top of page
3. Ar Rabb.jpg

🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺

💠 பாகம் 3

🌷 அர்ரப் - الرب

🌸 அர்ரப் என்ற, இந்த திருநாமம் குர்ஆனில் 500 தடவைக்கும் அதிகமாக வந்துளளது.

🌸 அறிஞர்கள் அர்ரப் என்ற வார்த்தையிலிருந்து தான், தவ்ஹீது ருபூபிய்யா என்பதை அடையாளப்படுத்துகிறார்கள்.

📝 இமாம் இப்னு ஜரீர் அத் தபரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தன்னுடைய தப்ஸீரில் அர்ரப் என்ற வார்த்தைக்கு கூறுவதாவது,

💖அரபிகள் மத்தியில் ஒரு தலைவருக்கு கட்டுப்படக்கூடிய ஒரு வார்த்தைக்கு ரப் என்றும்,

💖சர்திருத்தக் கூடிய ஒருவருக்கு ரப் என்றும்,

💖ஒன்றுக்கு சொந்தக்காரராக ஒருவர் இருந்தால் அவரையும் ரப் என்று அழைக்கும் நடைமுறை இருந்திருக்கிறது.

📝 இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், அந்நிஹாயா என்ற புத்தகத்தில் கூறுவதாவது,

💖ரப் - என்பவன் ஆட்சி அதிகாரம் உள்ளவன், தலைவன், நிர்வகிப்பவன், பராமரிப்பவன், அருள்பாலிப்பவன் என்ற பல அர்த்தங்களை தரக்கூடியதாக இருக்கின்றது.

🔮 இந்த இரண்டு அறிஞர்களின் கூற்றுப்படி ரப் என்பது தலைவன், ஆட்சியாளன், நிர்வகிக்கக்கூடியவன், பராமரிக்க கூடியவன், அருள்பாலிப்பவன் போன்ற கருத்துக்களை நாம் அறியலாம்.

🔮 பிற்காலத்தில் வந்த அகீதா அறிஞர்கள் 'ரப்' என்ற வார்த்தைக்கு➖ தலைவன், ஆட்சியாளன், இல்லாமல் இருந்த ஒன்றை உருவாக்க கூடியவன் என்ற பொருள் தருவதாக கூறுகிறார்கள்.

🔮 அல்லாஹ்வை பொறுத்தவரை 'ரப்' என்ற வார்த்தைக்கு அவனே தலைவன் , ஆட்சி அதிகாரம் உள்ளவன், இல்லாமையில் இருந்து ஒன்றை உருவாக்க கூடியவன் என்று பொருள் தருவதாக நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

📌 உண்மையிலேயே ஒருவன் அல்லாஹ்வின் ரப் என்ற வார்த்தையை அறிந்திருந்தால் அல்லாஹ்(வுக்கு எதையும் யாரையும் இணையாக்காமல்) அல்லாஹ் ஒருவனையே வணங்குவான்.

🌸அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

👇

اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً  ‌ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ‏ 

☘️(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.

📕 (அல்குர்ஆன் : 21:92)

☘️அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

"யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் ﷺ அவர்களை இறைத்தூதராகவும், மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார்."

இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

📕 (ஸஹீஹ் முஸ்லிம் : 56)

📌எனவே அல்லாஹ்வை ரப்பாக நினைத்தால் தான் நாம் ஈமானின் சுவையை உணர முடியும், வணக்கத்தில் இக்லாஸ் வரும் என்பதை நாம் புரியலாம்.

🤲எனவே ரப் என்ற வார்த்தையை சரியான முறையில் உச்சரித்து மனப்பாடம் செய்ய அல்லாஹ் நமக்கு உதவி புரிவானாக.🤲

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page