓதும் போது அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று இல்லாமல் 'அன்பு நிறைந்தவன்' 'அன்பை அள்ளி அள்ளி கொடுக்க கூடியவன்' என்பதை புரிந்து ஓதுவோமாக இருந்தால், அல்லாஹ்வின் மீது அன்பும் நெருக்கம் அதிகரிக்கும்.

🤲அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய அன்புக்கு உரியவளாக நம் அனைவரையும் ஆக்குவானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page