
🌺 அஸ்மாவுல் ஹுஸ்னா🌺
💠 பாகம் 1
🌺 அறிமுகம் 🌺
🌷 வழங்குபவர்: ஷெய்க் முபாரக் மதனி PhD
🌹அல்லாஹ்வுடைய திருநாமங்களில் அறிவது முஸ்லீம்களின் மீது கடமையாக இருக்கிறது.
🌼ஈமான் கொள்ள வேண்டிய 6 அம்சங்களில் அல்லாஹ்வை ஈமான் கொள்வது முதன்மையானதும் மிக பிரதானமானதும் ஆகும்.
🌼அல்லாஹ்வை சரியான முறையில் ஈமான் கொள்ள வேண்டும் எனில் அல்லாஹ்வை அறிய வேண்டும்.
🌼அதனால்தான் அல்குர்ஆனில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அல்லாஹ்வை அறிய வேண்டும் என்பதை அல்லாஹு தஆலா வலியுறுத்துகிறான்.
🌹அல்லாஹ்வை பற்றிய அறிவு இன்றியமையாததாகும்.
🌹🍃இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு கிடைக்கின்ற மிகப் பெரிய பாக்கியம் அல்லாஹ்வின் அன்பு அவனுக்கு கிடைப்பது.
🌹🍃ஒரு மனிதன் அல்லாஹ்வை அறிய வேண்டும் என்றால் அதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன.
🌹🍃அந்த வழிமுறைகளில் மிக பிரதானமான ஒன்றுதான் அல்லாஹ்வின் திருநாமங்கள், அவனுடைய பண்புகளின் ஊடாக அல்லாஹ்வை அறிவது என்பது.
🌹அல்லாஹ்வின் திருநாமங்கள் எத்தனை என்பது அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிவான்.
❌அல்லாஹ்வின் பெயர்கள் தொண்ணூற்றொன்பது மட்டும் தான் என்பது பிழையான கருத்து.
💙 இறைத்தூதர் ﷺ அவர்கள் அறிவித்தார்கள்:
"நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது - நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
📕 (ஸஹீஹுல் புஹாரி 7392, 6410)
📌நபி ﷺ அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட 99 பெயர்களையும் தெரியுமா? என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் கூறுகின்றனர்.
💙 எனவே அல்லாஹ்வின் 99 திருநாமங்களையும் பொருளோடு மனனம் செய்ய இந்த குழுமத்தின் வாயிலாக நாம் அறிந்து மனனம் செய்து சுவர்க்கத்தை அடைய முயற்சி செய்வோம்.
❌அல்லாஹ்வின் திருநாமங்கள் தொடர்பாக சில பிழையான நடைமுறைகள் மக்கள் மத்தியில் இருக்கிறது.
🚫சிலர் அல்லாஹ்வின் பெயர்களை எதிலாவது எழுதி அதை வீடுகளில் தொங்க விட்டு அதன் மூலம் பரக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். சிலர் வாகனங்களிலும் அதை தொங்க விடுவார்கள், அதன் மூலம் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க வேண்டும், பரக்கத் வர வேண்டும் என்ற எண்ணங்கள் அவர்களுக்கு வருகிறது. இது ஒரு பிழையான தவறான நடைமுறை ஆகும்.
📌நபி ﷺ அவர்கள் இவ்வாறு செய்யவில்லை. சஹாபாக்கள் மத்தியில் ஒரு நடைமுறை இருக்கவில்லை. அதேபோன்று சஹாபாக்கள் பின்னால் வந்த மக்கள் இவ்வாறான ஒரு நடைமுறையை செய்யவில்லை. எனவே நாமும் இதை கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் .
📌மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நீங்கள் வீட்டில் ஏதாவது ஒன்றில் எழுதி தொங்க விட்டால் அதன் நிலை வேறு.
🚫காரில், வீட்டில், கடைகளில் தொங்க விட்டு அதன் மூலம் பலன் கிடைக்கும் என நினைக்கிறார்கள். இது பிழையான கருத்தாகும்.
🚫அல்லாஹ்வின் திருநாமங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தத்துவங்களை சொல்லி இதன் மூலம் இன்ன காரியம் நடைபெறும் இந்தப் பெயரைக் கொண்டும் இன்ன காரியம் நிறைவேறும் இன்னன நோய்க்கு குணம் கிடைக்கும் என்றெல்லாம் அல்லாஹ்வுடைய திருநாமங்களை அவர்கள் பிரித்து பார்த்து கொண்டிருப்பதை நாம் காணமுடிகிறது இதுவும் ஆதாரமற்ற, இஸ்லாம் அனுமதிக்காத விஷயமாக இருக்கிறது.
🤲 எனவே இவ்வாறான பிழையான நடைமுறைகளை அல்லாஹ்வுடைய அஸ்மாஉல் ஹுஸ்னா என்ற திருநாமங்கள் விஷயத்தில் நாம் தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்வுடைய திருநாமங்களை பொருளுணர்ந்து மனப்பாடம் செய்து, அது நம்மிடம் எதிர்பார்க்கக் கூடிய அந்த அம்சங்களை நம்முடைய வாழ்க்கையில் எடுத்து நடந்து, வெற்றி அடைய நாம் முயற்சிக்கவேண்டும். வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக 🤲

